search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    • ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
    • அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள், அத்துடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எல் எப். 2, எப். எல். 3 மதுபான உரிமத்தலங்கள் மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் எதுவும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஆம்னி வேனை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.
    • பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்(வயது 49) ,ராஜம்மாள் (47) தம்பதியினர்.இவர்களது மகன் கிட்சன் ஞானதுரை(27) .ஞானதுரைக்கு பெண் பார்க்க தனது உறவினர்களான செல்வி, ஆசீர் கோவில் பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்துக்கு வந்துள்ளனர். பெண் பார்த்து விட்டு கோவைக்கு திரும்பிய போது பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே தாங்கள் வந்த ஆம்னி வேனை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது பல்லடத்தில் இருந்து செஞ்சேரிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று‌ டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோடு ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் ஆம்னி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் வந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜம்மாள், செல்வராஜ், அகஸ்டின் உட்பட 5 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த நான்கு பேருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் உடுமலையைசேர்ந்த பட்டீஸ்வரன் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சரணடைந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் பல்லடம் தாலுக்கா அலுவலகத்திற்கு, அருகே என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு புகார்கள் தொடர்பாக தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். விபத்து நடந்த இடத்தில் ஜெராக்ஸ் மற்றும் பேக்கரி உள்ளது. எப்பொழுதும் அங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டு இருப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகள் விடுமுறை விடப்பட்டு அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு பகுதியில் 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க ஆண்டு பொது மகா சபை கூட்டம் வரும் 5-ந் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் பெருந்துறை, ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் ஈரோடு, கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க ஆண்டு பொது மகா சபை கூட்டம் வரும் 5-ந் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே அன்றைய தினம் மஞ்சள் ஏலம் நடைபெறாது. 6-ந் தேதி வழக்கப்போல ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ஏராள மானோர் படை எடுத்த வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.காலை 7.45 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    இன்று காலை 11 மணி வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில்சென்று பார்வையிட்டு இருந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள்படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியா குமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்கா ணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஈரோடு:

    சுதந்திர தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின மான நேற்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்ப டுகிறதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறை வழங்கப்படுகிறதா? என பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்வானது ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 10 நிறுவனங்களில் நடத்தப்பட்டது.

    இதில் 88 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள ர்களுக்கு விடுமுறை அளிக்காமல் மாற்று விடுப்பு வழங்காமலும் விடுமுறை நாளில் பணிக்கு அமர்த்தும் தொழிலாளர்களின் பட்டியலை 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்காமலும் அதன் நகலை தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது தெரிய வந்தது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    • டாஸ்மாக கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்து–ள்ளதாவது:

    அரியலூர் மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடை–கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் அனைத்திற்கும்,

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2022 (திங்கட்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தி–னமாக விடுமுறை அறிவிக்க–ப்படுகிறது.

    மீறி மதுபான சில்லறை விற்பனை கடைகளோ மதுபானக்கூடங்களோ செயல்பாட்டால் கடும் நடவடிக்கை மேற்கொ–ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடு–த்து–ள்ளார்.

    • அரசு அலுவல–கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல–கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 -ன் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி ஆகிய 2 நாட்களில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    நாமக்கல்:

    கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பிசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கடையேழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரு நாட்களில் அரசு சாா்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படும்.

    அதன்படி நிகழாண்டில் வருகிற 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி ஆகிய 2 நாட்களில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இவ்விழாவின்போது, தமிழக அரசின் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலா்க் கண்காட்சிகள், மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.

    இவ்விழாவிற்காக மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளா்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும், இந்த உள்ளூா் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் 27-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூா் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். மேலும், இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

    எனவே, கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவா்கள் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
    • உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி பணி நாளாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு 28-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை
    • 13-8-22 குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உள்ளூர் விடுமுறை

    கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு வியாழக்கிழமை (28-ந்தேதி) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தர விடப்படுகிறது.

    28-ந்தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-8-22 (சனி) கன்னியா குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். 28-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலை மைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப்பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர் களைக் கொண்டு இயங்கும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • பூங்காவுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.
    • சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவற்றை கேட்டு அறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு மணிமண்டப பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கி வருகிறது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் அனைத்து வித மான விளையாட்டுபொரு ட்களும் உள்ளன. இதனால் மணிமண்டபம் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படும்.

    இந்த நிலையில் பூங்கா வுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்களால் இந்த வாகன நிறுத்தம் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவ ற்றை கேட்டு அறிந்தார்.

    இந்த பார்க்கிங்கில் இருச க்கர வாகனம் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு வசதிகள் உள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார்மணிக ண்டன், ஊரக வாழ்வா தார இயக்க திட்ட இயக்கு னர் லோகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள்சிவா, சரவணன் சீனிவாசன், சுவாமிநாதன், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்ச ந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×