search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177044"

    • இந்த ஸ்நாக்ஸ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • இதை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை - அரை கப்

    கிரீம் பிஸ்கெட் - 4

    உருகிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை

    வேர்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    கிரீம் பிஸ்கெட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 4 டீஸ்பூன் உருகிய சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

    பிடித்த உருண்டைகளை பிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.

    இந்த உருண்டைகளை உருகிய டார்க் சாக்லேட்டில் நன்றாக முக்கி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இதை மீண்டும் 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான வேர்க்கடலை ஸ்டப்ஃடு சாக்லேட் பால்ஸ் ரெடி.

    • ரவையில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளியமுறையில் ரவா லட்டு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - ½ கிலோ

    சர்க்கரை - ½ கிலோ

    நெய் - 6 ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 50 கிராம்

    தேங்காய் - 1

    ஏலக்காய் - 12

    பால் - 250 மில்லி லிட்டர்

    செய்முறை:

    முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.

    அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும்.

    கைவிடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்

    பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும்.

    கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

    சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம்.

    சுவையான ரவா லட்டு தயார்.

    • பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் இந்த அல்வா மிகவும் பிரபலம்.
    • இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று அழைக்கின்றார்கள்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய கேரட் - 3 கப்

    சர்க்கரை தலை தட்டி - 1 கப்

    பால் கோவா - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    உலர் திராட்சை - 1 மேஜைக்கரண்டி

    முந்திரி - 1 மேஜைக்கரண்டி

    பாதாம் - 1 மேஜைக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி

    தேவையான அளவு - எண்ணெய்

    செய்முறை :

    * முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப்புக்கும் சிறிதளவு கூடுதலான நெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    * எண்ணெய் சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து வைக்கவும்.

    * அடுத்து அதில் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டுபச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். (இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.)

    * கேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.

    * சர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யை இதில் சேர்த்து கிளறி விடவும்.

    * மிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். (அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும்.)

    * இப்பொழுது சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார்.

    • சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை.
    • கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கம்பு மாவு - 2 கப்

    வெல்லம் - 2 கப்

    பாதாம் - 10

    ஏலக்காய் - 10

    பிஸ்தா - 10

    முந்திரி - 10

    திராட்சை - 10

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர்- தேவையான அளவு

    செய்முறை :

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

    • நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இன்று ஓணம் ஸ்பெஷல் நெய்யப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 ஆழாக்கு

    பொடித்த வெல்லம் - 3/4 ஆழாக்கு

    தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    செய்முறை

    * அரிசியை குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட்டு நன்கு கழுவி அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த விழுதில் தேங்காய் துருவல்+ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை சற்று தாராளமாக ஊற்றி காய்ந்ததும் (புகை வரக்கூடாது) அதில் வெல்லமாவைச்சேர்த்து வேக விடவும். ஒருபுறத்தில் நன்கு வெந்தவுடன் கம்பியால் குத்தி அடுத்த பக்கமாக நெய் அப்பத்தை திருப்பவும்.

    * பொன்னிறமான நெய்யப்பம் நைவேத்தியத்திற்கு ரெடி.

    • ஓணத்தின் ஸ்பெஷலே அடை பிரதமன் தான் .
    • அதனை மிக எளிமையாக செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    அரிசி அடை - 100 கிராம்

    வெல்லம் - 200 கிராம்

    நீர்த்த தேங்காய் பால் - 200 மிலி

    கெட்டியான தேங்காய் பால் -200 மிலி

    தேங்காய் துண்டுகள்- தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    சுக்குத் தூள் - தேவையான அளவு

    ஏலக்காய் பொடி - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    அரை கப் தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, அதிலுள்ள கசடுகளை நீக்கவும்.

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை வறுக்கவும்.

    அதே பாத்திரத்தில், மேலும் சிறிது நெய்யை சூடாக்கி, அடையை மிதமான அல்லது குறைந்த தீயில் 4-&5 நிமிடங்கள் வறுக்கவும்.

    இப்போது, வெல்லம் கரைத்த நீரை அடையில் சேர்த்து, மிதமான சூட்டில் அது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

    கெட்டியானவுடன், அதில் நீர்த்த தேங்காய் பாலைச் சேர்க்கவும். அது மீண்டும் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, கெட்டியான தேங்காய் பால், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.

    நன்றாகக் கலக்கிவிட்டதை உறுதி செய்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம்.

    இப்போது ருசியான அடை பிரதமன் ரெடி.

    • மக்கன் பேடாவை கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே செய்யலாம்.
    • இந்த இனிப்பை செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம்

    வெண்ணெய் - 1 ஸ்பூன்

    சமையல் சோடா - 1 சிட்டிகை

    எண்ணெய் - தேவையான அளவு

    பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

    பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பு - 1 ஸ்பூன்

    சாரைப் பருப்பு - 1 ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிதளவு

    சர்க்கரை பாகு செய்ய

    சர்க்கரை - 1 1/2 கப்

    தண்ணீர் - 1 கப்

    செய்முறை

    * மைதாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சமையல் சோடாவை போட்டு அதனுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல் வரும் வரை கலக்கவும்.

