என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினம்"

    • 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன.
    • நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    கோவை:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதர் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

    மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்த பட்சம் ரூ. 30 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றார்போல் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    இது குறித்து தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.

    நாங்கள் மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லர்களுக்கு அவற்றை பிரித்து வழங்குகிறோம். அவர்கள் அளவுக் கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பி தருவர். நாங்கள் அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கீரின்பிரிண்டிங் செய்து கொடிகளை தயாரிக்கிறோம்.

    கொரானா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25 ஆயிரம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை. 2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் வருகின்றன. இதனால் டெய்லர்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சி கொடிகளின் ஆர்ட ர்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயா ரிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவர்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்கு வைத்து ள்ளோம். இவற்றுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.

    இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாலா கூறியதாவது:-

    நாங்கள் தயாரிக்கும் தேசியக் கொடிகள் கோவை மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு மொத்தமாக 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் பெறப்பட்டன.

    நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பெறப்பட்ட ஆர்டர்க ளின் பேரில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்கள் அதிக அளவில் பெறப்பட்டு வருவதால் இந்த ஆண்டும் 1 லட்சம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
    • விருது வருகிற 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்த வரும், 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேடினாலிஸ்ட் (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணிக்கு 2023-ம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

    "தகைசால் தமிழர்" விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட கி. வீரமணிக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கன்னாவின் பாட்டனார் ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்
    • பல்வேறு துறையை சேர்ந்த முக்கியஸ்தர்களை இந்த குழு சந்திக்கிறது

    இம்மாதம் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றுவார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த ஒரு குழு வருகிறது.

    இந்திய மற்றும் இந்திய அமெரிக்கர்களின் நலனுக்கான அமெரிக்கா பாராளுமன்ற அமைப்பின் தலைவர்களான அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் ஆகிய இருவர் இக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.

    இவர்களுடன் டெபோரா ராஸ், கேட் கம்மாக், ஸ்ரீ தானேதார், ரிச் மெக்கார்மிக், எட் கேஸ் மற்றும் ஜாஸ்மின் க்ராக்கெட் ஆகியோர் இணைந்து வருகின்றனர்.

    இவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிறகு, இந்தியாவின் வர்த்தக, தொழில்நுட்ப, அரசாங்க, மற்றும் திரைத்துறை பிரமுகர்களை மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் சந்திக்க இருக்கிறார்கள். மேலும், புது டெல்லியில் உள்ள ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்திற்கும் செல்கிறார்கள்.

    "இப்பயணத்தில் இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் பல பிரமுகர்களை சந்திக்க இருக்கிறோம். இந்தியாவிற்கு இந்த குழுவினருடன் வருவதும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதும் ஒரு பெருமைக்குரிய செயல். என் பாட்டனார் அமர்நாத் வித்யாலங்கர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பயணம். இந்திய-அமெரிக்க உறவில் இது ஒரு மைல்கல்" என இந்த வருகை குறித்து ரோ கன்னா கருத்து தெரிவித்தார்.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டது
    • பயணிகள் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்க உடனே முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை (12-ம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (13-ம் தேதி) தொடர்ந்து, வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் மற்றும் ஆடி மாதம் கோவில் திருவிழாக்களுக்குச் செல்லவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. வெளி ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பஸ்களை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும். மேலும், பயணிகள் சிரமமின்றி, பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    8-ம் தேதி அன்று (நேற்று) வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுநாள்வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 11-ம் தேதி 18,199 பயணிகளும், 12-ம் தேதி 6,949 பயணிகளும் மற்றும் 13-ம் தேதி 4,514 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

    பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 11-ம் தேதி கூடுதலாக 500 பஸ்களும் மற்றும் 12-ம் தேதி 200 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி, 15-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்ள இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகாசியில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும்.

    சிவகாசி

    சுதந்திர தின கொண்டாட் டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களி–லும் தவறாமல் இடம் பிடிப் பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல. விருதுநகர் மாவட்டம் சிவ–காசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக் கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிக–ளும் விறுவிறுப்பாக நடை–பெற்று வருகிறது.

    சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடி–கள், வார்னிஷ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தயாராகி வருகின்றன. சட் டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புக–ளில் பொருத்தும் வகையி–லான அட்டையால் தயாரிக் கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வரு–கின்றன. மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்து–டன் கூடிய தேசிய கொடி–கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்து–டன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப் பட்டு வருகின்றன. மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகை–யில் தேசியக் கொடிகள், கைகளில் மாட்டிக் கொள் ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட் டுள்ளன.

    தேசிய கொடிகள் தயா–ரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையா–ளர் கூறும்போது, எங்களது அச்சகத்தில் பல்வேறு வகை–களிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக் கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரப–லமான பள்ளிகள், கல்லூரி–களில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கா க தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள். பொதுமக்கள் பயன்ப–டுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்க–ளிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது. படிப்படியாக தமிழகம் முழு–வதும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை சட்டைக–ளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது. இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடை–களில் விற்பனை செய்வ–தற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.

    ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடி–கள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ் வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது. பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த–வில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடி–கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வரு–கின்றன என்றார்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • சென்னைக்கு 75 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கம் செய்யப்படுகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழகத்தின் மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமு–கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

    வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை வரு–வதை முன்னிட்டு வருகிற 11.8.2023 முதல் 15.8.2023 வரை திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல் வேவறு பகுதிகளுக்கு 200 பேருந்துகளும்,

    சென்னையில் இருந்து 11 மற்றும் 12-ந்தேதிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களுக்கு 85 பேருந்துகளும், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினவிழா முடிந்து 15.8.2023 அன்று ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களிலிருந்து சென் னைக்கு 75 சிறப்பு பேருந்து–கள் பயணிகளின் தேவைக் கேற்ப இயக்கம் செய்யப்ப–டுகிறது.

    மேலும் 16.8.2023 அன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டும் மதுரை கோட்ட இயக்க பகுதிகளிலி–ருந்து தாணிப்பாறை சுந்தர மகாலிங்கம் கோவில், இருக் கன்குடி மாரியம்மன் கோவில், மாசாணியம்மன் கோவில், ராமேசுவரம் கோவில் மற்றும் பிற பகு–திகளுக்கு பயணிகளின் தேவைக்கேற்றார்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.

    பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், பயணிகளுக்கு வழிகாட்டவும், சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க–வும், முக்கிய பேருந்து நிலை–யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், பணியா–ளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பிரீபெயிட் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஜியோவின் புதிய வருடாந்திர சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி புதிய வருடாந்திர ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய வருடாந்திர பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 சுதந்திர தின சிறப்பு சலுகைகளின் பலன்கள் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை பலன்களை விட வித்தியாசமாக உள்ளது. ஜியோ சுதந்திர தின சலுகையின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

     

    ரூ. 2 ஆயிரத்து 999 ஜியோ சலுகை பலன்கள்:

    ஸ்விக்கியில் ரூ. 249 மதிப்பிலான ஆர்டர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி

    யாத்ராவில் மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடி

    யாத்ராவில் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு 15 சதவீதம், அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி

    ஏஜியோ தளத்தில் ரூ. 999 மதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ. 200 தள்ளுபடி

    ரூ. 999-க்கும் அதிக தொகை கொண்ட நெட்மெட்ஸ் ஆர்டர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி

    ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்வு செய்யப்பட்ட ஆடியோ பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • விழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய கொடியுடன் பங்கேற்றனர்.

    75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை டெல்லியில் பாரதீயஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தபட்டது. இதில் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய கொடியுடன் பங்கேற்றனர். பிரகதி மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி இந்தியா கேட் பகுதியில் முடிவடைந்தது. இந்த பேரணியை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.இதில் மத்திய மந்திரிகள் , எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    • மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
    • கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக் டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் அரசு மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும். மேற்படி நாளில் அனைத்து பார்கள் மற்றும் அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும். மேலும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை மேற்கொண்டால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கள் மற்றும் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்.
    • சுதந்திர தினத்தன்று விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் 15ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அனைத்து மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவித்து இருக்கிறது.
    • சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ஆகஸ்ட் 12-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இவை வி அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    வி சுதந்திர தின சலுகை விவரங்கள்:

    ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50 ஜிபி வரையிலான டேட்டா.

    ரூ. 50, ரூ. 75, ரூ. 1449 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 099 ரிசார்ஜ்களுக்கு உடனடி தள்ளுபடி.

    வி செயலியில் "ஸ்பின் தி வீல்" பரிசு போட்டி நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு ரிசார்ஜ் சலுகைகள் அல்லது டேட்டா பேக், சோனிலிவ் சந்தா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வி செயலியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

    • சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
    • தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்றும் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. கடலோர பகுதிகளிலோ அல்லது கடல் பகுதியிலோ மர்மமான முறையில் ஏதாவது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மீனவ கிராமங்களையொட்டி உள்ள போலீசாரும் மரைன் போலீசாரும் கூட்டாக மீனவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.

    சுதந்திர தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கடந்த வாரம் முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விடுதிகளில் தங்குபவர்கள் பற்றிய முழு விவரங்களையும் லாட்ஜ் உரிமையாளர்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கோவில்கள் அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் நாச வேலைக்கு யாரேனும் திட்டமிட்டு உள்ளார்களா? என்பதை கண்டறிந்து அதனை முறியடிக்கும் வகையில் ரெயில்வே போலீசார் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைக்கிறார். இதையொட்டி, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கைகளை வருகிற 16-ந் தேதி வரை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    ×