search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
    • தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.

    இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
    • அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதால் சின்னசேலம் பகுதிகளான நயினார் பாளையம், குரால், தோட்டப்பாடி, பாக்கம்பா டி, எலவடி, கல்லாநத்தம், வாசுதேவணூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது காலையில் தொடங்கிய தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள். 

    மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது சில தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது. இந்த மழையினால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். மழையின் காரணமாக சின்ன சேலத்தில் உள்ள முக்கிய சாலைகளான சேலம் மெயின் ரோடு, கடைவீதி, புதிய பேருந்து நிலையம், கூகையூர் ரோடு என அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பின்னலாடை சார்ந்த உப தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என திருப்பூர் நகரத்தில் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்கு வேலைக்கு வருவோர், பனியன் துணிகளை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் என திருப்பூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளுமே எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்தபடியே இருக்கும்.

    குறிப்பாக அவிநாசி சாலை, பி.என் சாலை, ஊத்துக்குளி சாலை மூன்றும் இணையும் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாகவும், வாகன நெரிசலோடும் காணப்படும். முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் கூட்டமும் இருக்கும். திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் சாலையாக குமரன் சாலை இருப்பதால் இரவு நேரம் சில மணி நேரம் மட்டும் வாகனப் போக்குவரத்து இன்றி காணப்படும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டதால் திருப்பூர் நகரில் தற்போது சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. பனியன் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாம வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் பஜார்களில் ஹாயாக உலா வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது மாலை நேரங்களில் பஜார்களில் குவிந்து வருகின்றனர்.மேலும் மாநகராட்சி பூங்கா மற்றும் பொழுது போக்கு மையங்களில் குவிந்து வருகின்றனர்.

    வருகிற திங்கட்கிழமை முதல் பனியன் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என்பதால் அதன்பிறகு திருப்பூர் மீண்டும் சுறுசுறுப்பாகும்.

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

    வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    அதேபோல், தீபாவளி, பொங்கல் மற்றும் கோவில் திருவிழாவுக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆண்டு முழுவதும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் விசைத்தறிகள், தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஓய்வெடுத்து வருகின்றன.

    இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில்,சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் திரும்பி வந்த பிறகுதான் விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    தீபாவளி பண்டிகையின் போது தீக்காய விபத்துகளை தடுக்க மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மாவட்டத்தில் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.இதற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர், ஊழியர் அடங்கிய பிரத்யேக குழு பண்டிகைக்கு முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை தயார் நிலையில் இருந்தது.

    தீக்காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களும் தயார்படுத்தப்பட்டன. இருப்பினும், குறிப்பிட்டு சொல்லும்படியான தீ விபத்து எதுவும் நடக்கவில்லை.சிறிய அளவிலான தொடர் சிகிச்சை அளிக்க அவசியமில்லாத வகையிலான தீ விபத்துகளே நடந்துள்ளது. இதனால் மருத்துவம், தீயணைப்பு அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர், பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இது குறித்து திருப்பூர் மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகேசன் கூறுகையில், தீபாவளி நாளில் நான்கு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 6 பேர், பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும் வகையிலோ, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவில் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றார்.

    திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி கூறுகையில், தக்க ஏற்பாடுகளுடன் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.மாவட்டத்தில் பல்லடத்தில் 2,திருப்பூர் வடக்கு பகுதியில் 2 என மொத்தம் 4 சிறிய விபத்துக்கள் நடந்தது. உடனடியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. காயம், சேதம் எதுவுமில்லை என்றார்.

    கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பல்லடம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, கொச்சி, உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன.

    இதனால் பல்லடத்தில் எப்போதும், கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களால் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை திக்குமுக்காடியது. அண்ணா நகர் முதல் தாராபுரம் ரோடு பிரிவு வரை வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்றன.

    ஆனால் தீபாவளி நாளன்றும், தற்போதும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை குறைந்த அளவு வாகனங்களால் வெறிச்சோடி காணப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற பெரும்பாலானவர்கள் இன்னும் 3 நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில் மீண்டும் பழையபடி போக்குவரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    • உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.
    • அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன.