    * மைதாவுடன் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * இத்துடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

    * பூரணம் செய்வதற்கு பாதாம், முந்திரி, சாரப்பருப்பு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அளவிற்கு சர்க்கரை போட்டு அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு சிறு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகை தயாரித்துக் கொள்ளவும்.

    * பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    * உருண்டையின் நடுவில் லேசாக தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூடிவிடவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

    * பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து பரிமாறினால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்.

    • தினமும் ஒரு வேளை தினையை உணவாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
    • தினை அரிசி புரதசத்து அதிகம் உள்ளது. கொழுப்பு சத்து அறவே இல்லாதது.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் - அரை மூடி

    நெய் -அப்பம் பொரிக்க

    தினை - 200 கிராம்

    பொடித்த வெல்லம் - ஒரு கப்

    வாழைப்பழம் - 1

    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.

    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.

    குழிப்பணியாரக்கல்லில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான தினை தேங்காய்ப் பால் அப்பம் ரெடி.

    • நாளை விநாயகருக்கு நைவேத்தியமாக இந்த கொழுக்கட்டையை படைக்கலாம்.
    • இந்த கொழுக்கட்டை சத்தானது மற்றும் ஆரோக்கியமானது.

    தேவையான பொருட்கள்:

    மேல் மாவுக்கு:

    கொழுக்கட்டை மாவு - 1 கப்

    உப்பு - சிறிதளவு

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 2 கப்

    பூரணத்திற்கு:

    வாழைப்பழம் - 4

    தேங்காய் துருவல் - 1 கப்

    கண்டன்ஸ்டு மில்க் - ¾ கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    வாழைப் பழத்தை இரண்டாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் போட்டு ஆவியில் 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்து ஆறியதும் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் கொழுக்கட்டை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து வேக வைக்க வேண்டும்.

    பூரணம் தயாரிப்பதற்கு, ஒரு வாணலியில், நெய் ஊற்றி சூடானதும், அதில் துருவிய தேங்காயைப் போட்டு 7 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

    பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியின் சூட்டிலேயே வேக வைத்த வாழைப்பழம், கண்டன்ஸ்டு மில்க், நெய், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து பூரணத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

    இப்போது, மேல் மாவை எடுத்து, அதைச் சிறிய கிண்ணம் போல செய்ய வேண்டும். அதற்கு நடுவில் தயார் செய்து வைத்த பூரணத்தை சிறிது வைத்து, ஓரங்களை மடித்து விட வேண்டும்.

    இவ்வாறு விரும்பிய வடிவில் கொழுக்கட்டை தயார் செய்து மிதமான தீயில், ஆவியில் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ கொழுக்கட்டை தயார்.

    • நாளை விநாயகருக்கு நைவேத்தியத்திற்கு இந்த மோதகத்தை படைக்கலாம்.
    • இன்று இந்த மோதகம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - ¼ கப்

    ரவை - ¼ கப்

    எண்ணெய் - 1 டீஸ்பூன் (மாவு பிசைவதற்கு)

    உப்பு - சிறிதளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    பால்கோவா - 1 கப் (இனிப்பு சேர்த்தது)

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில், சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். பிசைந்த மாவின் மீது சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.

    பின்பு மீண்டும் ஒருமுறை மாவைப் பிசைய வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். உருண்டைகளை, சற்றுத் தடிமனான சப்பாத்தி போன்று திரட்டிக் கொள்ள வேண்டும்.

    அதற்கு நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார்செய்து வைத்திருக்கும் மோதகங்களைப் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இந்த மோதகம், ஒரு வாரம் வரை மொறு, மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • இந்த விநாயகர் சதுர்த்தியை சத்தான நைவேத்தியம் செய்து கொண்டாடுங்கள்.
    • இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    கம்பு - ஒரு கப்,

    தினை - ஒரு கப்,

    கேழ்வரகு - ஒரு கப்,

    ஏலக்காய் - 4,

    கருப்பட்டி - 3 கப்,

    தேங்காய்த் துருவல் - 1 1/2கப்

    செய்முறை

    கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும்.

    தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டையாகப் பிடிக்க வேண்டும்.

    அவற்றை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி

    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    மேல் மாவிற்கு...

    கேழ்வரகு மாவு - 250 கிராம்,

    தண்ணீர் - 1/2 லிட்டர்,

    எண்ணெய் - 50 மி.லி.,

    உப்பு - 20 கிராம்.

    பூரணத்திற்கு...

    எள் - 100 கிராம் (பொடிக்கவும்),

    கருப்பட்டி - 200 கிராம்,

    முழு தேங்காய் - 2 (துருவியது),

    நெய் - 10 கிராம், ஏலக்காய் - 25 கிராம் (பொடிக்கவும்).

    செய்முறை

    மாவிற்கு...

    மிதமான சூட்டில் கடாயில் கேழ்வரகு மாவை கொட்டி வாசனை வரும்வரை வறுக்கவும். வறுத்த மாவு ஆறியதும் உப்பு, வெந்நீர், எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பூரணத்திற்கு...

    அடுப்பில் கடாயை வைத்து பொடித்த எள், தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள், கருப்பட்டியை சேர்த்து கிளறி இறக்கவும். மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் செய்து வைக்கவும்.

    இவ்வாறு செய்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு பூரண கொழுக்கட்டை ரெடி.

    ×