என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மாயம்"

    • பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.
    • வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே சம்பந்தக்கார தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பார்த்திபன் (வயது 27). பட்டதாரி. இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனால் பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.

    இந்நிலையில் நேற்று வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் பார்த்திபனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பார்த்திபன் கிடைக்கவில்லை.

    இது குறித்து பார்த்திபனின் தாய் அன்பரசி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை தேடிவருகின்றனர்.

    • மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.
    • மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள வேங்கனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் மோகன்குமார் (வயது 20). இவர் புதுச்சேரியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    கடந்த மாதம் மோகன்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 20-ந்தேதி புறப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மோகன்குமாரின் தம்பி உடன் சென்று அவரை திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் ஊருக்கு சென்ற மோகன்குமார் அதன்பிறகு யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லை.இதையடுத்து புதுச்சேரியில் அவர் வேலை செய்யும் இடத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது மோகன்குமார் அங்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து மோகன்குமாரின் தந்தை தங்கதுரை கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மோகன்குமாரை தேடி வருகின்றனர்.

    • மனைவி போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே வேலைக்கு செல்வதாக கூறிசென்ற இளைஞர் ஒரு மாதமாக காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

    ஒடுகத்தூர் அருகே உள்ள கீழ்கொத்தூர், தண்டையான்கோட்டை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியானவர் விஜய் (வயது 24). இவருக்கு திருமணமாகி தேவையானி (22) என்ற மனைவி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். சென்ற அடுத்த நாள் முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டள்ளது.

    மேலும் இவரை பற்றி அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டுமென வேப்பங்குப்பம் போலீசாரிடம் தேவையானி நேற்று புகார் கொடுத்தார்.

    இதன் சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து கானாமல் போன அவரை தேடி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ஜீவா (வயது27). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 30-ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிப்போன விஸ்வநாதன், தனது மகனை உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் காணவில்லை.

    இதுகுறித்து தந்தை விஸ்வநாதன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணைக்காக வாலிபரை அழைத்ததால் திடீரென மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் ராஜபிரபு. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த செண்பகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருதரப்பினரும் சீர்வரிசை பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். மேலும் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு அளித்தனர்.

    அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் செண்பகா மீண்டும் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு சென்ற ராஜபிரபு அதன்பின்னர் மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்தநிலையில் அவர் திடீரென மாயமானார்.

    இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜபிரபுவை தேடி வருகின்றனர்.

    சம்பவத்தன்று நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    தேவதானப்பட்டி:

    ஜெயமங்கலம் அருகே உள்ள பள்ளிவாசல் வடக்குத் தெருவை சேர்ந்தவர் லிசானுல்ஹசன் (வயது 25). இவர் மதுரையில் ஏ.சி. மெக்கானிக் படிப்பை படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அக்கம் பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தந்தை ஜாகீர் உசேன் (55). ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலி பரை தேடி வருகின்றனர்.

    • பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
    • எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்கானி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ஜெயராஜ் (வயது19). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயராஜை தேடிவருகின்றனர்.

    • செல்வக்குமார் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார்.
    • கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூற தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகன் செல்வக்குமார் (வயது 23), விவசாயத்தில் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான கடந்த 18-ந் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது கோதண்ட பாணி, நீ வேலைக்கு செல்லவேண்டாம், கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறுநாள் காலை செல்வ க்குமாரை காணவி ல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்ய ப்பட்டி ருந்தது. காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அங்கும் அவர் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து கோத ண்டபாணி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போல செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

    • ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    புதிய பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடப்படும் காட்சிகள் சினிமாக்களில் இடம் பெற்றுள்ளது. அதே போல திருவண்ணாமலையிலும் நூதன திருட்டு அரங்கேறி உள்ளது.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோட்டில் தனியார் பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஷோரூமிற்கு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து டிப்-டாப் உடையில் வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கினார். அங்கிருந்த ஊழியர்களிடம் பைக் வாங்க வந்துள்ளேன் என்று கூறினார்.

    இதனை நம்பிய ஊழியர்கள் அந்த நபருக்கு புது பைக்குகளை காட்டினர். இதில் ஒரு புது பைக் பிடித்துப் போகவே அதனை ஓட்டி பார்ப்பதாக அந்த நபர் கூறினார். இதனால் ஊழியர்கள் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அவரிடம் கொடுத்தனர்.

    ஆனால் ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த நபர் பைக்கை ஓட்டி ஒத்திகை பார்ப்பதற்காக பைக்கை வெளியே ஓட்டி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை . இதனால் ஷோரூம் ஊழியர்கள் பைக்கை எடுத்து சென்ற நபரை தேடிச் சென்றனர்.

    பின்னர் இது குறித்து காரில் இருந்த டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாடகை கார் என்றும், காரில் வந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தனக்கு தெரியாது என்று டிரைவர் கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என டிரைவரிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் நான் புதுச்சேரியில் இருந்து வருகிறேன் எனக்கு இந்த வாலிபர் யார் என தெரியாது அவரிடம் செல்போன் கூட இல்லை எனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் போன் செய்து திருவண்ணாமலைக்கு சவாரி உள்ளது என கூறி இவரை எனது காரில் அனுப்பி வைத்தார். எனக்கு அந்த நபர் கார் வாடகை கூட கொடுக்கவில்லை என கூறினார்.

    இதனால் செய்வதறியாமல் தவித்த ஊழியர்கள் இது குறித்து ஷோரூம் உரிமையாளரிடம் நடந்த விவரங்களை பற்றி தெரிவித்தார்.

    மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் வந்து பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற வாலிபர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த லட்சுமி(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று மது அருந்திவந்த பாண்டிய ராஜன் தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் காலை வீட்டைவிட்டு வெளியே சென்ற பாண்டியராஜன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தம பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பாண்டி யராஜனை தேடிவருகின்ற னர்.

    • தந்தை போலீசில் புகார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி இவரது மகன் சிவா (வயது 37) இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி சிவா வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ராஜி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிவாவை தேடி வருகின்றனர்.

    • சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை.
    • போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் 3.5 அடி கொண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    அதன் பிறகு இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் இரவு ஊர்வலமாக எடுத்து வந்து ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கி கரைத்து உள்ளனர்.

    இந்த விநாயகர் சிலையை கரைக்க அந்தியூர் தாலுகா, வேம்பத்தி பொதிய மூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கர் (18) என்பவரும், அவருடன் மேகநாதன், தம்பிராஜ், வேங்கைராஜ், ராஜா, ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களும் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி பார்த்து உள்ளனர்.

    ஆனால் எங்கு தேடியும் சங்கர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம்? என்று கருதி உடன் வந்தவர்கள் ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் இரவு முழுவதும் சங்கரை தேடியுள்ளனர்.

    பின்னர் இன்று காலை முதல் ஆப்பக்கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் இறங்கி கரைக்கும் போது பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×