என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 184332
நீங்கள் தேடியது "உரையாடல்"
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். #DonaldTrump #Omarosa
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த உரையாடல் பதிவு, அவரும் ஜனாதிபதி டிரம்பும் உரையாடுவதாக அமைந்து உள்ளது.
அந்த உரையாடலில் ஜனாதிபதி டிரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், “நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறது.
அதற்கு ஒமரோசா, “ ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்” என்று பதில் அளித்து உள்ளார்.
உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், “இல்லை... என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது.
இது குறித்து டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ அந்தப் பெண், பணியை இழந்த பின்னர் என்னைத் தாக்கத் தொடங்கி உள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவரை கேட்டு உள்ளேன்” என்று கூறி உள்ளார்.
டிரம்பின் வக்கீல் ரூடி கிலானி கருத்து தெரிவிக்கையில், “வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததின் மூலம் அவர் சட்டத்தை மீறி விட்டார்” என கூறி உள்ளார். #DonaldTrump #Omarosa #tamilnews

×

X