search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளிபதக்கம்"

    ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு ஊக்கத்தொகையாக 30 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் வென்று பதக்கம் பெற்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அறிக்கையில், வெற்றி வீரர் தருண் அய்யாசாமி கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் தங்கம் வென்றதையும் சுட்டிக்காட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தருணின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட முதல்வர், தருண் அய்யாசாமியின் எதிர்கால வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஸ்குவாஷ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சவரல் கோஷல், தீபிகா கார்த்திக், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami
    ×