search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • பேராவூரணி வாரச்சந்தை ஆகிய முக்கிய பகுதிகளாக விளங்கி வரும் சூழ்நிலையில் சாலையில் செல்லும் வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.
    • எதிரே வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படுகின்றன.

    பேராவூரணி:

    பேராவூரணியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்து புதிய சாலைகள் அமைக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து, சாலை நடுவே சென்டர் மீடியன் இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த முதன்மைச் சாலையில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, நீலகண்ட பிள்ளையார் கோவில், பள்ளிவாசல், பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பேராவூரணி வாரச்சந்தை ஆகிய முக்கிய பகுதிகளாக விளங்கி வரும் சூழ்நிலையில் சாலையில் செல்லும் வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.

    மேலும் சென்டர் மீடியன் இடைவெளியில் சாலை பிரிவு உள்ளது. இந்த சாலை பிரிவில் வாகனங்கள் குறுக்கே சென்று முதன்மைச்சாலையில் இணையும்போது எதிரே வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படுகின்றன.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை ஆய்வு செய்து விபத்து ஏற்படாத வகையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கவும், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பேராவூரணி 11 -வது வார்டு கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஷ்குமார் பேராவூரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், செயல் அலுவலர் பழனிவேல் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.

    • இரு சக்கர வாகனங்கள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 38). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (40) என்பவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றனர். பாரப்பத்தி பகுதியில் சென்றபோது கியாஸ் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வெள்ளைச்சாமி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுபற்றி தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
    • பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு உரிய வயதுக்கு பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சாலை விதிகளுக்கு புறம்பாக வயது குறைந்த சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்கின்றனர். அதுவும் தாறுமாறாக வேகமாக ஓட்டி செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் பயத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சிறுவர்கள் போட்டி போட்டு கொண்டு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இதில் சிறுவர்கள் பாதிப்படுவது மட்டுமின்றி எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். மேலும் சிறுவர்களில் பலர் முறைப்படி டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் பயணிக்கின்றனர். இந்த செயல் மோட்டார் சட்டம் படி குற்றமாகும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி செல்வதால் பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு உரிய வயதுக்கு பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதே ப்போல் நன்னிலம்பகுதியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    • நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க முடியும்.
    • சம்பவ இடத்தில் உள்ள ரத்தகறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சூடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்திலேயே உடனடியாக பரிசோதிக்க முடியும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டுக்காக குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தமிழக முதல்-அமைச்சர், திருப்பூர் மாநகரம் உள்பட 5 மாநகரங்களுக்கும், 8 மாவட்டங்களுக்கும் வழங்கியுள்ளார்.

    திருப்பூர் மாநகருக்கு வழங்கப்பட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க முடியும். சம்பவ இடத்தில் உள்ள ரத்தகறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சூடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்திலேயே உடனடியாக பரிசோதிக்க முடியும்.

    குற்றம் நடந்த இடத்தில், அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாள்வதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுத்துதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவகையில் ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து குற்றத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த வாகனத்தில் தடய அறிவியல் உதவி இயக்குனர் பணியில் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உசிலம்பட்டி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70).

    இவர் அேத பகுதியில் உள்ள கல்லூரி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சீனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காரின் இடிபாடுக்குள் சிக்கி பாக்கியராணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • கணவர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மகன் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பாபநாசம்:

    திருச்சி பிச்சாண்டவர் கோயில் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஜவகர்லால்நேரு. இவரது மனைவி பாக்கிய ராணி (வயது 65). இந்நிலையில் இன்று காலை ஜவஹர்லால் நேரு தனது மனைவி பாக்கியராணி மற்றும் மகன், மருமகள், பேர குழந்தைகளுடன் ஒரு காரில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு புறப்பட்டார்.‌ காரில் 6 பேர் இருந்தனர்.

