என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 183393
நீங்கள் தேடியது "இம்ரான்கான்"
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக உள்ள இம்ரான்கான், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி உடன் கை குலுக்கிய சம்பவத்தில் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. #ImranKhan #PMModi
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தெஹரிக்-இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வென்று கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. அந்த கட்சியின் தலைவரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கான் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
புதிய பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் அமைதி முயற்சியைத் தொடர விரும்புவது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் ராணுவமும், புதிய அரசும் தீவிரவாதத்தை குறித்து எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்ற போதும், தெற்காசியாவை பயங்கரவாதம் மற்றும் வன்முறையற்ற பிரதேசமாக்க ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.
இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாழ்த்து இரு நாடுகளுக்கு இடையே தற்போது உடைந்து கிடக்கும் உறவை ஒட்ட வைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், இம்ரான்கான் - மோடி ஏற்கனவே சந்தித்து கை குலுக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கை குலுக்கல் சம்பவத்தை விட அது நடந்த போது இருந்த சூழலே இங்கு முக்கியமானது.
கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, இம்ரான்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார் என்பதை அறியாத இம்ரான்கான் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
திடீர் அதிர்ச்சியாக இம்ரான்கானுக்கு வலது பக்கத்தில் மோடி வந்து அமர்ந்துள்ளார். அதன் பிறகே இருவருக்கும் ஒரே நேரம் ஒதுக்கப்பட்டுள்ள செய்தி இம்ரான்கானுக்கு தெரிந்துள்ளது. குஜராத் கலவரம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என மோடி மீது ஒரு அடையாளம் படிந்திருந்தது.
இதனால், மோடியுடன் தான் இருப்பது போன்ற புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானால் தனது நாட்டில் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என நினைத்த இம்ரான்கான் மோடியை கண்டும் காணதது போல இருந்துள்ளார். மோடியும் அவ்வாறே இருக்க ஏதோ ஒரு புள்ளியில் இருவரது பார்வையும் மோதின.
அப்போது, உடனே மோடி இம்ரான்கானின் கையை தனது கைகளால் எடுத்து கை குலுக்கியுள்ளார். இதனை சிறிதும் எதிர்பாராத இம்ரான்கான் வாயடைத்து போயுள்ளார். எனினும் ஒரு இறுக்கமான சூழல் விலகியதால், இருவரும் பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்களும், மோடிக்கு கை கொடுக்கும் போது ஒருவித குமட்டலான மனநிலையை இம்ரான்கான் கொண்டிருந்ததாகவும் இம்ரான்கானின் சுயசரிதை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘இம்ரான் v இம்ரான்’ என்ற புத்தகம் ப்ராங் ஹஸுர் என்பவரால் எழுதப்பட்டதாகும்.
2014-ம் ஆண்டு சந்திப்பு
2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போது, பாகிஸ்தானின் முக்கிய கட்சியாக இம்ரான்கானின் கட்சி அவதாரம் எடுத்தது. நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்த இம்ரான்கான் மோடியை சந்தித்து பேசினார். முக்கியமாக மோடியிடம் கை குலுக்கினார். அப்போது இம்ரான்கானின் மனநிலை என்ன? என்பது அவருக்கே தெரிந்த ஒன்று.
2006-ம் ஆண்டில் மோடி உடனான கை குலுக்கல் இம்ரான்கானுக்கு ஒரு விதமான மனநிலையை தந்திருந்தாலும், இப்போது அவர் பிரதமரான பின்னர் ஒருவேளை இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் போது கை குலுக்கினால் என்ன மனநிலையில் இருப்பார்? என்பது இம்ரான்கானுக்கே வெளிச்சம்.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ள இம்ரான்கானின் கட்சி, பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறது. #PakistanElection #ImranKhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து கடந்த புதன் கிழமை தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. எனினும், 50 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டதும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் ஓட்டு எண்ணப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தல் முடிவை ஏற்கப்போவதில்லை என அறிவித்தன. தேர்தலில் குளறுபடி நடந்து இருப்பதாக குற்றம் சாட்டின.
உலகக்கோப்பை வென்ற கேப்டனாக இம்ரான்கான்
இதற்கிடையே நிறுத்தப்பட்ட ஓட்டு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. தற்போது வரை 95 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இம்ரான்கானின் பிடிஐ கட்சி 115 இடங்களிலும், பாக். முஸ்லிம் லீக் கட்சி 62 இடங்களிலும், பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அறிவித்தாலும், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக பாடுபட தயார் என பாக். முஸ்லிம் லீக் கட்சி கூறியுள்ளது. இதனால், இம்ரான்கான் பிரதமராவதற்கு எந்த பிரச்சனையும் இல்லாத நிலை உள்ளது.
எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகள் தேவை. ஆனால், இம்ரான்கானின் வசம் தற்போது 115 தொகுதிகள் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முழுவதும் முடிந்தாலும், அவருக்கு இன்னும் கூடுதலாக 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனினும், 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உடனான பேச்சுவார்த்தையை அவர் மேற்கொண்டு வருகிறார். சுமார் 15 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் வளைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசி வருகிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் இம்ரான்கான்
தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
இந்த நம்பிக்கையில் தான் மந்திரிசபையில் யார் யாருக்கு இடம், அரசின் முக்கிய பதவிகள் யாருக்கு? போன்றவை குறித்தும் அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் விவாதித்து வருகிறார். பிரதமராக அவர் தனது இன்னிங்சை தொடங்கியதும் பல சவால்கள் காத்திருக்கின்றன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டியதில் அமெரிக்காவின் அச்சுறுத்தல், எல்லை பாதுகாப்பு, பொருளாதார சரிவு ஆகிய பல பிரச்சனைகளை அவர் உடனே சரிசெய்ய வேண்டிய சூழல் அவசியமாக உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு மாறாக பஞ்சாப் மாகாண சபை தேர்தலில் இம்ரான்கான் கட்சியை விட நவாஸ் ஷரீப் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. எனினும், ஷரீப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை மடக்கி அங்கும் ஆட்சியமைக்க இம்ரான்கான் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. #PakistanElection #ImranKhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.
ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்தது. பெரும்பாலான இடங்களில் அந்த கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெற்று வந்தனர். அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 102 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 43 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
இன்னும் சில மணிநேரத்தில் வெற்றி நிலவரங்கள் வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1996-ம் ஆண்டு கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை போட்டியிட்ட மூன்று பொதுத்தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றி அந்த கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PakistanElection #ElectionPakistan2018
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.
ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
குறிப்பாக இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ஷாகித்கான் அப்பாஸியை விட சுமார் 800 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது. 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும்.
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் குண்டுவெடிப்பு, வன்முறை பரபரப்புகளுக்கு இடையே வாக்குப்பதிவு 6 மணியளவில் முடிந்தது. #PakistanElections2018
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபையில் உள்ள 270 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மேலும், மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. அரசியல் பரபரப்பு, ராணுவ ஆட்சி அச்சுறுத்தல், பயங்கரவாதிகளின் தாக்குதல் என பல நிகழ்வுகளுக்கு இடையே இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பாராளுமன்ற இடங்களுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும், குவெட்டா பகுதியில் வாக்குசாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 31 பேர் பலியாகினர். மேலும், சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. 24 மணிநேரத்துக்குள் முழு வெற்றி நிலவரமும் தெரிய வரும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X