என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 182235"

    • நெற்குப்பையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இதில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,பேரூராட்சி சேர்மன் அ.புசலான், துணைச் சேர்மன் கே.பி.எஸ். பழனியப்பன், செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • அரசு பள்ளியில் படிப்பதே பெருமை என்ற நிலை முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சா் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியா் பள்ளியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார். இருப்பினும், மாண வா்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

    இதன்மூலம் ஏராள மானோா் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அதன் தொடா்ச்சியாக, முதலமைச்சராக இருந்த அண்ணா ஓர் ஆசிரியா் பள்ளியை ஈராசிரியா் பள்ளியாக தரம் உயா்த்தினார்.

    அவரது வழியில் செயல்பட்ட கருணாநிதி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி புதிய வரலாற்றை உருவாக்கினார்.

    அதேபோல் மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தினை ஏற்படுத்தி உள்ளார்.

    மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச்சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பஸ் பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகிறது.

    அதன்படி, அவா்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    தற்போது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் படிப்பதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தை களைந்து அரசுப்பள்ளியில் குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும்.

    பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த ப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனா். இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுவாமிநாதன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வாி, சுருளிமூர்த்தி, சகாதேவன், பெற்றோர், ஆசிரியா் கழகத்தலைவா் சக்கரவா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் விழா நடைபெற்றது.
    • வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம், வெள்ளகோவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு உத்தமபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 101 மிதிவண்டிகளும், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சேடன்குட்டை பழனிச்சாமி, கவிதா, திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி. சிவக்குமார். அன்பரசன்.ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், பள்ளி தலைமையாசிரியர்கள் குணசேகரன், மனோன்மணி உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • இதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சித்ரா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டது.

    இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? யார் சைக்கிள் வழங்குவது? என வாக்குவாதம் ஏற்பட் டது. மேலும் மேடையில் தி.மு.க. மாவட்ட கவுன் சிலர் புஷ்பராணிக்கு பொன் னாடை அணிவித்தனர்.

    மேலும் ஏற்காடு டவுன் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்திக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அ.தி.மு.க.வினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தி.மு.க. வினரும் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே இருதரப்புக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக சைக்கிள் பெற மாணவ-மாணவிகள் வெயிலிலேயே காத்திருந்து அவதிப்பட்டனர். ‌ இதை தொடர்ந்து சித்ரா எம்.எல்.ஏ. எங்களை ஒரு மணிநேரம் காக்கவைத்து அவமானப்படுத்தும் வகையில் நடப்பதா என பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் உடனடியாக அங்கிருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்க லாம் எனவும், தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமான ப்படுத்தி யதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர்.

    இதனால் பள்ளி வளாகத் தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக் குள்ளாகினர்.

    • விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 171 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமச் சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் எஸ்.என்.குமார், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, 13-வது வார்டு கவுன்சிலர் ஆதிலிங்கபெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீதாராமன், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், பேரூர் தலைவர் கிங்ஸ்லின், பேரூர் அ.தி.மு.க. செயலர் சிவபாலன், மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள்.
    • 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்து தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் வீட்டில் இருந்து வரும் காலகட்டத்தில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் பந்தயப் புறாக்கள், மற்றும் லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பறவைகளுக்கான கூண்டு தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகிறார் அதிகமான வெளிவட்டார பழக்க வழக்கங்களை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் பறவைகளோடு மகிழ்ந்து விளையாடுவது அவருக்கு வாடிக்கையாகும்

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார் இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து அந்த முழு தொகையையும் கொண்டு ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் இரண்டு காரில் ஏற்றிக்கொண்டு கடைக்குச் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்

    இதுகுறித்து இளைஞர் சந்தோஷ் குமார் நிருபர்களிடம் தெரிவித்த போது, பத்து ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்க மறுப்பதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனம் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் சந்தோஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு, கொடுவாய், கேத்தனூர் மற்றும் பொ.வெ.க அரசு உதவி பெறும் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், கேத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஹரி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். விழாவின்போது மொத்தம் 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரியா புருஷோத்தமன் ,லோகு பிரசாந்த் மற்றும் உகாயனூர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி

    திருவெண்காடுசுவேதாரணேஸ்வரர்அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.

    சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், தொழிற்சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் சி கே பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மூத்த ஆசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.

    • 1842 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
    • படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி, எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டு ஏராளமான மாணவ-மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். அதே போல் நீங்கள் கல்லூரி படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேஷ் பாண்டியன், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர்உசேன், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
    • 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூா் கல்வி மாவட்டத்தில் உள்ள 8 அரசு பள்ளிகளில் பயிலும் 1,663 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூா் கல்வி மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிஷப் உபகரசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூரியப்பம்பாளையம் செ.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உளளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

    போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்தார்.

    இந்த சைக்கிள் போட்டி கள், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு - ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு - ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு பரிசு - ரூ.250/- காசோலையையும் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படுகின்றன.

    • பிளஸ்-1 பயிலும் 8,193 மாணவர்கள், 8,559 மாணவிகள் என மொத்தம் 15,752 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-1 பயின்ற மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா இன்று (வியாழக்கிழமை) தக்கலை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

    2021-22-ம் கல்வி யாண்டில் குமரி மாவட்ட த்தில் உள்ள 140 அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் 8,193 மாணவர்கள், 8,559 மாணவிகள் என மொத்தம் 15,752 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது என விழாவில் தெரிவிக்க ப்பட்டது.

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அலு வலர் சிவபிரியா, பத்ம நாபபுரம் சப்-கலெக்டர்அலர் மேல்மங்கை, பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர்அருள் சோபன், கவுன்சிலர் ஜெயசுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் தக்கலை மாவட்டக்கல்வி அலுவலர் எம்பெருமாள் அவர்கள் நன்றி கூறினார். 

    ×