search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • ரெயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.
    • 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட புதிய ஈரடுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாபநாசம் ரயில்வே சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்திருந்தது.

    இந்த சாலையினை புதுப்பிக்க வலியுறுத்தி பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் பாபநாசம் வர்த்தக சங்கம் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பாபநாசம் ரயில்வே சாலைக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் கொண்ட ஈரடுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன், நெல்லை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி பாபநாசம் வர்த்தக சங்கத் தலைவர் குமார், தென்னக ரயில்வே கோட்ட முதல் நிலை ஒப்பந்தக்காரர் சுரேஷ் ரெட்டி ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே தென்மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது 39) இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மோட்டார் சைக்கிள் மூலமாக திருபுவனக்கு சென்று திரும்பி வருவார் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்பேரிலிருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
    • ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பினார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி(வயது 52)என்பதும் ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் கோகுல் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரோட்டோரமாக ஒருவர் இறந்து கிடந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர் .அவரது வாகனத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் கட்டிட தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்மகும்பல் அதிகாலை வாகனத்தின் ‘சைடு லாக்கை’ உடைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளனர்.
    • உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூரை சேர்ந்தவர் சத்தியசீலன். ஆட்டோ டிரைவர். இவர் தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.

    இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிகாலை வாகனத்தின் 'சைடு லாக்கை'உடைத்து திருடிச்செல்ல முயன்று ள்ளனர்.

    மற்றொருவர் அருகில் கிடந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் 'சைடு லாக்கை' உடைக்கும் போது சப்தம் கேட்டு அக்கம்ப க்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்று ள்ளனர்

    இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியு ள்ள தை கொண்டு வேளாங்க ண்ணிபோலீ சில் சத்திய சீலன் புகார் அளி த்தார். அதன் பேரில் போலீசா ர்விசாரணை நடத்தி அதிரா ம்பட்டி னத்தை சேர்ந்த ஹரிஹரன், பட்டுக்கோ ட்டையை சேர்ந்த முகமது ரபிக், முத்துப்பேட்டையை சேர்ந்த பர்வீஸ் அகமது ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.
    • எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது.

    குமாரபாளையம்:

    சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது31), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.

    ரங்கனூர் பிரிவில் இருந்து வலது பக்கமாக திரும்பும் போது, எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட அவர்,சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த இருதயராஜ்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாகனம் மோதி மான் பலியானார்.
    • பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ராயபாளையம், சமத்து வபுரம், சிவரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இரை தேடி வரும் மான்கள் நாய்களால் வேட்டையாட பட்டும், சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ராயபாளையம் கிராமத்தில் இரை தேடி வந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானை அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி கடித்தன. இதை கண்ட கிராம மக்கள் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டனர். பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

    இதுபற்றி சாப்டூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனவர் ஜெய்சங்கர் தலை மையிலான வனத்துறை அலுவலர்கள் வந்து கயமடைந்த மானுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் திருமங்கலம் -விருதுநகர் 4 வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஊரணியில் தண்ணீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்ற ஒரு புள்ளி மான் விபத்தில் பலியானது. இந்த புள்ளிமான் விருதுநகரில் இருந்து மதுரைக்குச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இது பற்றி தகவல் கிடைத்தது. சாப்டூர் வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் மானை மீட்டு பிேரத பரிசோதனைக்கு கொண்டுச்சென்றனர்.

    திருமங்கலம் அருகே ஒரே நாளில் நாய்கள் கடித்து ஆண் புள்ளிமான் காயமடைந்த சம்பவமும், வாகன விபத்தில் சிக்கி பெண் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் திருமங்கலம் பகுதியில் வனச்சரகம் அமைத்து வனவிலங்குகளை காக்க வேண்டும் என்று கூறினர்.

    • வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
    • அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னம நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ஹரிகிருஷ்ணன்,(30). இவரது தம்பி கவுதம், (29). கூலித் தொழிலாளியான இவர்கள் வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹரிகி ருஷ்ணன், கவுதம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இவரது தம்பி கவுதம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளிமேடு கிராம சாலைகள் கப்பி சாலையாகவும், மண் சாலையாகவும் உள்ளதால் கிராமக்கள் பல ஆண்டுகளாக அவதியுற்று வருகின்றனர்.
    • மழைநீர் தேங்கி நின்று சேறும் சகதியுமாக உள்ளதால் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராமுத்திரகோட்டை கீழத்தெரு, கீழ அம்பலகாரதெரு மற்றும் கள்ளிமேடு கிராம சாலைகள் கப்பி சாலையாகவும், மண் சாலையாகவும் உள்ளதால் கிராமவாசிகள் பல ஆண்டுகளாக அவதியுற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழை காலங்களில் தெரு சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக உள்ளதால் தெருவாசிகள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன.
    • நகரில் சுற்றித்திரிந்த நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்ற நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், சீர்காழி நகரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. பப்ளிக் பார் அனிமல் அமைப்பினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் நகரில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். கருத்தடைக்கு பின்னர் மீண்டும் அந்த நாய்கள் சீர்காழி நகரப் பகுதியில் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார்.
    • அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது45). பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம்(52). கூலி தொழிலாளி. இருவ ரும் நேற்று மதியம் கிரேன் வண்டியில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    வாகனத்தில் இருந்த டிரைவர் உள்பட 3பேரும் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது.
    • வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரித்து செல்லப்படுகிறது. அத்துடன் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு மூலமாக கூட்டி சுத்தம் செய்து வருகின்றனர்.

    சாலைகள் மிகவும் தூய்மையாக இருக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது. இதன் விலை ரூ.24 லட்சம் ஆகும். இந்த வாகனம் சாலையில் செல்லும் போது அதில் உள்ள எந்திரத்தை இயக்கினால் எந்திரத்தின் முன்பகுதியில் உள்ள சீமாறு போன்ற எந்திரம், சாலைப்பகுதியில் உள்ள குப்பை தூசிகளை சேகரித்து கொடுக்கும். இதை வாகனத்தில் உள்ள எந்திரம் உள் இழுத்து கொள்ளும். சாலைகளின் நடுவில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மையத்தடுப்புகளை ஒட்டி கீழ்பகுதியில் மண் சேர்ந்திருக்கும். அந்த மண், தூசியையும் இந்த எந்திரம் இழுத்து வந்து விடும்.

    இந்த எந்திரத்தில் உள்ள டேங்கில் மண், தூசி போன்றவை சேர்ந்ததும், அதை வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம். இந்த நவீன எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் மோகன், உதவிப்பொறியாளர் மாலா ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த வாகனத்தை இயக்குவது எப்படி என்பது குறித்து, வாகனத்தை விற்பனை செய்துள்ள நிறுவனத்தினர், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். அதன் பிறகு இந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. 

    ×