search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 176075"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். #Thirunavukkarasar #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் நேற்று தனித்தனியாக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர்.

    அப்போது, திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    அராஜகமாக, காட்டுமிராண்டித்தனமாக போலீசார் நடந்து இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் நடந்த போராட்டத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வரை அமைதியாக வந்துள்ளனர்.

    குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு போலீசார் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 12 பேர் இறந்துள்ளனர். ஜனநாயக நாட்டில் அறவழியில் நடந்த போராட்டத்திற்கு தீர்வு காணாமல் துப்பாக்கி குண்டுகள் மூலம் முடிவு கட்ட முயற்சி செய்து உள்ளனர். பாசிச ஆட்சி போல் இத்தனை பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு மூல காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறுகையில், “துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசு, காவல்துறை சேர்ந்து பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளது. காவல்துறை திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது. காக்கை, குருவிகளை போல், மனிதர்களை படுகொலை செய்து உள்ளனர். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.  #Thirunavukkarasar #SterliteProtest
    மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.#PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள 800-க்கும் கூடுதலான அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் இடை நிற்றலைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் சேராததற்கு அரசாங்கம் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாலும், கட்டமைப்பு வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததாலும் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

    தமிழகத்திலுள்ள பல அரசு பள்ளிகளில் கல்வித்தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருந்தாலும் கூட, அரசு பள்ளிகள் என்றால் அங்கு கல்வித் தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் பொதுப்புத்தியில் பதிவாகி விட்டது. இந்த மாயையை அகற்றவும், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு எதுவும் செய்யவில்லை.

    ஒரு மாணவர் கூட இல்லாத அரசு பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் தனியார் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், அவற்றில் இடம் கிடைக்காது என்று கூறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதற்குக் காரணம் அந்த பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருப்பது தான். அதே போன்ற வசதிகள் அரசு பள்ளிகளில் இருந்தால் அங்கும் மாணவர்கள் அதிகமாக சேருவார்கள். அவ்வாறு செய்ய ஆட்சியாளர்கள் தவறியதால் தான் அரசு பள்ளிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேரவில்லை. அரசு பள்ளிகளின் இன்றைய நிலைக்கு அரசு தான் காரணம் என்னும் நிலையில், அந்த பள்ளிகளை மூடி மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

    5 வயது நிறைந்த அனைத்துக் குழந்தைகளும் தொடக்கப் பள்ளியில் சேருவதை உறுதி செய்ய, அருகமைப் பள்ளி தத்துவத்தின்படி, ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் அரசுப் பள்ளி இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இப்போது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற இன்னும் கூடுதலாக அரசுத் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய நிலையில், இருக்கும் பள்ளிகளையும் மூடத் துடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும் 15க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூடவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற்றால் கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிடும். இது அனைவருக்கும், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது ஆகும். இந்த அநீதியை அனுமதிக்க முடியாது.

    எனவே, மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அந்த பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK #Ramadoss
    நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #NEETexam #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் சுமார் 25,000 மாணவா்கள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவா்களுக்கு 196 மதிப்பெண்கள் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்படுமானால் தமிழ் மொழியில் படித்த அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவ கல்லூாியில் சேருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறைவு.

    எனவே தமிழக அரசு, மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பிரதமரை சந்தித்து இந்த தவறான கேள்விகளுக்கான முழுமதிப்பெண்கள் தமிழகத்து மாணவா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #NEETexam #TTVDinakaran 
    ×