search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • விநாயகருக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள் பொடி, மாபொடி, பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், நெய், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் பரசுராமர் விநாயகர் கோவில் அமைந்துஉள்ளது.

    இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது.

    இதையொட்டி விநாயகருக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள் பொடி, மாபொடி, பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், நெய், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சந்தனகாப்பு அலங்காரத்துடன் விநாய கருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    அவருடன் இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வ ரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஒன்றிய அவைத் தலை வர் தம்பித்தங்கம், பேரூர் கழகச் செயலா ளர்கள்தாமரை தினேஷ், குமார், ராஜபாண்டியன், லீபுரம்ஊராட்சிஅ.தி.மு.க. செயலாளர் கே. லீன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் குமரகுரு, வடக்கு தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பார்த்தசாரதி,

    ஒன்றிய இலக்கிய அணிசெயலாளர் பகவதியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • விவேகானந்தர் மண்டபத்தை ஒரேநாளில் 6 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
    • படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுதந்திர தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அவர்களை கவரும் வகையிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் நினைவு இல்லங்களில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.

    இதனை ரசித்துப் பார்த்த சுற்றுலா பயணிகள், சூரியன் உதயமாகும் காட்சியையும் பார்த்து மகிழ்ந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.தொடர்ந்து விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தை பார்வையிட்டனர்.

    இங்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 310 தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன. இதனையும் சுற்றுலா பயணி கள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 10-30 மணிக்கு பிறகே படகு போக்குவரத்து தொடங்கிய தால் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்து அதன்பிறகு மண்டபத்தை பார்வையிட்டனர்.

    நேற்று ஒரே நாளில் விவேகானந்தர் மண்ட பத்தை 6 ஆயித்து 100 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்,திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

    • வீட்டின் கதவை உடைத்து துணிகரம்
    • குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சுண்டன் பரப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் வில்டன் (வயது 33). இவர் தனது மனைவி மற்றும்குழந்தைகளுடன்சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு கடந்த 6-ந்தேதி சென்று உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 12.15 மணிக்கு இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள உறவினர்கள் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ள னர். உடனே வில்டன் தனது வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோதுவீட்டின் முன்பக்க கதவு உடைக் கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்த 4½ பவுன் தங்க நகையை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது பற்றி அவர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

    மேலும் அதே நாளில் கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளையில் ராணுவ வீரர் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. இந்த 2 சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்துள்ளதால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோவை உடைத்ததால் பரபரப்பு
    • கன்னியாகுமரி போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது40).இவர் பஞ்சாபில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இவரது தாயார் சாரதா சிறிய டீ கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்த போது அதன் அருகில் உள்ள தனது மகன் ராஜனின் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது யாரோ மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்தது தெரிய வந்தது. நகைகள் எதுவும் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை எட்டுகிறது
    • பெருஞ்சாணி அணை மேலும் 2 அடி உயர்ந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் தற்போது மழை சற்று குறைந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. கருங்கல், குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை நீடித்து வரு கிறது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 5-வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளிலும் மலையோரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து அணை களின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரு அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.45 அடியாக உள்ளது. அணைக்கு 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 256 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று மதியம் 42 அடியை எட்டு மென்று எதிர்பார்க்கப் படுகிறது.

    இதையடுத்து பொதுப்ப ணித்துறை அதிகாரி கள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வரு கிறார்கள். அணை நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுப்பதற்கும் ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள் ளது. ஏற்கனவே சிற்றாறு-1, சிற்றாறு-2 அணை களின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 67.85 அடியாக உள்ளது. அணைக்கு 1869 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 35.52 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று காலை 12.10 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வருவ தால் சூறைக்காற்றும் வீசி வருகிறது. சூறை காற்றிற்கு மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளது. நாகர்கோவில் பாறையடி பகுதியில் பழமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து விழும் நிலையில் இருந்தது.

    இதை தீயணைப்பு துறையினர் வெட்டி அப்புறப்படுத்தி னார்கள். தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    தச்சமலை, தோட்டமலை, மோதிர மலை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வள்ளியாறு, குழித்துறையாறு, பரளி யாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-11.4, பெருஞ்சாணி-3.2, சிற்றார்-1-6.2 சிற்றார்-2-2, பூதப்பாண்டி-5.2, கன்னிமார்-8.8, நாகர் கோவில்-2.4, சுருளோடு- 1.4, தக்கலை-3.4, குளச்சல்-8.6, இரணி யல்-6.2, பாலமோர்- 6.2, மாம்பழத்துறையாறு- 2.2, திற்பரப்பு-7.6, கோழிப்போர் விளை- 5.2, அடையாமடை-2.6, முள்ளங்கினாவிளை- 4.2, ஆணைக் கிடங்கு-3.4, முக்கடல்-3.2.

    • கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
    • தொடர்மழையால் வருகை பாதிப்பு

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னி யாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர் , டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை சீசனை யொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசனை யொட்டியும் வருகை அதிகமாக இருக்கும்.

