search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பம்"

    புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு 3-வது வாரம் தொடங்கி விட்ட நிலையிலும் இதுவரை காற்று வீசவில்லை.

    அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலில் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருகிறது.

    இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் புதுவை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    செல்ல பிராணியான நாய்களின் காலில் ‘ஷு’ அணிந்து கோடை வெப்பத்தில் இருந்து காப்பற்றும் சுவிட்சர்லாந்து போலீசாரின் முயற்சி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
    ஜூரிச்:

    ஐரோப்பிய நாடுகளில் தற்போது காற்றில் வெப்ப அலைகள் வீசுகிறது. இதனால் சுவிட்சர்லாந்தில் 1864-ம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் கோடை கால வெப்பம் பதிவாகியுள்ளது.

    எனவே வெப்ப அலைகளில் இருந்து தங்களது செல்ல பிராணியான நாய்களை காக்க ‘ஹாட் டாக் கேம்பைன்’ எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை ஜூரிச் நகர போலீசார் தொடங்கி உள்ளனர்.

    நாய்களை வெளியே அழைத்து செல்வதற்கு முன்பு வெப்ப அளவு எவ்வளவு என்பதை அறிய தங்களின் கைகளை 5 நொடிகள் தொடர்ந்து நிலத்தில் வைத்து பரிசோதியுங்கள். வெப்ப அலைகளில் இருந்து நாய்களை காக்க அவற்றுக்கும் ‘ஷு’ அணியுங்கள்.

    சாலைகளில் உள்ள நடைபாதைகள் மிகவும் சூடாக இருக்கும் எனவே உங்கள் 4 கால் நண்பர்களை காக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பலரும் பாராட்டியுள்ளார்.

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் தென்மேற்குபருவமழை தொடங்கி உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இப்போது அங்கும் கன மழை இல்லை. அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய உள்ளது.

    கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இரவிலும் அனல் தகிக்கிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது வலு இழந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பான வெயிலை விட 3 டிகிரி அதிகரிக்கும்.

    வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வெப்பம் அதிகரிக்க கடல் காற்று மிக தாமதமாக வீசுவதே காரணம். அதேபோலத்தான் அடுத்த 3 நாட்களுக்கு வீசும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று வெயில் கடுமையாக இருந்தது. அதன் காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடினார்கள்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கலவை 2 செ.மீ., எண்ணூர், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லாறு, நெய்வேலி தலா 1 செ.மீ. 
    கரூரில் நேற்று கோடை மழை கொட்டி தீர்த்தது. இரவில் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கோடை வெயில் 106,107 டிகிரி பதிவானது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமே என பயந்தனர். 

    இந்த நிலையில் வாட்டி வதக்கிய கோடை வெப்பத்தை கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை தணிய வைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு 4,5 தினங்கள் கனமழை பெய்தது. மேலும் சாரல் மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கரூர் நகர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. 1 மணிநேரம் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக பட்சமாக கரூரில் 33 மி.மீட்டர் மழை பதிவானது. அதேபோன்று அரவக்குறிச்சியில் 1.2மி.மீ., அணைப்பாளையத்தில் 7மி.மீ., பாலவிடுதியில் 8.4மிமீ., க.பரமத்தியில் 24.2மி.மீ., மயிலம்பட்டியில் 16 மி.மீட்டர் மழை பதிவானது. 

    மழையின் காரணமாக கரூர் வெங்கமேடு, பாலம்மாள்புரம் போன்ற பகுதியில் வெள்ளம் ஆறாக ஓடியது. பாலம்மாள்புரம் ரெயில்வே பாலத்தின் அடியில் வெகுநேரம் வெள்ளம் தேங்கி கிடந்தது. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையின் காரணமாக இரவில் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவியது. குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
    ×