search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது
    • பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்கள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது.

    கோடை விடுமுறைக்குப் பிறகு தற்போது பள்ளி கள் திறக்கப் பட்டது. இதை யடுத்து இன்று நாகர்கோ வில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில் இன்று நடந்தது. இதையடுத்து இன்று காலை முதலே பள்ளிகளில் இருந்து வாகனங்கள் கன்கார்டியா பள்ளி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதை வட்டார போக்குவரத்து அதிகாரி சசி தலைமையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு பணியை கலெக்டர் அரவிந்த் நேரில் வந்து பார்வையிட்டார். பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டுகள் அவசரகால பாதைகள் இருக்கைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டிரைவரின் இருக்கைகள் தனி கேபினில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா என்பதையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதிகாலை தொடங்கிய ஆய்வு மாலை வரை நடந்தது.

    ஆய்வின் போது ஒரு சில வாகனங்களில் சில குறைபாடுகள் இருந்தது தெரிய வந்தது.அந்த குறை பாடுகளை உடனடியாக சரிசெய்ய டிரைவர்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தி னர். ஆய்வின் போது தீ விபத்து ஏற்பட்டால் பள்ளி வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவி மூலம் தீயை எப்படி அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் டிரைவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:- பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்கள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். வீடுகளிலிருந்து இருந்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும்போதும் சரி பள்ளிகளில் இருந்து மாணவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் போதும் சரி கவனமாக அழைத்து செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து டிரைவர்கள் வாகனம் ஓட்ட வேண்டும்.

    பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.பள்ளியில் இருந்து அந்த வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.தற்போது 341 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.இதில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை, அவசர பாதை, படிக்கட்டு கள் உள்பட அனைத்தும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். தகுதி இல்லாத வாகனங்க ளின் உரிமைகள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, லட்சுமிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருவன். இவரது மனைவி சம்பாள் (வயது 60).

    சவம்பத்தன்று சம்பாள் வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிவிப்பு
    • கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

    இதையடுத்து பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் ( 17-ந்தேதி ) நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

    இது குறித்து நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி வாகனங்களுக்கான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2012 - ன்படி வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து பள்ளி வாகனங்களையும் மாவட்ட அளவிலான சிறப்பு குழு பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து பொதுச்சாலையில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அலுவலக எல்லைக்குட்பட்ட கல்வி நிலையங்கள் தங்கள் பள்ளி வாகனங்களை வருகிற 17-ந்தேதி காலை 10 மணியளவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் மேற்பார்வை அலுவலர், குழு உறுப்பினர், சார் ஆட்சியர், நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் இயக்க ஊர்தி ஆய்வாளர் முன்னி லையில் தவறாது ஆஜர்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடையாளம் தெரியாத வாகனம் வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • அப்பநாயக்கன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள சிறுகுளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி மீனாட்சி (65). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீனாட்சி மீது மோதி விட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன.
    • நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்தை தேடி சென்ற நிலை மாறிவிட்டது. நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கிராமப்புற மக்கள் பயன்படுத்த வசதியாக, நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனம், மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், மங்கலம், சின்ன மருதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும், 32.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் எரிவாயு தகன மேடை வாகனம் பயன்பாட்டுக்கு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    • பலத்த காயம் அடைந்த முதியவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி என்ற அலிகான் (வயது 58), பத்மனாபபுரம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்.

    இவர் அழகியமண்டபம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செய்யது அலி என்ற அலிகான் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவரது மகன் முகம்மது சர்ஜுன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    இறுதி ஊர்வலத்துக்காக சடலத்துடன் சவப்பெட்டி வானத்தில் இணைக்கப்பட்டிருந்தது தெரியாமல், வாகனத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் இருக்கும் லாகியூபாகியூ பகுதியில் உள்ள மருத்துவமனையில் 80 வயது முதியவர் மரணமடையவே அவரது சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் அருகிலுள்ள அவரது ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தில் வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 40 வயதுமிக்க நபர், சாவியுடன் வாகனம் நின்றிருந்ததை பார்த்ததும், வானத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார். வாகனம் மற்றும் சடலத்தை காணததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    40 நிமிட தேடுதல் வேட்டைக்கு பின்னர் நெடுஞ்சாலையில் வானத்தை மடக்கிப்பிடித்த போலீசார் சடலத்தை மீட்டனர். வாகனத்தை திருடிய அந்த நபரையும் கைது செய்தனர். 
    ×