search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • விவேகானந்தர் மண்டபத்தை 7 லட்சம் பேர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர்
    • சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசனான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.

    இந்த சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்குறைந்த வண்ணமாக உள்ளன. இருப்பினும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை காண சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணி கள் படகுத்து றையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அனு மதிக் கப்பட வில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை கடற்கரையில் இருந்தவரே பார்வையிட்டு சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக் கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் விடுமுறை இல்லாத இன்றும் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர். சபரிமலை சீசனையொட்டி கடந்த 3 மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர்.

    இதில் 7 லட்சம் 17ஆயிரத்து 591 சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சபரிமலை சீசனை யொட்டி கடந்த நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 891 பேரும் டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் கடந்த ஜனவரி மாதம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    • மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி மரியாதை
    • பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தினர்

    கன்னியாகுமரி:

    மகாத்மா காந்தியின் 76-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    இதையொட்டி கன்னியா குமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) முன்பு காந்தி யின் உருவப் படம் பொதுமக்கள் அஞ்சலிக்காக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.அவரதுஉருவப்படத்துக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர் கோவில் ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் செயல் அலுவலர் ஜீவ நாதன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ்மைக்கேல், சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஷ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்ஆனி ரோஸ்தாமஸ், சகாய ஜூடு அல்பினோ ஆனந்த், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காந்தி நினைவுநாளை யொட்டி சர்வோதய சங்கத் தைச் சேர்ந்த பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தி னார்கள். இந்த நூற்பு வேள்வி கன்னியாகுமரி கடலில் காந்தியின்அஸ்தி கரைத்த நினைவுநாளான பிப்ரவரி மாதம் 12-ந் தேதி வரை 14 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகுதுறையில் நீண்டவரிசை
    • கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி:

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பலரும் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகும் சுற்றுலா பயணிகள் பார்வையிட இன்னும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவர த்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
    • படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குடியரசு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப் பட்டு உள்ளது.கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறார்கள். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48கடற்கரை கிராமங்களி லும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கி றார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது.
    • மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மேலும் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 47). இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பக்க கதவு இன்று உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜீவாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்த ரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற னர். அப்போது ஜீவா வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து பீரோவையும் உடைத்துள்ளனர்.

    வீட்டில் நகை பணம் எவ்வளவு திருட்டு சென்றது என்ற விவரம் தெரியவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து பதிவு செய்தனர்.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சூரியன் உதயமான காட்சியைகாண கடற்கரையில் திரண்டனர்
    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துசெல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னி யாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள்களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
    • மர்ம ஆசாமிகள் வீட்டின் காம்பவுண்டு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மைக்கேல் (வயது 55). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நேற்று இரவு தனது வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தி இருந்தார்.

    இன்று அதிகாலை அவர் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கு வைத்து இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். யாரோ சில மர்ம ஆசாமிகள் வீட்டின் காம்பவுண்டு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அதிகாரிகள் வரவேற்றினர்.

    கன்னியாகுமரி:

    அரியானா மாநில சட்டமன்ற மனுக்கள் குழு இன்று காலை கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த சட்டமன்ற குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் அதிகாரிகள் வரவேற்றினர்.

    பின்னர் இந்த எம். எல். ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டனர்.

    அங்குள்ள கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பாலசவுத்ரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன்சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இவர்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
    • லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகுமூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் "சஜாக் ஆபரேஷன்"என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதிநவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இவர்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதி வரை ஒரு குழுவினர் அதிநவீன ரோந்து படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரைக்கும் அதிநவீன படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்தனர்.

    நெல்லை குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லாட்ஜ்களிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர்.

    • மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
    • கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சலூன் கடைக்காரரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 34).

    இவரும், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 34). என்பவரும் நண்பர்கள். இசக்கி முத்து ஒற்றையால்விளையில் தங்கியிருந்து சின்னமுட்டம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இருவரும் ஒற்றையால்விளை சமுதாய நலக்கூடம் அருகே மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தனது கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் பிரபுவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி முத்துவை கைது செய்தனர்.

    • “பார்க்கிங்” வசதி இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல்
    • பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பூங்கா அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சீசன் முடிவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 5நாட்களாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பஸ், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாகஇருந்தனர்.

    இங்கு சீசன் காலங்களில் வரும் சுற்றுலா வாக னங்களை நிறுத்துவதற்கு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதி யில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் நாள்தோறும் வழக்கத்துக்கு அதிகமாக சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்கு வருவதால் அந்த வாகனங்க ளை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் கடற்கரை சாலையிலும் மற்ற வீதிகளிலும் சுற்றுலா வாகனங்களை தாறுமாறாக கொண்டு நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதில் சுற்றுலா வாகனம் ஒன்றை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதால் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள பூங்காவி ல் அமைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூந்தொட்டிகள் மற்றும் சாலையோரமாக நடப்பட்டு இருந்த நிழல்தரும் அலங்கார மரங்களை பாதுகாக்க சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு சுவரையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.எனவேகன்னியா குமரிக்கு வரும்சுற்றுலா வாகனங்களைநிறுத்து வதற்கு கூடுதலாக "பார்க்கிங்" வசதி ஏற்படுத்த வேண்டும் என்றுசுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×