search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177592"

    • அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் ரகசியமாக விற்று வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது அமைய கரம் அருகே உள்ள தென் பொன் பரப்பி பகுதியில் உள்ள மளிகை கடையில் போலீ சார் சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹான்ஸ் பாக்கெட்டு கள் இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதே போல் வாசுதேவனூர் கிரா மத்தில் உள்ள ஈஸ்வரன் மளிகை கடையில் சோதனை செய்தபோது 7ஹான்ஸ் பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கோவிந்த ராஜ், ஈஸ்வரன் ஆகி யோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
    • 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளர், ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும் ஆணையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும்,

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்புக் கடைகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது எடை அளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 8 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையி டப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர்கள் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 12 வியாபாரிகள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடை கற்கள் வைத்திருக்காத 7 வியாபாரிகள் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும். 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    சிவகாசி, விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வாளர்களான முத்து, சதாசிவம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, பாத்திமா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.
    • மொத்தம் உள்ள 34 அங்காடிகளில் தலையாட்டி பொம்மைகள் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் முன்பு தலையாட்டி பொம்மை விற்பனை கடைகள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு இந்த கடைகள் அகற்றப்பட்டன.

    இதையடுத்து மீண்டும் பெரிய கோவில் பகுதியில் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் என்று பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், வியாபாரிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் 34 தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் என்ற பெயரில் அங்காடி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.

    இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலரின் முயற்சியால் ஒரே இடத்தில் அங்காடிகள் அமைக்கப்பட்டு இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மொத்தம் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன.

    இங்கு விலை குறைவாகவும் தரமாகவும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும் என்றார்.

    தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.

    தற்போது ஒரே இடத்தில் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
    • ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் 98 இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. காய்கறி கடை 15 வண்டிகள், உணவுக்கடைகள் 40, பூக்கடைகள்20, மற்றவைகள் 23 என மொத்தம் 98 இலவச தள்ளுவண்டிகள் ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

    நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர் திலகவதி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சண்முகராஜன், துபாய்காந்தி, விஜயகுமார், கார்த்திகேயன், ராமதாஸ், மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தமிழன்னை நண்பர்கள் குழு, தமிழ் சங்கம், அன்னை தெரசா நற்பணி இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    ராஜபாளையம், செப்.19-

    ராஜபாளையம் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குழுவின் திட்டம், ெரயில்வே மேம்பால பணிகள் மெத்தன போக்கில் நடைபெற்று வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இதையொட்டி பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தொடக்க உரையாற்றினார்.

    பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் நல்லமுத்து, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், முகநூல் நண்பர்கள் குழு செல்வகுமார், அறம் அறக்கட்டளை மணிகண்டன், சி.ஐ.டி.யு. டாக்சி-ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் கண்ணன், நேதாஜி ரத்ததான கழகம் முருகானந்தம், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் கண்ணன், நாம் தமிழர் கட்சி ராமசுப்பிரமணியன், வணிகர் சங்க பேரமைப்பு லட்சுமணப் பெருமாள், பார்வர்டு பிளாக் மாநில நிர்வாகி சுப்புராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர். தமிழன்னை நண்பர்கள் குழு, தமிழ் சங்கம், அன்னை தெரசா நற்பணி இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்.
    • பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    சீர்காழி:

    அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அ.தி.மு.க. சார்பில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

    மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க பொறுப்பாளர்கள் கருணாகரன், பாஸ்கரன், சொக்கலிங்கம், பூவராகன் பங்கேற்றனர்.

    • கூடலூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடியேற்றப்பட்டது.
    • முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது

    ஊட்டி

    முதுமலைப் புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது.

    இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவை தொகுதி வணிகா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதனடிப்படையில் கடைகளில் கருப்புக் கொடியேற்றப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டி முடிவெடுக்கப்படும் என்று நிா்வாகிகள் தெரிவித்தனா். மசினகுடி பகுதியில் வாடகை வாகனங்கள் மற்றும் ஜீப்புகளிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தன

    • இந்த கடையில் மது வாங்கி குடிப்பவர்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கேலிக் கிண்டல் செய்து வந்தனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து, சுல்தானியப்பா சந்து உள்ளது.

    இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.

    இந்த கடையில் மது வாங்கி குடிப்பவர்கள் அந்த வழியாக செல்லும் பொது மக்களை கேலிக் கிண்டல் செய்து வந்தனர்.

    இதனால் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் அவதி அடைந்தனர்.

    இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் இன்று வணிகர் சங்க நிர்வாகி வாசு, தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அண்ணாசாலையின் பின்புறம் சாலையோரம் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வடிகால் கட்டப்பட்டது.
    • சரபோஜி மார்க்கெட் வளாகத்துக்குள் தரைக்க டைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்யலாம் என ஆணையர் கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அண்ணா சாலை யில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகி றது. முதல் கட்டமாக அண்ணாசாலையின் பின்புறம் சாலையோரம் இருந்த கடைகள் அப்புற ப்படுத்தப்பட்டு வடிகால் கட்டப்பட்டது. ‌

    அடுத்த கட்டமாக அங்குள்ள தியேட்டர் முதல் சரபோஜி மார்க்கெட் வரை வடிகால் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதனால் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    அப்போது தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகள், தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சரபோஜி மார்க்கெட் வளாகத்துக்குள் தரைக்க டைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்யலாம் என ஆணையர் கூறினார்.

    இதற்கு சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினர் அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த மறியல் தொடர்பாக தஞ்சை போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் மறியலில் ஈடுபட்ட 25 வியாபாரிகள் மீது போலீசார் வழக்கு ப்பதிவு செய்தனர்.

    • பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், மாதானம், நல்லூர், ஆரப்பள்ளம், வடகால், நல்ல விநாயகபுரம், கடைக்கண் விநாயகர் நல்லூர், பச்சை மாதானம், திருப்பன்கூர், வைத்தீஸ்வரன் கோவில், ஆதமங்கலம், பெருமங்கலம், மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மோட்டார் பாசன மூலம் குறுவை சாகுபடி செய்தனர்.

    தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    இதேபோல் பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இதுவரை குறுவை நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசு திறக்காததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த நாட்களாக அடுக்கி வைத்து காத்துள்ளனர்.

    மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் பொட்டல பொருட்களை கூடுதல் விலைக்கு விற்ற 16 வியாபாரிகள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    • விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலா ளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி யும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் துைண ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் சோதனை நடத்தினர்.

    அப்போது பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்கள், அறிவிப்பு இல்லாமல் பொட்டலபொருட்களை விற்பனைசெய்தல் மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக இந்த சோதனை நடந்தது.

    பொட்டல பொருட்க ளில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 13 வியாபாரிகள் மீதும், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்கள் பதிவு சான்று பெறாமல் உள்ள 2 வியாபாரிகள் மீதும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்த ஒரு வியாபாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த வழக்கில் முதலாவது குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை குற்றத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராமும், அதற்கு மேற்பட்ட குற்றத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    இந்த சோதனையில் சிவ காசி தொழிலாளர் துைண ஆய்வாளர்கள் முத்து, சதாசிவம் மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, சிவசங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • மார்க்கெட்டிற்கு கோவை மாவட்டம் கிணத்து க்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
    • விற்பனையாகாத தக்காளி களை மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டி வருகின்றனர்.

    கோவை,

    கோவை-மேட்டுப்பா ளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இந்த மார்க்கெட்டிற்கு கோவை மாவட்டம் கிணத்து க்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    இதுதவிர வெளிமாநி லங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மைசூர், குண்டல்பேட் பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளி மார்க்கெட்டுக்கு வருகிறது.இந்த நிலையில் மார்க்கெ ட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதன் காரணமாக வியாபாரிகள் விற்பனையாகாத தக்காளி களை மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு பலஇடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100க்கு விற்கப்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல, செல்ல கடந்த ஜூன் மாதம் தக்காளி விலை ரூ.44க்கு விற்பனையானது.தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.7க்கு மட்டுமே விற்பனையாகிறது.


    விலை சரிந்துள்ளதால், தக்காளி விற்பனை அதிகரிக்கும் என நினைத்து விவசாயிகள் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் கிலோ தக்காளிகளை கொண்டு வருகின்றனர். ஆனால் போதிய விற்பனை இல்லாததால் ஒரு நாளைக்கு 2 டன் தக்காளி வீணாகி வருகிறது. கிலோ தக்காளி ரூ.100க்கு விற்றபோது கூட விற்பனை இருந்தது. ஆனால் விலை குறைந்தபோதும் தக்காளி விற்பனை இல்லை. எங்களுக்கும் வியாபாரம் இல்லை.

    ஆயிரம் ரூபாய்க்கு தக்காளி விற்றால் ரூ.30 கமிஷன் கிடைக்கும். அதுவும் ஆள் கூலிக்கு கொடுத்து விடுவதால் எங்களுக்கு எந்தவிதமான லாபமும் இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×