search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்தா"

    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த பாஸ்தா - 200 கிராம்
    பன்னீர் - 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்)
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கேரட் - 1
    இஞ்சி - அரை டீஸ்பூன்
    பூண்டு - அரை டீஸ்பூன்
    டொமேட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    வெண்ணெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும்.

    இதில் கேரட் சேர்த்து சில நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் வதங்கியதும் பன்னீர் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கலவையை வேக விடவும்.

    வேக வைத்த பாஸ்தாவை இதில் சேர்த்து, தீயைக் குறைத்து எல்லாம் சேர்ந்து வரும்போது கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, குழந்தையின் லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பாஸ்தா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து எளிய முறையில் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - 150 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 6 பற்கள்
    மொசரெல்லா சீஸ் - ¼ கப் (Mozzarella cheese)
    கோதுமை / மைதா - 2 மேஜைக்கரண்டி
    பால் - 1 கப்
    காய்ந்த துளசி - 1 தேக்கரண்டி
    காளான் - 200 கிராம்
    காய்ந்த ஆர்கனோ - 1 தேக்கரண்டி
    நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
    பட்டர் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

    கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்தா - 1 கப்
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - ஒன்று
    குடைமிளகாய் - 1/4 பாகம்
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.

    முட்டை உதிரியாக வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தா சேர்த்து சுருள கிளறி விட்டு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான சுவையான முட்டை பாஸ்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×