search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்ரான்கான்"

    • நீதிபதியை மிரட்டியதாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இம்ரான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • பெண் நீதிபதி விடுமுறையில் உள்ளதால் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

    மேலும் காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதால் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தமது பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து அவர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமது பேச்சிற்காக மன்னிப்பு கேட்க இன்று அவர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் ஆஜரானார். நான் நீதித்துறை மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரியிடம் மன்னிப்பு கேட்க வந்துள்ளேன் என்று தமது டுவிட்டர் பதிவில் இம்ரான் குறிப்பிட்டிருந்தார்.

    எனினும் நீதிபதி விடுப்பில் இருப்பதாக நீதிமன்ற ஊழியர்கள் இம்ரான்கானிடம் தெரிவித்தனர். இதையடுத்து இம்ரான் கான் வருகை தந்ததாகவும், அவரது வார்த்தைகள் நீதிபதியின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், இதை நீதிபதி ஜெபா சவுத்ரியிடம் நீங்கள் சொல்ல வேண்டும், என்று கேட்டுக் கொண்ட இம்ரான்கான் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

    • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • மோசமான வானிலையால் இம்ரான்கான் பயணித்த விமானம் தரையிறக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டார்.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு திரும்பியது. இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து குஜ்ரன்வாலா சென்ற இம்ரான்கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதுதொடர்பாக விளக்கமளித்த இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக வெளியான தகவல் தவறானது. மோசமான வானிலையால் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
    • இம்ரான்கானுக்கு செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான்கான், போலீஸ் உயர் அதிகாரிகளையும், நீதிபதியையும் மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, இம்ரான்கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட் இம்ரான்கானுக்கு 3 நாள் முன் ஜாமீன் வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் இன்றுடன் நிறைவடைவதால் அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை நீட்டித்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • இம்ரான்கான் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இம்ரான்கான் பொதுக்கூட்ட உரையை ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது

    இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

    • எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.
    • விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் அவர் திடீரென கத்தியால் குத்தப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75), மீது கடந்த வாரம் அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார்.

    இந்த தாக்குதலில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.

    இந்நிலையில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய இம்ரான்கான், இச்சம்பவம் பயங்கரமானது, துயரமானது. சல்மான் ருஷ்டி மீதான கோபம் புரிந்துகொள்ளக் கூடியது. ஆனாலும் இந்த தாக்குதல் நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

    • லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை வெளியிட்டு பாராட்டினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்தபோதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள் என பேசிய இம்ரான்கான், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்.

    அந்த வீடியோவில் கச்சா எண்ணெய் வாங்குவது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், நீங்கள் யார்? ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு என கூறிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இதைத்தொடர்ந்து பேசிய இம்ரான்கான், ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை நான் எதிர்க்கின்றேன் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் சமீபத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • இதில் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

    காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது.

    இந்நிலையில், சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

    சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. 

    • பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது.
    • இதனை எதிா்த்து போராட்டம் நடத்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்தாா்.

    இஸ்லாமாபாத்:

    அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு, அதிக அளவு பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. அங்கு நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போராட்டக்காரர்களோடு காணொளி மூலம் உரையாடினாா். அப்போது அவர் பேசியதாவது:

    நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படாவிட்டால் மேலும் குழப்பம் பரவும். முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும்.

    தற்போது உள்ள அரசானது பொருளாதாரத்தைக் கையாளும் திறனற்றது. வரும் நாட்களில் விலைகள் அதிகமாக உயரும் என குறிப்பிட்டார்.

    பாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே கடந்த திங்கள் அன்று பாராளுமன்றம் கூடியது. இம்ரான் கான் உள்பட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணி அமைக்கும் வேலைகள் முடிந்த நிலையில், நாளை இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடந்தது. 

    பாராளுமன்றத்தின் உள்ளே வந்த இம்ரான் கானுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வாக்கெடுப்பை புறக்கணிக்கப்போவதாக முதலில் அறிவித்தது. இதனை அடுத்து, அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அவரை பாக். முஸ்லிம் லீக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

    இதற்கிடையே, பல தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சில பாக். முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் நிலவியது. 

    ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கான் கூட்டணி வசம் 151 எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியமைப்பதற்கான உரிமை மசோதாவை பிடிஐ கட்சி தாக்கல் செய்தது. 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 

    பாக். முஸ்லிம் லீக் கட்சிக்கு 96 வாக்குகள் கிடைத்தன. பூட்டோவின் பாக். முஸ்லிம் லீக் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதன் மூலம் அவர் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.
    பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக உள்ள இம்ரான்கானுக்கு புதிய தலைவலியாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன. 

    ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.

    ஒரு வழியாக கூட்டணி அமைந்த நிலையில், வரும் 11-ம் தேதி இம்ரான்கான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. பாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.



    பிரதமராக பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 137 இடங்கள் அவரின் வசம் இருப்பதால் அதில் சிக்கல் இருக்காது என கூறப்பட்டது. இந்நிலையில், தோல்வியடைந்த இரு முக்கிய கட்சிகளும் தற்போது கைகோர்த்துக்கொண்டு இம்ரானுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன.

    பாக். முஸ்லிம் லீக் மற்றும் பாக். மக்கள் கட்சி வசம் 107 இடங்கள் தற்போது உள்ளன. போட்டி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற கூடுதலாக 30 இடங்கள் தேவை என்பதால், இந்த இடத்திலும் சிறிய கட்சிகளின் தயவை இரு கட்சிகளும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

    எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை சாத்தியமாகாது என உறுதியாக கூற முடியும் என்றாலும், இம்ரான்கான் பக்கம் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகள் பக்கம் கைகோர்க்கும் நிகழ்வும் நடக்கலாம். இதனால், வாக்கெடுப்பு நடந்து முடியும் வரை இம்ரான்கானுக்கு தூக்கம் இருக்காது.



    சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கினால் அவர்களை திருப்திபடுத்தலாம் என்ற திட்டமும் இம்ரான்கானின் மனதில் உள்ளது. எனினும், தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    பிரதமராக இம்ரான்கான் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடலாம். இதனை அவர் எப்படி கையாள போகிறார் என்பது போக போக தெரியவரும்.

    ஆனாலும், பாகிஸ்தானின் அரசியல் என்பது யாரும் எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதால் அந்நாட்டு அரசியல் சூழல் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வருகிறது. 
    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கலாமா? என்ற ஆலோசனையில் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. #ImranKhan #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளது. வரும் 11-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

    ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இதற்கான பணியில் தீயாய் வேலை செய்து வருகின்றன. சீனா, துருக்கி நாட்டு தலைவர்கள் வருகை தருவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

    அதேபோல, இம்ரான்கானும் இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தால் சிக்கல் இல்லை. ஆனால், வராமல் புறக்கணித்துவிட்டால் அவமானம் என்பதால் மிகுந்த ஆலோசனைகள் நடந்து வருகிறது.



    கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் தனது விளையாட்டு காலத்தில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும், அவர்கள் பங்கேற்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் இம்ரான்கானை தொடர்புகொண்டு பேசிய மோடி, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதனால், மோடியை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றே இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.

    அழைப்பை ஏற்று அங்கே சென்றால் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பதால், வெறும் வாழ்த்து மட்டும் மோடி கூறவும் வாய்ப்பு உள்ளது. திடீரென விமானத்தை எடுத்துக்கொண்டு இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானை கட்டி தழுவி வாழ்த்து கூறவும் வாய்ப்பு உள்ளது.
    பாகிஸ்தான் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அடுத்து ஆட்சியமைக்க உள்ள இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #ImranKhan
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வென்றது. பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் உதவியுடன் இம்ரான்கான் ஆட்சியமைக்க உள்ளார். வரும் 11-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், இம்ரான்கானிடம் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது, பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமான வேர் விடட்டும் என மோடி கூறியுள்ளார். 

    காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசி தீர்க்க தயாராக இருப்பதாக இம்ரான்கான் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×