search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • தேவசம்போர்டு நிர்வாகத்துடன் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
    • இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களைகட்டிஉள்ளது. இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறைகடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் நடைபாதைகளைஆக்கிர மித்து தள்ளுவண்டிமற்றும் உருட்டு வண்டி கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இதனால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, காந்தி மண்டபம்பஜார், மெயின் ரோடு, பழையபஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிர மித்து வைக்கப்பட்டிருந்த 150- க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலை மையில் அகஸ்தீஸ்வ ரம் தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த்ஆகியோர்முன்னிலையில்இந்தஆக்கிரமிப்புகடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா உத்தரவின்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பலத்தபோலீஸ் பாது காப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    • விவேகானந்தர்மண்டபத்துக்கு படகில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் குவிந்தனர். கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    மழை மேகமூட்டம் காரண மாக கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிய வில்லை. இதனால் சூரியன் உதயமான அற்புத காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்தி ருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்ட பத்தை பார்வையிட்டனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் ஞாயிற்றுக் கிழமையான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது.
    • காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்த லங்களில் கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மை யானது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக் கான திருவிழா இன்று (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    1-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடை பெற்றது.அதைத்தொடர்ந்து காலை 8மணிக்குநேர்ச்சை கொடிகள் பவனிதொடங்கி யது. மாலை 4 மணி வரை இந்த நேர்ச்சை கொடிகள் பவனிநடக்கிறது. மாலை 6.30 மணிக்குதிருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணி ரசல் ராஜ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.

    2-ம் நாள் திருவிழாவான நாளை (10-ந்தேதி) அதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப் பலி நடக்கிறது. தொடர்ந்து 10-30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் மாலை 6-30 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலியும் நடக் கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணி ஆனந்த் மறை உரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி அருட்பணி சுவக்கின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மில்லர் மறைவுரை ஆற்றுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கில திருப்ப லியை அருட்பணி ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறார்.தொடர்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலசான்ஸ் பள்ளி முதல்வர் அருட்பணி ஜீன்ஸ் மறைவுரை யாற்று கிறார்.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.இந்ததேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தைசேர்ந்த ஏராளமானஇறைமக்கள் கலந்துகொள்கின்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலியை கலசான்ஸ் மழலையர் பள்ளி பொறுப் பாளர் அருட்பணி ஜில்லோ வர்கீஸ் நடத்துகிறார். புனித ஜோசப் கலசான் குழும அதிபர் ஆல்பர்ட் கிளீஸ்டஸ் மறை உரையாற்றுகிறார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடசேரி பங்கு தந்தை அருட்பணி புருணோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக்மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவை யினர் அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.
    • மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரி:

    வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக இன்று கன்னியாகுமரியில்கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காணப்பட்டது.

    இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்க கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை8மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அலையே இல்லாமல் அமைதியாக கடல் குளம் போல் காணப்பட்டதுஇதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் திகைத்துபோய் நின்றனர்.

    • இசை நீரூற்று நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்
    • கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி:

    ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 35 பேர் உலகம் முழுவதும் சாலை வழியாக கேரவன் வாகனத்தில் சென்று சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி துருக்கியில் தங்களது பயணத்தை தொடங்கினார்கள். அனைத்து வசதிகளையும் கொண்ட கேரவன் போன்ற வடிவமைப்புடைய 18 வாகனங்களில் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். 21 நாடுகளுக்கு சென்று அங்குஉள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட இவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    துருக்கியில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடைந்தனர். நேற்று அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர்.

    கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா சிறப்பு அம்சங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் இரவு அவர்கள் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் முருகன் குன்றம் எதிரே அமைந்துள்ள இசை நீரூற்று கண்காட்சியை பார்வையிட்டனர். முன்ன தாக கன்னியாகுமரி வந்த அவர்களை இசை நீரூற்று கண்காட்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிதின் வரவேற்றார்.இன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அவர்கள் பின்னர் நேப்பாளம், பூட்டான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

    • இன்றுடன் நிறைவு பெற்றது
    • இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரிந்தது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் கார்த் திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த் திகை தீபத்திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான கடந்த 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டா டப்பட்டது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதியில் அமைந்து உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற் றப்பட்டது.

    மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரிந்தது.

    3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி அங்கு விசேஷ பூஜைகள் நடத்தி கார்த்திகை மகா தீபம் நிறைவு செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மருந்து வாழ்மலை பாது காப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமையில் பக்தர் கள் செய்து இருந்தனர்.

    • கன்னியாகுமரியில் கடல் “திடீர்” என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது.
    • கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் பவுர்ணமி தினமான நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் "திடீர்" என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்கக்கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.

    அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
    • பரம்பரை அறங்காவலரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது.

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகமும் வழிபாடு களும் நடந்தது.

    பரம்பரை அறங்காவ லரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முன்னதாக மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து 51 குடங்களில் மருந்துவாழ் மலைஉச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படட்டது.

    இந்த ஊர்வலத்தை எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்துக்கு மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் விசுவ இந்து பரிசத் அமைப்பாளர் காளியப்பன், மாநில இந்து முன்னணி பேச்சாளர் வக்கீல் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி கன்னியா குமரி விவேகா னந்தர் பாறையிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அந்த பாறையில் பகவதி அம்ம னின் ஒற்றை கால் பாதம் இயற்கை யாகவே பதிந்துள்ள தாக கருதப்படு வதால் ஆண்டு தோறும் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி விட்டல்போற்றிமற்றும் கீழ் சாந்தி ஸ்ரீராம் மற்றும் கோவில் பணியாளர்கள், அதிகாரிகள் தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதையொட்டி ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துஉள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தா கேந்திர நிர்வாக செயலாளர் ராதா கிருஷ்ணன், கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்ம நாபன், விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் ராமச்சந்திரன் பூம்புகார் கப்பல்போக்கு வரத்து கழக துணை மேலாளர் பழனி, கடல் சார் வாரிய துறைமுக உதவி பாதுகாப்பாளர் ராஜேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கார்த்திகை மாதம் 3-வது சோமவாரத்தை முன்னிட்டு நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் குகநாதீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையான இன்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 6.30மணிக்கு அபிஷேகமும் 8மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை 10.30 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு அலங்கார தீபாராதனைநடந்தது.

    பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3முறை வலம் வரும்நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடக்கிறது.பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3முறை சங்குஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம் வரசெய்கின்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப் படுகி றது. இதற்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துவருகின்றனர்.

    • அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் ராபின்ஸ்டன் (வயது 48). மீனவர். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இதனால் இவர்கள் தனது ஒரே மகளுடன் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10-30 மணிக்கு இவர்கள் தூங்க சென்று விட்டனர். அதன் பிறகு ராபின்ஸ்டன் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணா ததை பார்த்து திடுக்கிட் டார். உடனே அவன் தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்குஉள்ள ஒரு அறையில் அவரது மனைவி ரேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் அவர் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்டுகொள்ளாத கடலோர பாதுகாப்பு குழும போலீசார்
    • கன்னியாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது

    கன்னியாகுமரி:

    கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஆனந்த குளியல் போடு கிறார்கள். அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இதற்கி டையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வ முடன் பயணம் செய்து பார்வையிட்டு வருகி றார்கள்.

    இது தவிர கன்னியா குமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை, பொழுதுபோக்கு பூங்கா, காட்சி கோபுரம், மெழுகு சிலை கண்காட்சி வட்டக்கோட்டைபீச், சொத்த விளைபீச் போன்ற இடங்களுக்கும் சென்று பொழுதைகழிக்கிறார்கள். மாலையில் சன்செட் பாய்ண்ட் கடற்கரைக்கு சென்று சூரியன் மறையும் அற்புத காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.

    இதற்கிடையில் கன்னி யாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது என்பதற்காக கடற்கரையை யொட்டி பாறாங்கற்களை குவித்து தடுப்புச் சுவர்கள் அமைத்து உள்ளனர். ஆனால் சுற்றுலா பயணி கள் இந்த தடுப்புச் சுவர்க ளையும் தாண்டி கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுகிறார்கள்.

    இந்தப் பகுதி பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான ஆழம் நிறைந்த பகுதி என்பதை அறியாமல் சுற்றுலா பயணி கள் ஆனந்த குளியல் போடு வதை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்டு கொள்வதில்லை.

    எனவே உயிர் பலி ஆகுவ தற்கு முன்பு இந்த பகுதியில் ரோந்து செல்லும் கடலோர பாதுகாப்பு குடும்ப போலீ சார் சுற்றுலாப் பயணிகள் ஆபத்துநிறைந்த இந்த ஆழமான பகுதிக்கு சென்று கடலில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சுற்றுலா பயணி களும் சமூக ஆர்வ லர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும்.
    • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் மேலாளர் மல்லையா, முதன்மை ரெயில்வே இயக்குநர் நீனு ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து மனு அளித்தார்.

    குமரி, நெல்லை, விருது நகர், மதுரை போன்ற தென்மாவட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், உறவுகளை சந்திப்பது மற்றும் சுற்றுலா சம்மந்தமாக அதிக அளவில் மக்கள் சென்னை, கன்னியாகுமரி வழித்தடத்தில் பயணிப்ப தால், போதிய ரெயில்கள் இல்லா ததால் மக்கள் கார்களி லும், பேருந்துகளிலும் சென்று பெரும் சிரமம் அடைவதோடும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் அதிக பண விரயம் ஏற்படும். எனவே சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில் களை இயக்க வேண்டும்.

    ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதனால் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்காகவும் தமிழக தென் மாவட் டங்களில் வசிக்கும் மக்களுக்கும் ஐதராபாத் சென்று வர நேரடி ரெயில் சேவை முக்கியமானது எனவே ஐதராபாத்-தாம்பரம் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிக்க வலியுறுத்தினார்.

    தஞ்சை பெரிய கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் போன்ற மும்மத சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கு திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக் குடி, கன்னியாகுமரி வழித்த டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவனந்தபுரம்-வேளாங் கண்ணி மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை திருவனந்தபுரம் வந்து சேரும்படி இயக்க வலியுறுத்தினார். அதற்கு ஏதுவாக சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் ரெயிலை, திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும். வாரத்தில் மூன்று நாள் இயக்கப்படும் தாம்பரம்-நாகர்கோவில் இரவு நேர இரயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    கொரோனா காலத்திற்கு முன்பாக பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட மதுரை - புனலூர் ரெயில் தற்போது விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பாக பள்ளியாடி, குழித்துறை மேற்கு, ஆரல்வாய்மொழி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றதை சுட்டிக் காட்டி மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் இந்த ரெயில் நிலையங்களில் மதுரை-புனலூர் விரைவு வண்டி நின்று செல்ல வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இதனை கேட்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மேற்குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மதுரை - புனலூர் விரைவு ரெயில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் அனந்தபுரி மற்றும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரெயில்களின் நிறுத்தங்களை குறைக்கா மல் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கவும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டுமென்றும் கூறி னார்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் மக்கள் ரெயில் தண்ட வாளங்களை கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தினார். குறிப்பாக கப்பியறை பஞ்சாயத்து, பள்ளியாடி அருகில் இணைப்பு பாலம் குழித்துறை மேம்பாலம், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தின் அருகில் ஊட்டால் மொடு ரெயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் மற்றும் குழித்துறை மேற்கு கடந்தான் கோடு இணைப்பு பாலமும் உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    கோரிக்கையின் மீது தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    ×