search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொராக்கோ"

    வடமேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்-பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் சட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Morocco
    ரபாட்:

    வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் முப்படைகளின் தலைவராக மன்னர் விளங்கி வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன.

    பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட மந்திரிசபை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.

    சுமார் மூன்றரை கோடி மக்கள் வாழ்ந்துவரும் மொராக்கோவின் முதன்மை மதமாக இஸ்லாம் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அராபிய - பெர்பர் வம்சாவளியினராவார்கள்.

    அந்நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை கேட்டு வலியுறுத்தி சமீபகாலமாக போராட்டங்கள் பெருகி வருகின்றன. இது மன்னருக்கு எதிரான புரட்சியில் முடியலாம் என அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


    மன்னர் ஆறாம் முஹம்மது.

    இந்நிலையில், போராட்ட உணர்வுகளை குறைப்பதற்கும், நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மக்களுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை புரிய வைக்கவும் 19 முதல் 25 வயதுக்கு இடையிலான ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயமாக ஓராண்டு காலத்துக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் சட்ட முன்வரைவுக்கு மொராக்கோ மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கு பின்னர் மன்னர் கையொப்பமிட்ட பின்னர் இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது. #Morocco ##Moroccomilitary
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #SPAMOR
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் 14-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால்
    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. 

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸ்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் மொராக்கோ வெல்லும் என எதிர்பார்த்தனர்.

    ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட நிமிடங்களில் முதலிலேயே, 91வது நிமிடத்தில் ஸ்பெயினின் லாகோ அஸ்பாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
    இதனால் இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி கிடைத்தது. ஆனாலும், புள்ளிகள் அடிப்படையில் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றில் நுழைந்தது. அடுத்த சுற்றில் ரஷ்யா அணியுடன் மோதவுள்ளது.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அனியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று தொடங்குகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் உருகுவே 1-0 என எகிப்தை வீழ்த்தியது.

    இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் - மொராக்கோ அணிகள் மோதின. 



    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.

    2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து ஈரான் அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மொராக்கோ அணியின் பவுஹட்டவுஸ் தலையில் பட்ட பந்து கோலானது. இதனால் ஈரான் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    அதன்பின் மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஈரான் 1-0 என வெற்றி பெற்றது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN
    ×