search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 180944"

    • பெயர் திருத்தம், ஆதார் கார்டு மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
    • பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி தாலூகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் உள்ளது.பெயர் திருத்தம் ,ஆதார் கார்டு பெறுதல், போன் நம்பர் மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.

    அவ்வாறு வருபவர்களிடம் அலுவலர்கள் இங்கு சர்வர் ரிப்பேராகிவிட்டது ,ஒன்றும் செய்ய முடியாது, இன்னும் 2 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என்றும், அப்படி அவசரம் என்றால் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடை பெயரை சொல்லி அங்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த செயலால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது.
    • விசுவநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாசில்தார் அலு வலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டரும், மாவட்ட ஜமா பந்தி அலுவலருமான விசுவ நாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் நெகருன்னிசா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக அக லூர், முக்குணம், தாமனூர், சின்னகரம், அருகாவூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஜமாபந்தி மேலாளர் கண்ணன் தனி தாசில்தார்கள் கோவிந்த ராஜ், மனோகரன் துணை தாசில்தார்கள் குணசேகரன், உமாமகேஸ்வரி, ரவி வட்ட வழங்கல் அலுவலர் வெங்க டேசன் வட்ட துணை ஆய்வாளர் முனியன் வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், பழனி, கார்த்திகேயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று 22 கிராமங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 22 கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து இன்று கள்ளப்புலியூர், மேலத்திப் பாக்கம், எடமலை, பென்னகர் உட்பட 20 கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட உள்ளன. ஜமா பந்தி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • சாலை விபத்துக்கள் அதிகமாக தினமும் நடைபெறுகின்றன.
    • பொதுமக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை சாலையில் அதிகமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருமருகலை சுற்றியுள்ள சுமார் 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்த சந்தைப்பேட்டை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிவேகத்திலும் கட்டுபா டின்றி செல்வதாலும், சாலை விபத்துக்கள் அதிகமாக தினந்தோறும் நடை பெறுகின்றன.

    பொதுமக்கள் அனை வரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

    பொதுமக்கள் நலன் கருதியும்,சாலை விபத்து ஏற்படாமல் இருப்ப தற்கும்,அரசு மருத்துவமனை அருகில் வேகக்கட்டுப்பாட்டு தடையும், சந்தைப்பேட்டை சாலையிலும், அண்ணாமலை நகர் சாலையும் சந்திக்கும் இடத்தில் வேகக்கட்டுப்பாட்டு தடையும் அமைத்து தரும்படி பொதுமக்கள் சார்பாகவும், திருமருகல் வர்த்தகர்கள் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லஞ்செட்டி ஊரணி, கழனிவாசல் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜித், மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

    விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    பொதுமக்களின் உடல் நலனை பேணி காத்திடும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தாய்மார்க ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 5 பேருக்கு மருந்து பெட்ட கங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    இதில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) விஜய்சந்திரன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் வீரமுத்து, காரைக்குடி நகராட்சி நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நில அளவையர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
    • பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையர் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்கள் அளிக்கும் நில உட்பிரிவு மனுக்கள் கிடப்பில் வைக்கப்படுகிறது. தற்போது பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்கப்படாமல் குவிந்துள்ளது.

    அரசின் விதிமுறைப்படி நில உட்பிரிவு மனு அளித்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவை துறையினரின் கடமை. ஆனால் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் 2 மாதத்திற்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவு மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ளன.