    திருப்பூர்:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல் சில தனியார் பள்ளிகளில் கடந்த மாதம் 24 ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன. மாணவர்களின் எழுத்து திறன் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றனர்.

    • விடுமுறை நாள் என்பதால் மணிமண்டப பூங்காவில் வழக்கத்தை விட பொதுமக்கள் குவிந்தனர்.
    • குழந்தைகள் பல்வேறு விளையாட்டு சாதன பொருட்களிலும் ஏறி விளையாடினர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

    மேலும் ஆயுத பூஜை , விஜயதசமியை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இப்படி தொடர் விடுமுறை காரணமாக தஞ்சையில் உள்ள புகழ் பெற்ற மணிமண்டப பூங்காவில் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

    தஞ்சை நகர் மட்டுமல்லாத சுற்றி உள்ள ஏராளமான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுடன் மணி மண்டப பூங்காவுக்கு வந்தனர்.

    இதேபோல் பெரிய கோவிலுக்கு வந்திருந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மணிமண்டப பூங்காவுக்கு வந்து சுற்றி பார்த்தனர்.

    ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அங்கு உள்ள ஊஞ்சலில் குழந்தைகள் உற்சாகமாக ஆடினர். மேலும் பல்வேறு விளையாட்டு சாதன பொருட்களிலும் ஏறி விளையாடினர்.

    இதேபோல் பெரிய கோவிலிலும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து கட்டிட கலையை பார்த்து ரசித்தனர்.

    பெரிய கோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரிய நந்தி உள்ளிட்ட பலவற்றை பார்த்து ரசித்தனர். செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களிலும் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    • காந்திஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • இத்தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    மதுரை

    சென்னை, முதன்மை தொழிலாளர் ஆணையர் டாக்டர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்ரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் விருதுநகர், தொழிலாளர் உதவிஆணையர் (அம லாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறு வனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய காந்தி ஜெயந்தி தினத்தன்று (2.10.2022) கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். மேற்படி தினத்தில் விடு முறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டு மானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்படவேண்டும்.

    மேற்படி தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலாளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்கள் 5.ஏ. என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு 4இ.இ. என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் 12ஏ. என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள், நிறுவனங்கள், 23 உணவு நிறுவனங்கள் மற்றும் ஒரு மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆக மொத்தம் 61 நிறுவனங்க ளில் முரண்பாடு கண்ட றியப்பட்டு, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958 தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பளபட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இத்தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 125 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

    மதுரை

    தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், உத்தரவின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின் படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தேசிய விடுமுறை தினங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் உரிய படிவத்தில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

    அவர்களுக்கு வேலை அளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வின் போது மேற்கண்ட சட்ட விதிகளை அனுசரிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 78 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 47 உணவு நிறுவனங்கள் ஆக மொத்தம் 125 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • அவ்வாறு இல்லையெனில், சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் அறிவுரைப்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் மற்றும் கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையிலும் திருப்பூர், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தேசிய விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை பணியமர்த்தினால்

    அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்க ளுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 72 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியமர்த்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது.
    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இது மாநிலத்தின் முக்கிய கொப்பரை விற்பனை மையமாகும். இங்கு சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது. எனவே, விவசா யிகள், வியாபாரிகள் செவ்வா ய்க்கிழமை வரவே ண்டாம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அடுத்த வாரம் வழக்கம்போல செயல்படும் என விற்பனைக் கூட அதிகாரி மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

    • டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் மேலும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மிலாடிநபியை முன்னிட்டு வருகிற 9-ந்தேதியும் ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள

    அரியலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் மேலும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மிலாடிநபியை முன்னிட்டு வருகிற 9-ந்தேதியும் ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "

    • வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
    • சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனால் தொழில் உள்பட முக்கிய நகரங்கள் இடையிலும், தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் பஸ்களின் முன்பதிவும் முடிந்துள்ளது.

    சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து அதிகாரிகள் பட்டியல் தயாரித்து போக்குவரத்து துைற அமைச்சரின் அனுமதிக்கு அனுப்பியுள்ளனர். ஓரிரு நாளில், சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விடுமுறையில் சென்றவர்களில், மருத்துவ விடுமுறை தவிர மற்ற விடு முறைகள் ரத்து செய்யப்பட்டு, இன்று பணியில் இணைய போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ×