search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பஸ் நிலைய ரோட்டில் சிலுவை நகர் அருகே டாஸ்மாக் அரசு மது கடை பக்கம் நடுரோட்டில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கவிழ்ந்து கிடந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்1.45 மணிக்கு அந்த வழியாக வந்த யாரோ சில நபர்கள் பார்த்து இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதாவது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாரா? அல்லது யாராவது சமூக விரோத கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான இன்று காலை 1008 சங்காபிஷேகம் நடந்தது.இதையொட்டி காலை கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் தொடர்ந்து சங்குபூஜை நடந்தது. அப்போது சிவபெருமானின் பஞ்சலோக முக கவசம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் முன்னால் நெல் மற்றும் மலர்கள் பரப்பி அதன் மேலே 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவில் வடிவமைத்து இருந்தது. அந்த சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை நடத்தப்பட்டது.

    கோவில் தலைமை அர்ச்சகர் ராஜாமணி அய்யர் மற்றும் சிவாச்சாரியர்கள் இந்த சங்கு பூஜையை நடத்தினர். பின்னர் குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் அலங்கார தீபாராதனையும், வாகன பவனியும் நடந்தது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜபெருமானும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தில் உள்ள சுடலை மாடசுவாமி கோவிலில் சமீபத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல கன்னியாகுமரி அருகே உள்ள கல்லுவிளையில் உள்ள ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது லீபுரத்தைச் சேர்ந்த பாலபிரசாத் (வயது 30) மற்றும் அவரது தம்பி விஷ்ணு பிரசாத் (20) என்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் 2 பேரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை காவலில் வைக்குமாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு
    • தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில்சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த2அதிநவீனபடகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுர்சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    இந்த 2அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலாப் பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதன் பயனாக இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் உல்லாச படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துஉள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா இன்று காலை கன்னியாகுமரி படகு துறையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கணேசன் (நிதி) கேப்டன் தியாகராஜன் (இயககம்) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கன்னியாகுமரி படகு துறைமுக மேலாளர் செல்லப்பா துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், உதவி துறைமுக பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம்ஒன்றிய தி.மு.க. இளைஞர்அணி முன்னாள் அமைப்பாளர் சிவபெருமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான புரட்டாசி பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அதி காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வ ரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்த னகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல்12 மணிக்கு அன்னதானமும் நடந்தது.

    மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, துளசி, தாமரை, உள்படபல வகையானமலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3முறை வலம் வரச் செய்த நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிக ழ்ச்சியும் அதை த்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. இத ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் கைவரிசை
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 39). இவர் கன்னியாகுமரியை அடுத்த விவேகானந்தபுரம் அருகே உள்ள மாதவபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று நள்ளிரவு 11 மணிக்கு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே உள்ள அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு திடுக்கிட்ட ராமலிங்கம் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்தக் கடையின் மேல் கூரையை பிரித்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தடைய வியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள பேன்சி கடையை உடைத்து ரூ. 1¾ லட்சம் கொள்ளை போனது. இந்த தொடர் சம்பவத்தினால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர்மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • புரட்டாசி மாத திருவாதிரையை யொட்டி நடக்கிறது
    • 16-ந்தேதி நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரதினமான வருகிற 16-ந்தேதி 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுக வேண்டுகோள்
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருவ மழை காலங்களில் வெள்ளம் , புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் முதல் அமைச்சர் உத்தரவின்படி 2022 - 2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு - செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கும்பப்பூ பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு வருகிற 15.12.2022 தேதி வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 515 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே , கும்பப்பூ பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிருக்கு தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில் 1 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் ( இ - சேவை மையங்கள் ) தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள " விவசாயிகள் கார்னரில் " நேரிடையாக காப்பீடு செய்யலாம் . முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம் , கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ - அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுகவும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும்.
    • தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்புப் பிரிவில் உள்ள நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகளுக்காக, அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 06772 கொல்லம் சந்திப்பு- கன்னியாகுமரி மெமு எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 06773 கன்னியாகுமரி- கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 16366 நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அன்று 2.30 மணிக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

    ரெயில் எண்: 06429 கொச்சுவேளி- நாகர்கோவில் சந்திப்பு முன்பதிவில்லா எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் கொச்சுவேளியில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கொச்சுவேளியில் இருந்து 3.10 மணிக்கு(1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.

    இவ்வாறு செய்தி கூறியிருப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
    • அந்த மலைப்பாம்பு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கிய புரத்தில் தென்னந் தோப்புக்குள் ராட்சத மலைப் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த ராட்சத மலைப்பாம்பு அங்கு விரித்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த மலைப்பாம்பு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக சென்ற அந்த பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர் அதனை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் வனக்காவலர் ஜோயல், வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    அந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    • காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது.

    இந்த 6நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக இருந்தனர். அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இன்றும் கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதி காலையில் சூரியன் உதய மாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதி காலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந் தனர்.அவர்கள் காலை 8மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்கள் களை கட்டியது.

    இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 ஆயிரத்து 546சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    ×