    தற்போது சீசன் இல்லாத இந்த நேரத்திலும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இருப்பினும் நாளொன்றுக்கு சராசரி 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கன்னியா குமரியில் கடந்த3நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடை படுகிறது.

    இதனால் கன்னியா குமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேக மூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை.

    இதனால் அதிகாலை காலை வேளையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும் மாலை வேளையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் கடற்கரைக்குவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிட்டது.

    • மழையில் நனைந்து கொண்டே ஒற்றை காலில் நின்று நடனம் ஆடினார்.
    • மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்தமழையினால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    ஆனால் இந்த கொட்டுகிற மழையிலும் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரையில் உள்ள மதில் சுவரில் ஏறி நின்று யோகாசனம் செய்தார். அப்போது அந்த சிறுவன் கொட்டுகிற மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தார்.

    அதன் பிறகு மழையில் நனைந்து கொண்டே ஒற்றை காலில் நின்று நடனம் ஆடினார். இந்த காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் பலர் அந்த சிறுவனின் சாகச காட்சிகளை தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டே இருந்தனர். அந்த சிறுவனும் மழை நிற்கின்றவரை அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது யோகாசனசாகசங்களை செய்து கொண்டே இருந்தார்.

    • ஆடிப்பூரத்தையொட்டி நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலையில் அம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

    பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் நடந்தது. முன்னதாக விநாயகருக்கு முதல் பூஜை நடந்தது.அதன்பிறகு முத்தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் இந்த கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, புலமாடசுவாமி, இசக்கி அம்மன், ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்தார்கள். பின்னர்பக்தர்களுக்கு அந்த வளையல் அருள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்
    • பேச்சாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கலை இலக்கிய அணியின் சார்பில் தென் மண்டல அளவிலான பேச்சாளர் பயிற்சி பட்டறை கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.

    மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் நாஞ்சில் எம்.எஸ். அமலன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மாணவர்அணி செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் கலந்து கொண்டு பேச்சாளர் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

    சமூக பொது நல இயக்க பொதுச்செயலாளர் ஏ.எஸ். சங்கர பாண்டியன், ஆசிரியர்கள் ஜோசப், மேரி விஜயா ஆகியோர் பேச்சாளர் ஆவது எப்படி?என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெபசிங், தோவாளை ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்திரா, மாநகரப் பகுதி செயலாளர் டாக்டர் நலம் குமார், நெல்லை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ராஜகணபதி, விருதுநகர் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம், வள்ளியூர் அவைத்தலைவர் அந்தோணிசாமி, பணகுடி நகர செயலாளர் மைக்கில் அந்தோணி, நாகர்கோவில் மாநகர 34-வது வார்டு செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் இந்த பேச்சாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இந்த சான்றிதழ்களை மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் வழங்கி னார். முடிவில் கோவளம் ஊராட்சி செயலாளர் அகிலன் நன்றி கூறினார்.

    • இந்த மாதத்தில் விவேகானந்தர் மண்டபத்தை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
    • விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்கு வரத்து காலை 8 மணிக்கு தொடங்கப் படவிலலை. 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பகல் 11 மணிக்கு தான்படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட வந்தனர். விவேகானந்தர் மண்ட பத்தை 1 லட்சத்து 20 ஆயிரத்து 672 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்று லாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற் கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீ சாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை 3-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்றுதாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத் துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்த ளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • சிறப்புநிலை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர்ஜெனஸ்மைக்கேல், செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்வருமாறு:-

    கன்னியாகுமரி பேரூ ராட்சிக்கு உட்பட்ட கடற்கரைச் சாலையில் ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனை யொட்டி நவம்பர் மாதம் 20-ந்தேதி முதல் ஜனவரி 20-ந்தேதி வரையிலான 60 நாட்கள் சீசன் காலத்தில் தற்காலிக சீசன் கடைகள் அமைப்பது வழக்கம். இதன் மூலம் பேரூராட்சிக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது.

    இந்தநிலையில் 2019 -2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, 2020-ம் ஆண்டு முதல் கடைகள் ஏலம் விடக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பகுதியில் கடைகள் ஏலம் விடப்படவில்லை. இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டில் சீசன் கடைகளுக்கான பொது ஏலம் விடுவதற்கு ஆவன செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு கருத்துரு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி பேரூ ராட்சிக்குச் சொந்தமான சன்னதி தெரு சமுதாயக் கழிப்பிடத்தில் அமைந்து உள்ள செல்பேசி கோபு ரத்தை அகற்றி அந்த இடத்தில் புதிதாக காங்கி ரீட் கழிப்பிடம் மற்றும் குளியலறை அமைப்பதுஎன்றுமுடிவுசெய்யப்பட்டது. காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபம் அமைந்துஉள்ள பகுதிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பை பேரூராட்சிக்கு வழங்க மாவட்ட கலெக்டரைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட தீர்மா னங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், ஆனிரோஸ் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×