search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சு"

    வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும் என்ற ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. #RahulGandhi #ISISRemark #BJP
    புதுடெல்லி:

    ஜெர்மனியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹம்பர்க் நகரில் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், ‘வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும்’ என்று கூறினார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா போன்ற குழுக்களின் கொள்கைகளை ஏற்கனவே நாம் நிராகரித்து இருக்கிறோம். அப்படியிருக்க ராகுல் காந்தியின் அச்சுறுத்தலுக்கு பின்னால் இருக்கும் பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரான பிறகும், நாட்டில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை ராகுல் காந்தி இன்னும் புரிந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார்.

    இதைப்போல பா.ஜனதா கட்சியும் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. #RahulGandhi #ISISRemark #BJP
    உத்தரபிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். #NarendraModi #UttarPradesh
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஆன்மிகவாதியும், கவிஞருமான கபீர், அங்குள்ள சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் மெகர் நகரில் உயிர்நீத்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட கபீரின் நினைவாக கோவில் ஒன்றை இந்துக்களும், நினைவிடம் ஒன்றை முஸ்லிம்களும் மெகர் நகரில் நிறுவியுள்ளனர்.

    இந்த நகர் முழுவதையும் சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கபீரின் போதனை விளக்க மையம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மிகப்பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கபீரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மெகர் நகருக்கு செல்கிறார். அங்கு கபீரின் நினைவிடம் மற்றும் தர்காவில் மரியாதை செலுத்தும் அவர், பின்னர் அங்கு ரூ.2½ கோடியில் கட்டப்படும் கபீர் அகாடமிக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.



    மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் 2½ லட்சம் பேரை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே பா.ஜனதாவினர் கருதுகின்றனர். நெசவாளர்களின் ஆதரவை பெறும் நோக்கில், நெசவுத்தொழிலை செய்து வந்த கபீரின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக கூறும் அவர்கள், சுவாமி ராமானந்தாவின் சீடராக கபீர் கருதப்படுவதால், வைஷ்ணவ பக்தர்களின் ஆதரவையும் இதன் மூலம் பெற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கும் நிலையில், பிரதமரின் மெகர் நகர பொதுக்கூட்டம் பா.ஜனதாவினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் காலை 10 மணிக்கு கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மெகர் நகருக்கு செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் மெகர் நகர் முழுவதையும் சிறப்பு கமாண்டோ படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இதற்காக அருகில் உள்ள இந்தியா-நேபாள எல்லைப்பகுதி மூடப்பட்டு உள்ளதுடன், உளவுத்துறையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டால் கோரக்பூரில் இருந்து மெகருக்கு காரில் செல்ல நேரிடும். எனவே இதற்காக 30 கி.மீ. தொலைவுக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.  #NarendraModi #UttarPradesh  #Tamilnews
    பாரம்பரிய விளையாட்டுகளை மக்கள் மறந்துவிடக்கூடாது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார். #Modi #TraditionalSports
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் ‘மன் கீ பாத்’(மனதின் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். நேற்று அவர் பேசும்போது கூறியதாவது:-

    மனதின் குரல், உரையின் போது ஒவ்வொரு முறையும் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பற்றி நான் பேசி வருகிறேன். நாம் மனதளவிலும், உடல் அளவிலும் உறுதியாக இருப்பது அனைத்துவித வளர்ச்சிக்கும் முக்கியமானது ஆகும். அந்த வகையில் இந்திய மக்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் (பிட் இந்தியா) என்கிற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது என் இதயத்திற்கு இதம் அளிக்கிறது.

    மக்கள் தங்களின் உடற்பயிற்சி வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ஒருவருக்கொருவர் சவால் விடுத்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு எனக்கு சாவால் விடுத்து இருக்கிறார். நான் அவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளேன். இதுபோன்ற சவால்கள் நம்மை நாமே உடல் உறுதியோடு வைத்துக்கொள்ள உதவுவதோடு, மற்றவர்களையும் உடல் உறுதியை ஏற்படுத்திக்கொள்ள ஊக்குப்படுத்துகிறன என நான் நம்புகிறேன்.

    இந்த பிரசாரத்தில் நான் கூறுவது, “நாம் எந்த அளவுக்கு விளையாடுகிறோமே, அதை விட அதிகமாக மற்றவர்களை விளையாடுவதற்கு ஊக்குவிக்கிறோம்” என்பதுதான். இந்திய மக்கள் அனைவரும் உடல் உறுதியோடு இருந்தால், இந்தியா உறுதியாக இருக்கும்.

    அதே சமயம் நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் பல நம்மை விட்டு மறைந்துகொண்டிருக்கிறது என்பதை எண்ணுகிற போது என் மனம் கவலை அடைகிறது. ‘கிட்டிப்புல்’ ‘கோ கோ’ ‘கோலி’ ‘பம்பரம்’ போன்ற எண்ணற்ற விளையாட்டுகள் நம்மிடம் இருந்து மறைந்து வருகின்றன.

    இதன் மூலம் விளையாட்டுகள் மட்டும் அல்ல, நம்முடைய அருமையான குழந்தை பருவத்தையும் இழக்க நேரிடும். இந்த குறையை போக்க இன்றைய பள்ளிக்கூடங்கள், குடியிருப்பு பகுதிகள், இளைஞர் சபைகள் போன்றவை பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஊக்கம் அளிப்பது முக்கிய தேவையாக உள்ளது.

    நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை அவற்றுக்கே உரிய விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளுடன் விளையாட வேண்டும். அப்படி விளையாடுவதை வீடியோவாக பதிவு செய்து, வெளியிட வேண்டும். பாரம்பரிய விளையாட்டு ‘அனிமேஷன்’ படங்களையும் உருவாக்கலாம். அவற்றை நமது புதிய தலைமுறையினர் வினோதமாக பார்ப்பார்கள். பின்னர் அவர்களும் விளையாடுவார்கள், வளர்ச்சியடைவார்கள்.

    விளையாட்டு என்பது, வெறும் விளையாட்டு அல்ல. அவை நமக்கு வாழ்க்கையின் மதிப்புகளை கற்று தருகிறது. இலக்கை நிர்ணயம் செய்தல், உறுதியான முடிவுகளை எடுப்பது, சேர்ந்து செயல்படுதல் பற்றிய உணர்வை வெளிப்படுத்துதல், பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது போன்ற அரிய குணங்களை விளையாட்டுகளில் இருந்து பெற முடிகிறது. மேலும் நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வயது ஒரு தடையல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுகிறபோது தலைமுறை இடைவெளி என்பது மாயமாகிறது. எனவே மக்கள் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்துவிடக்கூடாது.

    இந்திய கடற்படையை சேர்ந்த பெண்கள் குழு, ‘ஐ.என்.எஸ்.வி. தாரினி’ கப்பலில் 250 நாட்களுக்கு மேலாக பயணம் செய்து உலகம் முழுவதையும் சுற்றி வந்திருக்கிறார்கள். இது போன்ற பல சாகசங்கள் நிகழ்த்தப்பட வேண்டும். சாகசத்தின் உணர்வை அனைவரும் அறிய வேண்டும். வளர்ச்சி என்பது சாகசம் என்னும் கருவில் இருந்தே பிறக்கிறது.

    உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ந் தேதியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடுமையான வெயில், அளவில்லாத மழை, வெள்ளம் மற்றும் அதிகமான குளிரால் பாதிக்கப்படும்போது புவி வெப்பமயமாதலைப் பற்றியும், பருவநிலை மாற்றத்தை பற்றியும் பேசுகிறோம். எனினும், இதுபோன்ற வெறும் பேச்சால் மட்டும் பிரச்சினையை தீர்க்க முடியாது.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கைச் சூழலை பராமரிக்கவும் தேவையான அக்கறை வேண்டும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் சீர்கேட்டை ஒழிப்பதை இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் பிரதான நோக்கமாகும். எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும், பாலிதீனையும் மக்கள் பயன்படுத்த வேண்டாம்.

    இன்று(அதாவது நேற்று) இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள். ஜவகர்லால் நேருவுக்கு வணக்கம். இந்த நாள் மேலும் ஒருவரோடு தொடர்புடையது, அவர்தான் வினாயக் தாமோதர் சாவர்க்கர். சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் கவிதை, புரட்சி இரண்டையும் கைக்கொண்டு பயணித்தவர். சமூக அரசியலில் இந்துத்துவாவை புகுத்திய ஒரே தலைவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர். அவருக்கு என்னுடைய தாழ்வான வணக்கம்.

    இன்னும் சில தினங்களில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனிதமான பண்டிகை நாட்டு மக்களிடையேயான இணக்கத்தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்.  #Modi #TraditionalSports
    தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். #DonaldTrump #SouthKoreaPresident #MoonJae
    சியோல்:

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்கு இடையே தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஒரு முறையும், சீன அதிபர் ஜின்பிங்கை இரு முறையும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்து பேசினார். டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் இணக்கமான கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.

    ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் தென்படுகிறது. ஒருதலைப்பட்சமாக தன்னை அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா நிர்ப்பந்திப்பதாக வடகொரியா கருதுகிறது. அது மட்டுமின்றி டிரம்புடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்யவும் தயங்கப்போவது இல்லை என்கிற ரீதியில் அந்த நாடு கருத்து தெரிவித்தது.

    டிரம்பும் தன் பங்குக்கு, “கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை கைவிட்டால், அவர் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில் வடகொரியா அழிவை சந்திக்க வேண்டியது வரும்” என்றார்.

    இந்த நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது அவர் சிங்கப்பூரில் நடக்க உள்ள பேச்சு வார்த்தையை ரத்து செய்யப்போவதாக வடகொரியா விடுத்த மிரட்டல் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பற்றி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், “சமீப காலமாக வடகொரியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி டிரம்பும், மூன் ஜே இன்னும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்” என கூறப்பட்டு உள்ளது.  #DonaldTrump #SouthKoreaPresident #MoonJae
    பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். #Driving #Cellphone #KeralaHighCourt
    கொச்சி:

    போக்குவரத்து விதிமீறல்களால் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் செல்போனில் பேசியவாறே வாகனம் ஓட்டுவதால் நிகழும் விபத்துகளும் அதிகம். எனவே செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.



    கேரள மாநிலத்திலும், ‘கேரள போலீஸ் சட்டம்’ 118 (இ) பிரிவின்படி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதில் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.அங்குள்ள காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் ஒரு நீதிபதி அமர்வு, செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார்.

    இதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.ஷபிக், பி.சோமராஜன் ஆகியோரை கொண்ட அமர்வு, செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல எனக்கூறி ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

    பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வராது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.  #Driving #Cellphone #KeralaHighCourt
    ×