search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்"

    2016-ம் ஆண்டு மெக்தாப் சிங் பக்‌ஷி என்ற சீக்கியர் இனவெறி தாக்குதலுக்கு ஆளான வழக்கில் அமெரிக்க விமானப்படை வீரர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். #SikhMan
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் நகரின் டுபோண்ட் சர்க்கிள் பகுதியில் 2016-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 21-ந் தேதி, மெக்தாப் சிங் பக்‌ஷி என்ற சீக்கியர் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.

    அவர் அந்தப் பகுதியில் தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அமெரிக்க விமானப்படை வீரரான திலான் மில்ஹாசன் என்பவர், அவரது தலைப்பாகையை பிடித்து இழுத்ததுடன், அவரது முகத்தில் சரமாரியாக குத்து விட்டார். இதில் அவர் மயங்கிச் சரிந்தார். இது இனவெறித்தாக்குதல் ஆகும்.

    இது தொடர்பாக மெக்தாப் சிங் பக்‌ஷி புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, திலான் மில்ஹாசனை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம், நவம்பர் 30-ந் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    இதேபோன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விலாசினி கணேஷ் என்ற பெண் சுகாதார திட்ட மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அங்கு உள்ள கோர்ட்டு 63 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.  #SikhMan
    ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்ததற்காக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன பெண் அஹெத் தமிமி தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    ஜெருசலேம்:

    பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தனது ராணுவ அடக்குமுறை மூலம் அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணுவத்தின் அத்துமீறல்களை எதிர்த்தும், அடக்குமுறைகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டின் அருகில் இருந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தனது உறவினரை தாக்குவதை கண்ட 15 வயது அஹெத் தமிமி என்ற பாலஸ்தீன சிறுமி ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீரர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைய, தமிமியும் ராணுவ வீரரை உதைத்து, கன்னத்தில் அறைந்தும் பதிலடி கொடுத்துள்ளார்.



    இந்த சம்பவத்தை தமிமியின் தாயார் வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீன் மக்கள் மத்தியில் தமிமி முக்கியத்துவம் பெற்றார்.

    இதையடுத்து, ராணுவ வீரரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தமிமிக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ராணுவ வீரரை தாக்கியதாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன சிறுமி தமிமி, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
    ×