search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரர்கள்"

    உத்தரப்பிரதேசத்தில் போலி கற்பழிப்பு புகாரில் பல வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்த சகோதரர்கள் 2 பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த சகோதரர்கள் சாம்சிங், ஜெய்சிங். இவர்களது உறவு பெண் ஒருவர் சகோதரர்கள் இருவர் மீதும் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

    2001-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சகோதரர்கள் இருவரும் தன்னை வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டுக்கு இழுத்து சென்றதாகவும், அங்கு வைத்து அவர்கள் கற்பழித்ததாகவும் புகாரில் கூறி இருந்தார்.

    இரு வாலிபர்களும் எனது கைகளை கட்டிப்போட்டு விட்டு அவர்களின் தாயார், மனைவி, குழந்தைகள் முன்னிலையில் கற்பழித்தனர் என்றும் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு முதலில் பரிதாபாத் முதன்மை கோர்ட்டில் நடந்தது. அதில், இருவரையும் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால், அந்த பெண் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது மறுபடியும் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு விசாரணை நடத்தி 2011-ம் ஆண்டு சகோதரர்களில் சாம்சிங்குக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெய்சிங்குக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கியது.

    ஐகோர்ட்டில் அப்பீல் செய்த போது அந்த கோர்ட்டும் கீழ் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தது. இதனால் 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் ரமணா, மோகன் சந்தான கவுடர் ஆகியோர் குற்றவாளிகள் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டனர்.

    மேலும் அந்த பெண் போலியாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். இதை சரியாக விசாரிக்காமல் போலீசார் வழக்கு ஜோடித்துள்ளனர் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

    சகோதரர்களில் ஒருவர் கோர்ட்டில் கூறும் போது, நான் அந்த பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தேன். மேலும் அந்த பெண் வேறு ஒரு வாலிபருடன் சுற்றினார். இதனால் அவரை தாக்கினேன். இந்த கோபத்தில் தான் எங்கள் இருவர் மீதும் கற்பழிப்பு புகார் கொடுத்துவிட்டார். ஆனால், நாங்கள் அவரை கற்பழிக்கவே இல்லை என்று சொன்னார்.

    இதை நீதிபதிகள் ஏற்று கொண்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறியதாவது:-

    இரு வாலிபர்களும் தங்களது தாயார், மனைவி, குழந்தைகள் முன்னிலையில் தன்னை கற்பழித்ததாக அந்த பெண் கூறி இருக்கிறார். எந்தவொரு ஆணும் தங்களது மனைவி, தாயார், குழந்தைகள் முன்னிலையில் இன்னொரு பெண்ணை கற்பழிக்க வாய்ப்பு இல்லை.

    அடுத்ததாக அந்த பெண் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை. அவர் உடலில் காயம் ஏற்பட்டதாகவோ, வாலிபர்களின் உயிரணுக்கள் கிடைத்ததாகவோ, மற்ற அடையாளங்களோ இல்லை.

    எனவே, இது கற்பழிப்பு அல்ல, அந்த பெண் போலியாக புகார் கொடுத்து இருக்கிறார். போலீசாரும் அதை மேற்கொண்டு ஜோடித்திருக்கிறார்கள். இருவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    ஆனால், இவர்களில் ஜெய்சிங் ஏற்கனவே 7 ஆண்டு ஜெயில் தண்டனையை முடித்து விடுதலையாகி விட்டார். சாம்சிங் 10 ஆண்டு ஜெயில் தண்டனையில் 7 ஆண்டை முடித்திருந்தார். அவரை உடனடியாக விடுவித்துள்ளனர்.

    ஆனாலும், செய்யாத குற்றத்துக்காக அவர்கள் இருவரும் பல ஆண்டு ஜெயில் தண்டனையை அனுபவித்துள்ளனர்.
    கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். #KeralaFlood #Teenage #OfferLand
    திருவனந்தபுரம்:

    கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி வழங்கி வருகிறார்கள். பலர் பொருட்களாகவும், பணமாகவும் தங்களது ஆதரவுக்கரத்தை நீட்டி வருகிறார்கள்.



    கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.

    வடக்கு கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் சுவாகாவும், அவரது தம்பியும் சேர்ந்து கேரள முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளி முதல்வர் மூலமாக அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு சகோதரர்களின் தந்தையும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

    சகோதரர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க இருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.  #KeralaFlood #Teenage #OfferLand
    ×