search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177592"

    • 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன
    • சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கடற்கரை வழியாக புதிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ளது சின்ன முட்டம். இங்கு மீன்பிடி துறைமுகம் அமைந்து உள்ளது. இந்தத் துறைமுகத்தைப் தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    மீன்பிடி தடைகாலம் காரணமாக கடந்த மாதங்க ளாக துறைமுகத்தில் ஓய்வெ டுத்து விசைப்படகுகள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 15-ந்தேதி அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்தவிசைப்படகுகள் அனைத்தும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பி டிக்கச் சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பி வருகின்றன.

    தற்போது இந்தப் படகு களில் அதிக அளவில் மீன்கள் பிடித்து வரப்படு கின்றன. இதனால் இந்த மீன்களை ஏலம் எடுப்பதற்காக கேரளா போன்ற வெளி மாநி லங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான டெம்போ, லாரி, டிரக்கர் போன்ற வாகனங்கள் சின்னமுட்டம் துறைமுகத்தை நோக்கி மாலை நேரங்களில் படை யெடுத்து வந்த வண்ணமாக உள்ளன.

    இதனால் கன்னியா குமரி-நெல்லை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள மாதவபுரம்சந்திப்பில் இருந்து சின்னமுட்டம் துறைமுகம் செல்லும் சாலை கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் இந்த சாலை மாலையில் இருந்து நள்ளிரவு வரை பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

    இதனால் மாதவபுரம், கலைஞர் குடியிருப்பு ஒற்றையால் விளை, சின்னமுட்டம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமின்றி கன்னியா குமரி விவேகானந்தாபுரம் கடற்கரையில் அமைந்து உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    எனவே கன்னியாகுமரி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்ல தனிசாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கன்னியாகுமரியில் இருந்து சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கடற்கரை வழியாக புதிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் மீன்வளத்துறை ஆகியவை இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    குமாரபாளையம் நகராட்சி தலைவருடன் மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.

    இந்நிலையில் குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெங்கிடு என்கிற வெங்கடேசன், செயலர் விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனை நேரில் சந்தித்து, மார்க்கெட் பழைய இடத்திலிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டில் மாற்றி அமைத்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

    இதே போல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி, செயலர் தாமோதரன், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    மேலும் விடுபட்ட பகுதியில் மின் இணைப்பு கொடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
     கடலூர்:

    கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிய கட்டணம் செலுத்தி உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இது வரை உரிமம் பெறாத வியாபாரிகள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், காய்கறிக்கடைக்காரர்களும் உரிமம் பெற வேண்டும்.

    உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலோ, தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்பட்டாலோ அது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம்.

    இப்போது நகர்புறங்களில் இட்லி, தோசை மாவுகளை அரைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இட்லி, தோசை மாவை பிரிட்ஜில் வைத்து தான் விற்க வேண்டுமே தவிர வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது.

    கரும்பு சாறு, சர்பத் போன்ற குளிர்பானங்களில் மீன்களை பதப்படுத்துவதற்கான ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அவை சுத்தமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவதால் குளிர்பானங்களில் அதனை பயன்படுத்தக்கூடாது என்பதால் மீன்களை பதப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை தயாரிப்பவர்கள் அவற்றில் நீலநிறத்தை சேர்க்க வேண்டும் என்று ஐஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    சமையல் எண்ணை, பால், தண்ணீர், டீ போன்றவற்றில் கலப்படத்தை தடுப்பதற்காக அவற்றில் இருந்து மாதந்தோறும் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்புகிறோம். கடந்த 6 மாதங்களில் சமையல் எண்ணையில் மட்டும் 68 மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இவற்றில் ஒரு எண்ணை மாதிரியில் கலப்படம் இருப்பதும், 17 மாதிரிகள் தரம் குறைந்ததாக இருப்பதும், 27 மாதிரிகளில் லேபல் மோசடி இருப்பதும் தெரியவந்து உள்ளது. அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×