    மனு அளித்தவர்கள் நில அளவை பிரிவு அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அலைகின்றனர். நில அளவிற்கு முறைப்படி பணம் செலுத்தி பதிவு செய்து ஏராளமான விவசாயிகள் தங்கள் மனு மீது எப்போது அளவை உட்பிரிவு செய்யப்படும் என தெரியாமல் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, நில அளவையர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் மனுக்கள் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நில அளவை உட்பிரிவு செய்து தர முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு பணிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    • வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்க ப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பா லானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பி க்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி., நிறுவனம் மற்றும் எல்காட் சார்பில் இ -சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து சேவை மையங்களிலும் ஒரே மாதிரி சேவை அளிக்க உத்தரவிடப்பட்டது.பெரும்பாலான அரசு சேவைகள், இ-சேவை மையம் வாயிலாக மட்டுமே கிடைக்கிறது. போதிய சேவை மையங்கள் இல்லாததால் கூடுதல் சேவை மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அவ்வகையில் மாவட்டத்தில் 540க்கும் அதிகமான தனியார் இ-சேவை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் இ-சேவை மையத்தில், அரசு சேவைகள் முறையாக வழங்க மின்னாளுமை முகமை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகத்தில் மின்னாளுமை திட்ட அலுவலர் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம் தாலுகாவுக்கு காலையும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி தாலுகாக்களுக்கு மதியமும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மின்னாளுமை திட்ட முகமை மேலாளர் முத்துக்குமார், தனியார் இ-சேவை மையத்தினருக்கு பயிற்சி அளித்தார். சேவை மையம் அமைப்பது, அரசு வழங்கும் ரகசிய குறியீடு மற்றும் கடவு சொல்லை பயன்படுத்துவது, மக்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரசு அறிவித்த கட்டணத்தில் சேவைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். விண்ணப்ப பதிவு விவரத்தை, விண்ணப்பதாரர் சரிபார்க்க வசதியாக சேவை மையங்களில் இரண்டு மானிட்டர் வசதி செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    • வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது.
    • இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர்.

    காங்கயம் :

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. மாவட்டத்தின் கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் அதிக அளவு ஏற்பட்டு உள்ளது. இதன்படி காலை 7 மணிக்கு மிதமான வெயில் அடிக்க தொடங்கி மதியம் 12 மணிக்கு மேல் வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது. பின்னர் இரவு நேரங்களிலும் வெயிலின் உக்கிர தாக்கத்தினால் வெப்பத்துடன் கூடிய சூடான அனல் காற்று வீசி வருகிறது. இதனால் நகர, கிராம பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ, மாணவிகள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர். வெயிலின் உக்கிர தாக்கத்தை குறைக்கும் விதமாக இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் இனிப்பு வகை பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நகர, சுற்றுப்புற கிராம பகுதிகளில் பல்வேறு வீடுகளில் மின் விசிறிகள், ஏ.சி எந்திரங்கள் பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதனால் மின் தேவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

    கோடை முடிந்தும் இளநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுபற்றி இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:- பொதுவாக ஆண்டு முழுவதும் இளநீர் விற்பனை இருந்து கொண்டே இருக்கும். இதில் கோடை காலத்தில் இளநீர் விற்பனை நன்கு சூடு பிடித்து விறுவிறுப்பாக விற்பனையாகும். இதன்படி சுட்டெரிக்கும் கோடை வெயில் காலகட்டத்தில் ஒரு இளநீரின் விலை ரூ.40 முதல் ரூ.60 வரை என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படும். இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் தொடங்கி அதிக அளவில் வெப்பம் வெளியேறி வருகிறது. இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பே இளநீர் விற்பனை விறுவிறுப்பு அடைந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் உள்ளதால் இளநீர் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சாதாரண இளநீர் ஒன்று ரூ.30-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. அவ்வாறு பாதிக்கப்படும் கால்நடைகளை எப்படி கண்டறிவது,எவ்வாறு பாதுகாக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சுத்தமான குளிர்ந்த நீர் குடிக்க கொடுக்க வேண்டும். கால்நடை கொட்டகைகளில் உப்புக் கட்டிகளை கட்டி தொங்க விட வேண்டும். அதன் வாயிலாக கால்நடைகளில் தண்ணீர் பருகும் தன்மை அதிகரித்து, உப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். மாட்டுக்கொட்டையில் கூரைக்கு மேலே நீர் தெளிப்பான் அமைக்கலாம். கால்நடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை, 3மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.கோடைக்காலங்களில் கால்நடைகளின் தீவன தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.பருவ காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும் போது, அவற்றினை ஊறுகாய் தீவனமாக மாற்றி சேமித்து வைத்து கோடையில் உணவாக தரலாம்.

