search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க"

    • பயிற்சி பாசறை இன்று காலை தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கானோர் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை இன்று காலை தொடங்கியது. திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும், அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், மாநகராட்சி மேயர்தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர்பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். காணொலிகாட்சி மூலமாக ஆயிரக்கணக்கானோர் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்றனர்.

    • தமிழக மக்களை எவ்வாறு திராவிட உணர்வுடன் வழி நடத்தி சென்று அரசியல் பயணத்தை தொடர வேண்டும்
    • தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அமைப்புகளால் திராவிட மாடல்பயிற்சி பாசறை நடத்திட வேண்டுகோள்

    திருப்பூர் :

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்வர், கழக தலைவர், தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நீதிக்கட்சி தலைவர்கள்ஆகியோர் வகுத்து கொடுத்த திராவிட கொள்கை மற்றும் செயல்பாடுகளை இன்றைய திராவிட தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து அதன்படி எதிர்காலத்தில் திராவிட கொள்கையால் தமிழகத்தையும், தமிழக மக்களையு ம்எவ்வாறு திராவிட உணர்வுடன் வழி நடத்தி சென்று அரசியல் பயணத்தை தொடர்ந்திட தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அமைப்புகளால் திராவிட மாடல்பயிற்சி பாசறை நடத்திட வேண்டு கோள்விடுத்ததை அடுத்து திருப்பூர் மத்தியமாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் ராஜாராவ் வீதியில் அமைந்துள்ள மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் 19.6.2022(ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை9மணிக்கு திருப்பூர் மத்திய மாவட்டக் கழகப்பொறுப்பாளரும், அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினருமான க.செல்வராஜ்எம்.எல்.ஏ., ஆகிய எனது தலைமையில் மாநகர பொறுப்பாளர்கள்டி.கே.டி.மு.நாகராசன், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர்முன்னிலையிலும் நடக்கிறது.

    அதேபோல் திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர் எம்.எல்.ஆர். திருமணமண்டபத்தில் ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.விஸ்வநாதன் முன்னிலையிலும்,வேலம்பாளையம் பகுதி, காந்தி நகர் முத்தனச்செட்டியார் மண்டபத்தில் பகுதிபொறுப்பாளர் கொ.ராமதாஸ் முன்னிலையிலும், அண்ணா காலனி பகுதி,புதியபேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள காமாட்சியம்மன் செங்குந்தர்மணடபத்தில் பகுதி செயலாளர் அ.செல்வராஜ் முன்னிலையிலும், பாண்டியன்நகர் பகுதி, வாவிபாளையம் கொங்கு கலையரங்கத்தில் பகுதி செயலாளர்வெ.ஜோதி முன்னிலையிலும், கொங்கு நகர் பகுதி, கருணாகரபுரி சர்கார்பழனிசாமி மண்டபத்தில் பகுதி செயலாளர் போலார் சம்பத்குமார்முன்னிலையிலும் நடக்கிறது

    வாலிபாளையம் பகுதி, மன்னரை உமையாள் மண்டபத்தில்பகுதி செயலாளர் மு.க.உசேன் முன்னிலையிலும், நல்லூர் பகுதி, காங்கயம் ரோடுகாயத்திரி மஹாலில் பகுதி பொறுப்பாளர் மேங்கோ அ.பழனிசாமிமுன்னிலையிலும், கருவம்பாளையம் பகுதி, ஏபிடி ரோடு, விஸ்வகர்மா திருமணமண்டபத்தில் பகுதி செயலாளர் மியாமி அ.அய்யப்பன் முன்னிலையிலும் திராவிடமாடல் பயிற்சி பாசறைக்கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர்சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    எனவே திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதிமற்றும் வட்ட, ஊராட்சி உட்கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணிஅமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச. நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், உடன் பிறப்புகள் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் நடைபெறும்நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்குறிப்பாக இளைஞர் அணி, மாணவர் அணி உடன்பிறப்புகள் தவறாதுவெண்சீருடை அணிந்து கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    சென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார். #DMK #MKStalin
    சென்னை :

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முறைப்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிக்கிறார்.

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார்.

    அதேபோல் பொருளாளராக பதவி ஏற்கும் துரைமுருகனும் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுவார். இந்த கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

    அதனைத்தொடர்ந்து தி.மு.க.வின் 2-வது தலைவராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுகிறார். முக்கிய பிரபலங்கள் சிலரும் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடம், கருணாநிதி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

    பொதுக்குழு கூட்டத்தையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் அரங்கத்தின் முன்பு இரு புறங்களிலும் சாமியானா பந்தல் போடப்பட்டு உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தொண்டர்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் அங்கு டெலிவிஷன்கள் வைக்கப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, “நாளை (இன்று) நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் முதலில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை பொதுச்செயலாளர் அறிவிப்பார்” என்றார். #DMK #MKStalin
    தி.மு.க பொதுக்குழு வரும் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கூடும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவித்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். #DMK #MKStalin
    சென்னை :

    திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 6-ம் தேதி காலமானார். இதனை அடுத்து, சமீபத்தில் கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி மட்டும் பேசப்பட்டது. தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, அடுத்தவாரம் 28-ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு மு.க ஸ்டாலின் தலைமையில் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார். இதில், கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொதுக்குழு கூட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் செல்வி, மு.க.தமிழரசு, துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் அருள்நிதி ஆகியோரும் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #DMK #MKStalin
    ×