    அந்த கார் தஞ்சை அருகே உள்ள நெடார் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக காரும், ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்தப் பயங்கர விபத்தில் கார் ,ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. காரின் இடிபாடுக்குள் சிக்கி பாக்கியராணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது மகன் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். காரில் இருந்த மற்ற 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வேதிதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாக்கியராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஜவஹர்லால் நேரு உள்ளிட்டஇரண்டு பேரையும் மீட்டு சிகிச்சை க்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயமடைந்த மூன்று பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தஞ்சை -கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வாகனம் மோதி முதியவர்கள் பலியானார்.
    • டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் காலனியை சேர்ந்தவர் பிள்ளையார் பாண்டி(78). இவர் தேனீர் அருந்துவதற்காக மதுரை-ராஜபாளையம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(80). இவர் வடக்கு காலனி பகுதியில் உள்ள உறவினரை பார்த்து விட்டு திருமங்கலம்- கொல்லம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    எம்.சுப்புலாபுரம் விநாயகர் கோவில் எதிரே நடந்து வந்தபோது சலுப்பபட்டியை சேர்ந்த கோபால்(50) ஒட்டி வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் ஈஸ்வரனை ஆட்டோ மூலம் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈஸ்வரன் மகன் சீனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கோபால் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.
    • பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினரும் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பலஆண்டுகளாக போராடி தற்பொழுதுதான் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆலங்காடு கடைசி வீதி மேடு பகுதியாக உள்ளதால் கழிவு நீர் செல்ல ஏதுவாக தனியார் இடத்தின் வழியாக குழாய் அமைத்து கழிவுநீரை கொண்டு செல்ல மாநாகராட்சி மூலம் முடிவு செய்து அதற்கான பணிகளும் நேற்று தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் மூலமாக குழாய் பதிக்க குழி தோண்டிய போது இதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நடுவே நிறுத்தினார்கள். இதனால் பணி நிறுத்தப்பட்டது.இதனால் அப்பகுதி பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாச்சலம் தலைமையில் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    இடையூறாக நிறுத்திய வாகனங்களை எடுத்து செல்லமுடியாத அளவிற்கு பொதுமக்களும் தங்கள் வாகனங்களை நிறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் உடனடியாக வாகனங்களை எடுத்து பணி செய்யவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.இதனை தொடர்ந்து வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக எடுத்தார்கள். பின்பு பணி தொடங்கியது.

    • புதிதாக போடப்பட்ட சாலை சற்று உயரமாக உள்ளதால் பல வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றன.
    • புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்ணகி நகர் சாலையில் புதிதாக போடப்பட்ட சாலை சற்று உயரமாக உள்ளதால் பல வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றன.இந்த நிலையில் அதிக மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று கண்ணகி நகர் சாலையில் ஏறும் போது அதிக பாரத்தால் ஏற முடியாமல் பழுதடைந்து நின்றது. இதனால் புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 727 பள்ளி வாகனங்கள் ஆய்வு கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சேக் முகம்மது, ஆய்வாளா்கள் செந்தில்குமாா், பத்மபிரியா, கேணிக்கரை போலீஸ் ஆய்வாளா் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை இணைந்து பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 727 பள்ளி வாகனங்கள் உள்ளது. அந்த வாகனங்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நிறுத்தப்பட்டு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    இதில் வாகனங்களுடைய அவரச கால கதவு, வாகன இருக்கைகள், வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டியில் மருந்துகள், வாகனத்தின் படிக்கட்டுகள், வாகனத்தின் முன், பின் பள்ளி வாகனம் என்ற வாசகம், வாகனத்தின் பக்கவாட்டில் பள்ளியினுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண், சரக காவல் தொலைபேசி எண், வட்டாரப்போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண் எழுதப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு நடந்தது.

    இந்த ஆய்வின் போது குறைபாடுகள் உடைய பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டு 15 வாகனங்கள் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதனை சரி செய்த பின்பு தான் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும்.

    முன்னதாக பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கான சாலை விதிகள் குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.ஓட்டுநா்களுக்கான கண் சிகிச்சை முகாமையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தாா்.

    வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சேக் முகம்மது, ஆய்வாளா்கள் செந்தில்குமாா், பத்மபிரியா, கேணிக்கரை போலீஸ் ஆய்வாளா் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனா்.

    • ராசிபுரம் அருகே அடையாளம் தெரியாதவர் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது60). இவர் ராசிபுரம் அருகே உள்ள பட்டணத்தில் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஓட்டலில் வேலையை முடித்துக்கொண்டு டவுன் பஸ்சில் வீட்டுக்குச் சென்றார்.

    ஆண்டகளூர் கேட் அருகே உள்ள சக்தி நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் வீட்டுக்கு செல்வதற்காக ரோட்டை கடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் இறந்த கந்தசாமிக்கு பழனியம்மாள் (55) என்ற மனைவியும் ரேவதி (30), மஞ்சுளா (28) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 

    • கூலித்தொழிலாளியை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்து.
    • ஓலப்பாளையம் அருகே வாகனம் மோதி பெண் பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் எல்லைமேடு பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து திரும்ப ஓலப்பாளையம் வீட்டிற்கு மோகனூர்- பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. மாரியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×