    பொதுவாக கொடிக்காய்புளி, வாகை, வேம்பு, கருவேல், சுபாபுல், மா, பலா, ஆல், அகத்தி, அரசு போன்ற மரங்களின் இலைகளை ஆடுகளுக்கு சிறந்த உணவாகும். கிராமங்களில் அதிகமாக கோடையில் கிடைக்கும் செவ்வேல் மற்றும் கருவேல் உலர் காய்கள் ஆடுகளுக்கு சிறந்த புரதச் சத்து மிக்க உணவாகும். இவ்வாறு அவர் கூறினார். ஒரு ஆடு 8 முதல் 12 லிட்டர் அளவுக்கு தினமும் நீர் அருந்தும். அதிக வெப்பநிலை நிலவுவதால் மேய்ச்சல் பகுதியில் நல்ல சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது. இரவிலும், விடியல் காலையிலும், வெயில் குறைந்த நேரங்களில் அதிக தீவனம் எடுக்கும். கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமான இடவசதி அளிக்க வேண்டும்.

    கோழிகளுக்கு குடிநீரில் வைட்டமின், 'சி' மருந்தினை, கோழி ஒன்றுக்கு தலா 10 மி.லி., கிராம் வீதம் கலந்து கொடுத்தால் அயற்சி ஓரளவு குறையும். மேலும் அயற்சி நீக்கும் பி காம்பளக்ஸ் வைட்டமின், குளுக்கோஸ் போன்றவை கலந்து கொடுக்கலாம் என்றனர்.

    • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
    • காய்கறிகள், பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது

    உடுமலை :

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகள் வரத்தும் அதிக அளவில் இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் கழிவுகளும் சேர்ந்து வருகிறது. அதை முறையாக அகற்றாமல் சந்தை வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள்,பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்றாட உணவில் காய்கறிகள் கீரைகளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போது வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக உள்ளதால் காய்கறிகள், கீரைகள் விரைவில் வாடி விடுகின்றது. இதனால் நாள்தோறும் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றோம். ஆனால் காய்கறி கழிவுகளை அகற்றாமல் சந்தை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் குவித்து வைத்து உள்ளனர். அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சந்தையின் ஒரு பகுதியில் விவசாயிகள் கடை அமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் முழுமையான அளவில் காய்கறிகளை வாங்க முடிவதில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் சந்தையில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.

    எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் நாள்தோறும் சந்தையில் சேகரமாகும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுமக்களிடம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வ ராஜ் எம்.எல்.ஏ., இன்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார்.அப்போது பொதுமக்கள் 43 ம் நம்பர் அரசு பேருந்து இந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.

    மேலும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கு அமைத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் கோரிக்கை மனுவாக வழங்கினர். கவுன்சிலர்கள் ராதா கிருஷ்ணன்,வேலம்மாள், காந்தி,நெருப்பெரிச்சல் பாலன்,வார்டு செயலாளர் பாபுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது. பொது மக்களிட மிருந்து வரப்பெற்ற 265 மனுக்களை உரிய முறையில் பரிசீலனை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தீர்வு கிடைத்திடவும், மனுக்களின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு தக வல் தெரிவித்திட வேண்டும் எனவும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென வும் மாவட்ட கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தனித்துணைஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆக்கிரமிப்பால் தண்ணீர் சீராக செல்வது இல்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.
    • 11-வது வார்டு பகுதியில் ஆணையர் ஆனந்த மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் 13-வது வார்டு பகுதியான தழுவியபுரம் ஒற்றைதெரு, ரவிவர்மன்தெரு, புளியவிளை தெரு உள்ளிட்ட பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கழிவுநீர் ஓடைகளில் அடைப்பு, ஆக்கிரமிப்பால் தண்ணீர் சீராக செல்வது இல்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.

    மேலும் குடிநீர் சரியாக வருவது இல்லை. வசதி படைத்தவர்கள் வீட்டில் பெரிய தொட்டி அமைத்து, குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பது சிக்கலாக உள்ளது. இதனை சரிசெய்து, போதிய அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ஆணையர் கழிவுநீர் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் ஓடையின் மீது பெரிய அளவில் போடப்பட்டு இருக்கும் காங்கீரிட் பாதைகளை அகற்ற வேண்டும். மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே மாதிரி குடிநீர் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து 11-வது வார்டு பகுதியில் ஆணையர் ஆனந்த மோகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, கவுன்சிலர் ஆச்சியம்மாள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    ×