என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 182172
நீங்கள் தேடியது "நெகிழ்ச்சி"
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை அங்கீகரித்து மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை மீனவர்கள் ஏற்க மறுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFlood #Fishermen #Refuse
திருவனந்தபுரம்:
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மத்திய-மாநில மீட்புக்குழுவினருடன் இணைந்து நூற்றுக்கணக்கான மீனவர்களும் சேவையாற்றி வருகின்றனர். மீட்புக்குழுவினர் செல்ல முடியாத இடங்களுக்கும் இவர்கள் தங்கள் படகுகளில் சென்று ஆயிரக்கணக்கான மக்களை மீட்டுள்ளனர்.
மீனவர்களின் இந்த தன்னலம் கருதாத சேவையால் மாநில அரசு மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளது. அவர்களின் பணியை வெகுவாக பாராட்டிய முதல்-மந்திரி பினராயி விஜயன், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களை ‘மாநிலத்தின் ராணுவம்’ என வர்ணித்துள்ளார்.
மேலும் அந்த மீனவர்களின் படகுக்கு தேவையான எரிபொருளை அரசே வழங்குவதுடன், ஏதாவது பழுது நேர்ந்தால் அரசு செலவில் சீரமைக்கப்படும் எனவும் அறிவித்தார். அத்துடன் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தங்கள் பணியை அங்கீகரித்து முதல்-மந்திரி வெளியிட்ட இந்த அறிவிப்பு, மீனவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தங்களுக்கு அறிவித்திருக்கும் ஊதியத்தை அவர்கள் ஏற்க மறுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த கியாஸ் முகமது என்ற மீனவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறுகையில், ‘எங்களின் சேவையை முதல்-மந்திரி பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பணி சவாலானது என்றாலும், அதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். மாநில அரசின் ராணுவம் என எங்களை புகழ்ந்திருப்பது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
எனினும் தங்கள் சேவைக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தருவதாக அறிவித்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய அவர், எங்கள் சகோதர-சகோதரிகளை காப்பாற்றுவது எங்களது கடமை என்றும், அவர்களின் உயிர்காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் என்றும் குறிப்பிட்டு உள்ளார். #KeralaFlood #Fishermen #Refuse

சமூக ஊடகங்களில் தன்னைப்பற்றிய தவறான பதிவுகள் வெளிவந்தாலும் அது தனது மேம்பாட்டுக்கு உதவுவதாக அமிதாப்பச்சன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். #AmitabhBachchan #SocialMedia
மும்பை:
நடிகர் அமிதாப்பச்சன், 75 வயதிலும் தீவிர சமூக ஊடக ஆர்வலர். அவற்றை தவறாக பயன்படுத்தி, தன்னைப்பற்றிய பதிவுகள் வெளிவந்தாலும் அது தனது மேம்பாட்டுக்கு உதவுவதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இது பற்றி அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதி இருப்பதாவது:-
சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்த எனக்கு நேரம் இல்லை. என் வேலைக்குத்தான் எனக்கு நேரம் இருக்கிறது. இவற்றில் என்னை தவறாக பதிவு செய்வதை கண்டுகொள்வதற்கு எனக்கு நேரம் இல்லை. உள்ளபடியே இதை நான் நேசிக்கிறேன். என் நல்லதுக்கு இது தூண்டுகிறது.
நான் பெருமைப்பட, என்னை மேம்படுத்திக்கொள்ள, என் நடத்தைக்கு, நான் நின்று கொள்வதற்கு, என் கண்ணியத்துக்கு இது தூண்டுகோலாய் அமைகிறது. இதில் என்னைப்பற்றி தவறாக சொல்வது, இதற்கெல்லாம் வழிநடத்தும் என்றால் நான் அவற்றை பதிவு செய்கிறவர்களுக்கு நன்றிக்கடன்பட்டு உள்ளேன்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். #AmitabhBachchan #SocialMedia

×

X