search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செலவு"

    ஜி.எஸ்.டி. குறித்து மக்கள் அறிந்து கொள்ள மத்திய அரசு விளம்பரத்துக்காக ரூ.132.38 கோடி செலவழித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GST #CentralGovt
    புதுடெல்லி:

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நாடு முழு வதும் கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது.

    ஜி.எஸ்.டி. குறித்து மக்கள் அறிந்து கொள்ள மத்திய அரசு விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்துக்காக ரூ.132.38 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பத்திரிகைகளில் செய்த விளம்பரம் மூலம் ரூ.126.93 கோடியும், வெளிப்புற ஊடகங்கள் மூலம் 5.44 கோடியும் செலவழிக்கப்பட்டது. #GST #CentralGovt
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. அவர்கள் பெரும்பாலும் வீண் செலவு வழிகளை அடைக்காமல் இருப்பார்கள். சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...

    போக்குவரத்துச் செலவை கூடியமட்டும் குறைக்க முயலுங்கள். ஒரே பகுதியில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள், வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விஷயம்.

    தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி., மின்விசிறி போன்றவற்றை அணைப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

    சில பெரும் நிறுவனங்கள், கடைகள், குறிப்பிட்ட காலத்தில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதைக் கவனித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிறிய கடைகளில் என்றில்லை, ஆச்சரியப்படுத்தும்வகையில், பெரிய கடைகளிலும் பேரம் பேசுவது சில நேரங்களில் பலன் கொடுக்கும். பேரம் பேச கவுரவம் பார்க்க வேண்டாம்.



    வெளியிடங்களில் சாப்பிடு வதைக் குறைத்துக்கொள்வது, பர்சுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

    திரையரங்கில் படம் பார்ப்பது செலவு பிடிக்கும் விஷயமாகிவரு கிறது. சிறிது காலம் பொறுத்திருந்தால், முறைப்படி இணையத்திலேயே பணம் செலுத்திப் பார்க்க முடியும்.

    ‘ஜிம்’முக்கு பணம் கட்டிவிட்டு, போகாமல் இருப்பதைவிட, வீட்டி லேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    பழையதாகிவிட்டது என்பதாலேயே ஒரு பொருளை தூக்கிப் போட்டுவிடாமல், அதிகபட்சம் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

    வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தனித்தனி செல்போன், அவற்றுக்கான செலவு தேவையா என யோசியுங்கள்.

    பணமாக எடுத்துக் கொடுப்பதைவிட, கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது நாம் அதிகம் செலவழித்துவிடுகிறோம். எனவே கிரெடிட் கார்டை பர்சை விட்டு வெளியே எடுப்பதை கூடியவரை தவிருங்கள். 
    மோடி 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.4343 கோடி செலவு செய்து இருப்பதற்கு நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். #ModiGovernment #Modi #Advertisement #Congress #Kushboo
    சென்னை:

    மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில்கல்சாலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கிழ் பிரதமர் நரேந்திரமோடி அரசு இதுவரை விளம்பரத்திற்கு செய்த செலவு எவ்வளவு என்று மனுதாக்கல் செய்து இருந்தார்.

    அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சக அலுவலகம் தெரிவித்த பதிலில் பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி.

    இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதற்கு நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    மோடி 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.4343 கோடி செலவு செய்து இருக்கிறார். காமராஜர் ஒவ்வொரு பைசாவையும் ஏழைகளின் கல்விக்காக செலவு செய்தார். மோடி அவரது சொந்த எக்காளத்தால் வீழ்ச்சி அடைவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Congress #Kushboo #Modi
    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி. #ModiGovernment #Modi #Advertisement
    மும்பை:

    மும்பையை சேர்ந்த தகவல் அறியும் சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி.

    இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ModiGovernment #Modi #Advertisement #Publicity
    ×