search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 30-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    • பண்டிகையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கூறிய தாவது:-

    தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாளை (29-ந்தேதி) கொண்டாட உள்ளது. இதையொட்டி 30-ந்தேதியை (வெள்ளிக் கிழமை) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

    வருகிற 1, 2-ந்தேதி வார விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் தமது சொந்த ஊர்களில் பண்டி கையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும் ஒரு சில கல்வி நிறுவனங்களில்

    30-ந்தேதி அன்று தேர்வு களும் நடைபெற உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டி கைக்கு அடுத்த நாளான 30-ந்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் கும்ப கோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பி டங்களுக்குத் திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சாா்பில் 300 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்பட்டன.

    இதேப்போல் நாளையும் (ஞாயிற்றுக்கி ழமையும்) சிறப்பு பஸ்கள் இயங்கும்.

    இதில், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னை யிலிருந்து திருச்சி, கும்பகோ ணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறை ப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பஸ்களும் இயக்கப்படு கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது.
    • தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய ஊா்களுக்கு 250 பஸ்கள் இயக்கப்பட்டன.

     தஞ்சாவூர்:

    கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படவுள்ளதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று மற்றும் நாளை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம்) மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    வெளியூா் சென்ற பொதுமக்கள் அவரவா் இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கும் 250 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல, திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.                           

    • குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.
    • கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு. சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.

    எனவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்.

    மேலும் கல்வி துறையின் அறிவுறுத்தலை மீறி சட்ட விரோதமாக கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
    • பண்ருட்டியில் வணிக ர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது,

    கடலூர்:

    பண்ருட்டியில் வணிகர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது.

    வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர்.வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள்,அதை களை வதற்கான ஏற்பாடுகள்கு றித்துஇதில்விரிவாக விவாதிக்கிறார்கள். அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக பண்ருட்டியில் வியாாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கின்றனர். இது தொடர்பாக சங்க செயலாள ர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அதன்தொடர்ச்சியாக வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வணிக நிறுவனங்களுக்கு 5-ந்தேதி விடுமுறை அளித்து வணிக ஒற்று மையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறி உள்ளார். மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் சிவா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 40 - வது மாநில மாநாடுஇன்று சென்னை அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.கடைகளுக்கு விடுமுறை அளித்துமாநாட்டுக்கு வரவேண்டும் என்றுமளிகை வியாபாரிகள் சங்க செய லாளர் மோகனகிருஷ்ணன், வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் வானவில் ராஜா வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    சிவகங்கை

    சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவ னங்களின் மீது சிவகங்கை மாவட்ட த்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும்.
    • வரும் 1-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ந் தேதி மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து வரும் 1-ந் தேதி முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது. அதற்கு அடுத்தவாரம் வழக்கம்போல ஏலம் நடைபெறும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

    • சித்திரை திருவிழாவின் போது டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
    • பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரையின் உலக புகழ்வாய்ந்த சித்திரை திருவிழாவில் மே 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி தலைவி மீனா, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இதமான கடல் காற்று வீசுவதால் மாலை நேரங்களில் கடற்கரையில் கூட்டம்
    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி :

    கோடை விடுமுறை சீசன் இந்த ஆண்டு கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலாதலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக உள்ளனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகாரமாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள பள்ளி வாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாதலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களி லும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறைநாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியுள்ளது.

    சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கடற்கரையில் மாலை நேரங்களில் இதமான குளிர் காற்று வீசுகிறது.
    • சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட் டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு பொதுத்தேர்வு முடிவடைத் துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ண மாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாலை நேரங்களில் கடற்க ரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்க ரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ண மாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இத னால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டிஉள் ளது. இந்த சுற்றுலா தலங் களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாரும் தீவிர கண் காணிப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.

    • காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் எஸ்.எஸ். ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ் புத்தாண்டு முன்னிட்டு இன்று முதல் வருகிற 16-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் நாளை வரை சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, புதுக்்கோட்டை, கரூர், ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், புதுக்கோ ட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் தொடர் விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல வசதியாக 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×