search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177044"

    • அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது.
    • சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு. 

    தேவையான பொருட்கள்:

    கம்பு - 2 கப்

    வெல்லம் - ½ கப்

    தேங்காய்த் துருவல் - ¼ கப்

    முந்திரி (பொடிதாக நறுக்கியது) - ¼ கப்

    வெந்நீர் - தேவைக்கு ஏற்ப

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - தேவைக்கு

    ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

    வாழை இலை - 1

    செய்முறை:

    * கம்பை சுத்தப்படுத்தி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்தவும். பின்பு பொடியாக திரித்துக் கொள்ளவும். அந்த மாவை நன்றாக சலித்து எடுக்கவும்

    * அகலமான பாத்திரத்தில் கம்பு மாவைக் கொட்டி அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி, நறுக்கிய முந்திரிசேர்த்துக் கலக்கவும்.

    * சிறிதளவு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவில் தெளித்து மீண்டும் கிளறவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்

    * இப்போது மாவை சப்பாத்தியின் அளவுக்கேற்ப உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    * வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து ரொட்டியாகத் தட்டவும்

    * அதை தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: வெல்லக் கரைசலும், கம்பு மாவும் நன்றாகக் கலந்தால் மட்டுமே ரொட்டியில் இனிப்பு சரியாக இருக்கும். கம்பு மாவு முழுமையாக வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் நிதானமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    • சர்க்கரை நோயாளிகளும் இந்த தோசையை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    வெல்லம் (பொடித்தது) - 1 கப்,

    பச்சரிசி மாவு - கால் கப்,

    தேங்காய் (துருவியது) - கால் மூடி,

    நன்கு பழுத்த வாழைப்பழம் - 2

    ஏலக்காய் - 4,

    நெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    வாழைப்பழத்தை நன்றாக மசித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.

    பின்னர் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், வெல்லம் நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

    வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

    • மாலை 6 மணியை கடந்தும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் இருந்தது.
    • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.

    ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்தது.

    தேசிய கொடியை அவமதித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்கல் பரவியது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரி விடுத்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாதானம் அரசு ஆதிதிராவிடர்

    நலத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட இரண்டு பேரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    • பள்ளியில் தலைமை ஆசிரியை தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    சீர்காழி:

    74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிலையில் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகளை வழங்கினார்.

    அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.

    ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவு வரை தேசியக்கொடி பறந்தவாறு இருந்தது.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இடையே தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது குறித்து மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

    இரவு வரை தேசியக்கொடி இறக்கப்படாமல் பறந்த வாறு இருப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த அல்வாவை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,

    கருப்பட்டி - 175 கிராம்,

    முந்திரி - 30 கிராம்,

    திராட்சை - 30 கிராம்,

    பாதாம் - 20 கிராம்,

    பிஸ்தா - 20 கிராம்,

    நெய் - 100 கிராம்,

    தண்ணீர் - 200 மி.லி.,

    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,

    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
    • விருந்தினர் வந்தால் இதை செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை - ஒரு கப்,

    பால் - 3 கப்,

    சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,

    தேங்காய்பால் - ஒரு கப்.

    செய்முறை:

    பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

    பால் நன்றாக சுண்டியதும் ஆற வைக்கவும். (பால்கோவாவிற்கு முந்தைய பதம்)

    பால் நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால் சேர்த்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

    சூப்பரான இளநீர் டிலைட் ரெடி.

    • சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன.
    • இன்று சாக்லேட் சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 4 துண்டுகள்

    டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

    * பின் பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

    * இதேப் போன்று மற்ற இரண்டு பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * சூட்டில் சாக்லேட் உருகி பிரெட்டில் பரவியதும் எடுத்து விடவும்.

    * இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * இப்போது டேஸ்டியான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

    • தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
    • அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    தினைமாவு - ஒரு கப்

    நெய் - 1/2 கப்

    நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்

    நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்

    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும்.

    பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

    இப்போது சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.

    • குஜராத்தில் இந்த இனிப்பு மிகவும் பிரபலம்.
    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கெட்டி தயிர் - 250 ml

    சர்க்கரை - 1/4 கப்

    பாதாம் மற்றும் முந்திரி தலா - 10

    உப்பு சேர்க்காத பிஸ்தா - 6-8 நம்பர்ஸ்

    ஏலக்காய் - 2

    ஜாதிக்காய் பூ - 2 இழைகள்.

    செய்முறை:

    இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, தயிரை ஒரு மெல்லிய துணி கொண்டு மூட்டை கட்டி வடிகட்டவும்.

    பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தா மற்றும் ஜாதிக்காய் பூவை ஒன்றிரண்டாக(வாயில் தட்டு படும் அளவிற்கு) பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிருடன் சர்க்கரையை நன்றாக கலந்து கொள்ளும்வரை ஒரு கரண்டியால் அடித்துக் கொள்ளவும்.

    பின்னர் பொடி செய்து வைத்துள்ள முந்திரி பாதாம் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

    தேவைப்படும்போது ஜில்லென்று பரிமாறவும்.

    குறிப்புகள் :

    ஜாதிக்காய் பூ இல்லை எனில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்க்கலாம்.

    • இதில் புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.
    • வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது.

    தேவையான பொருட்கள்:

    பாதாம் - 100 கிராம்

    காய்ச்சிய பால் - ½ லிட்டர்

    சர்க்கரை - 6 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி

    குங்குமப்பூ - 1 கிராம்

    நெய் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும்.

    சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும்.

    பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும்.

    பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

    கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.

    இப்போது பாதாம் ஷிரோ தயார்.

    அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும்.

    • இந்த பொங்கல் செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த பால் பொங்கல் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - ஒரு கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    வெல்லம்/சர்க்கரை - 3/4 கப்

    பால் - 4 கப்

    முந்திரி - 20

    உலர் திராட்சை - 20

    ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.

    * விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

    * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து பொங்கலில் ஊற்ற வேண்டும்.

    * இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.

    குறிப்பு:

    * பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.

    * பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    * பால் பொங்கலை குக்கரிலும் செய்யலாம் அல்லது பாத்திரத்திலும் செய்யலாம்.

    • இந்த பொங்கல் டயட்டில் இருப்பர்களும் சாப்பிடலாம்.
    • சிறுதானியங்களில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    திணை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    கருப்பட்டி - 1 கப்

    முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

    உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்

    செய்முறை:

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.

    * பின் அதில் திணையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    * பின்பு 2 கப் தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, அரை கப் நீர் ஊற்றி, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும் வடிகட்டி வெந்து கொண்டிருக்கும் திணையில்ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

    * பின் அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

    * இறுதியில் ஒரு சிறு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாரித்து திணை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சூப்பரான திணை கருப்பட்டி பொங்கல் தயார்.

    ×