search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதராசப்பட்டணம்"

    மதராசப்பட்டணம், சென்னப்பட்டணம் பெயர் சூட்டப்பட்ட காரணங்களை விரிவாக பார்க்கலாம். #MadrasDay #ChennaiDay
    செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டான பிரான்சிஸ் டே வாங்கியபோது, அதன் அருகில் சில மீனவ குடும்பங்களும், இரு பிரெஞ்சு கத்தோலிக்க பாதிரியார்களும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மதராசன் என்றும், அந்த நபரின் பெயரை வைத்தே, மதராசப்பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில், வேறொரு பெயர் காரணமும் கூறப்படுகிறது. அதாவது, சாந்தோமில் வசித்து வந்த போர்த்துகீசியர்களின் ‘மாத்ரா’ என்னும் செல்வாக்குமிகுந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் பிரான்சிஸ் டே காதல் வயப்பட்டிருந்தார் என்றும், தனது காதலியின் குடும்பப் பெயரை வைத்தே இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    அதேபோல், எழும்பூரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கும், கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவுக்கு சொந்தமானது என்றும், அதை வாங்க தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் தங்களின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை புதிய குடியிருப்பு பகுதிக்கு வைத்தால், கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுப்பதாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு சம்மதித்த பிறகே, பட்டா எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், உறுதியளித்தபடி சென்னப்பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  #MadrasDay #ChennaiDay
    ×