search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதில்"

    இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஸ்டாலின் கூறியதற்கு, சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக இருப்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #HRaja
    சென்னை:

    தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட்டார். இதற்கென இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய பொதுக்குழுவில் பேசிய மு.க ஸ்டாலின், திமுக-வை வழிநடத்த இன்று புதிதாக பிறந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என தொண்டர்கள் மத்தியில் மு.க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.



    இந்த உரைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ஸ்டாலினின் சவாலை ஏற்க மோடியின் காவித்தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும், களம் காண்போம் எனவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மோடியின் காவி தொண்டர்கள் என எச்.ராஜா குறிப்பிட்டிருப்பது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. #DMK #MKStalin #HRaja
    வெற்று கோஷங்களால் உண்மையை எப்போதும் மறைக்க முடியாது என்றும், காஷ்மீர் குறித்து தவறான தகவலை பாகிஸ்தான் ஐ.நா. பொது சபையில் பதிவு செய்வதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சந்தீப் குமார் கூறியுள்ளார். #India #Pakistan #JammuKashmir
    நியூயார்க்:

    ஐ.நா. மனித உரிமை அமைப்பு சமீபத்தில், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    ஐ.நா. பொது சபையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய பாகிஸ்தான், காஷ்மீரில் அனைவரும் சமமான உணர்வுடன் நடத்தப்படுவதாக போலி தகவலை இந்தியா பரப்பி வருவதாக குற்றம்சாட்டியது.



    இதற்கு பதில் அளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சந்தீப் குமார் கூறுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை யாராலும் மாற்ற முடியாது. பாகிஸ்தான் மறுபடியும் காஷ்மீர் குறித்து தவறான தகவலை ஐ.நா. பொது சபையில் பதிவு செய்ய பயன்படுத்தி இருக்கிறது. வெற்று கோஷங்களால் உண்மையை எப்போதும் மறைக்க முடியாது என்று தெரிவித்தார்.

    மேலும் அவர் பேசுகையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கை தவறான தகவல், ஒருதலைபட்சமானது, உள்நோக்கம் கொண்டது. இது இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.   #India #Pakistan #JammuKashmir #Tamilnews
    எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தூரம் தாண்டுவதற்கு இரண்டு அடி பின்னால் செல்வதற்கு நிகரானது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #BypollResults
    போபால்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சி மையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.



    அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு ராஜ்நாத் சிங் சமாளிப்பாக பதிலளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தொலைவை தாண்டுவதற்கு ஒருவர் இரண்டடி பின்னால் செல்வது போலாகும் என குறிப்பிட்டுள்ளார். #RajnathSingh #BypollResults
    ×