search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுபடி"

    • ஐபோன் 16 சீரிஸ் விலை ரூ. 79,900 என துவங்குகிறது.
    • ஐபோன் 16 டாப் என்ட் மாடல் விலை ரூ. 1,09,900 ஆகும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய ஐபோன் 16 (128 ஜிபி) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ரெடிட் பயனர் ஒருத்தர் முற்றிலும் புதிய ஐபோன் 16 (256 ஜிபி) மாடலை ரூ. 27 ஆயிரத்திற்கு வாங்கியதாக தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையில் ஐபோன் 16 (256 ஜிபி) விலை ரூ. 89 ஆயிரத்து 900 ஆகும். ரெடிட் சேவையை பயன்படுத்தி வரும் Wild_Muscle3506 என்ற நபர் போன் 16 (256ஜிபி) மாடலை ரூ. 26 ஆயிரத்து 970 விலையில் வாங்கியதாக தெரிவித்தார். இந்த பயனர் புதிய ஐபோன் வாங்கும் போது 62 ஆயிரத்து 930 ரூபாய் தள்ளுபடி பெற்றதாக தெரிவித்து உள்ளார்.

     


    இவர் புதிய ஐபோன் 16 (256 ஜிபி) மாடலை வாங்கும் போது ஹெச்.டி.எஃப்.சி. இன்ஃபினியா கிரெடிட் கார்டு பயன்படுத்தயுள்ளார். இவ்வாறு செய்யும் போது ரிவார்டு பாயிண்ட்கள் மூலம் ரூ. 62 ஆயிரத்து 930 தள்ளுபடி பெற்றுள்ளார். தனது கார்டு மூலம் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருக்கிறார். அவற்றுக்கு கிடைத்த ரிவார்டு பாயிண்ட்களே அவருக்கு அளவுக்கு அதிக சேமிப்பை வழங்கியுள்ளது.

    ஐபோன் 16 (128 ஜிபி) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்கி இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஐபோன் 16 சீரிஸ் புது டிசைன் கொண்ட கேமரா செட்டப், புதிய ஆக்ஷன் பட்டன், கேமரா கண்ட்ரோல் பட்டன் மற்றும் 18 சிப்செட் கொண்டிருக்கிறது.

    • இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
    • கடந்த 30 ம் தேதி கேரள முதலைமைச்சர் நிவாரணம் ஒதிக்கி 50 லட்சம் இந்த வங்கி நிர்வாகம் வழங்கியது.

    வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வங்கி கிளையில் 100 கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இந்த கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலைமைச்சர் நிவாரணம் நிதி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை கேரள வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதைத்தவிர, வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது 5 நாட்கள் ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரன நிதிக்கு வழங்கினர்.

    இருப்பினும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேர் இந்த வங்கியில் கடன் வைத்திருக்கிறார்கள் என்ற விவராம் இன்னும் வெளியாகவில்லை. இந்த அறிவிப்பின் மூலம், கூடுதலான மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில் பால், தயிா், நெய், வெண்ணெய், பன்னீா், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களையும் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையுமின்றி விற்பனை செய்துவருகிறது.

    இதில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி செய்வது வழக்கம்.

    அந்த வகையில், கிருஷ்ணஜெயந்தி (ஆக.26-ந்தேதி), விநாயகா் சதுா்த்தி (செப்.7-ந்தேதி) உள்ளிட்ட பண்டிகை களை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, ரூ.85-க்கு விற்பனையான ஆவின் 100 மி.லி. நெய் விலை ரூ.75-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.

    இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் புது வெர்ஷன் அறிமுகம்.
    • ரெட்மி நோட் 13 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மூன்று மாடல்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் வொர்ல்டு சாம்பியன்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புது வெர்ஷனுடன் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்களின் விலை குறைக்கப்படுவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 15 ஆயிரத்து 499 என்று மாறியுள்ளது.

    ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 21 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 31 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 27 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டு மூலம் பணம் செலுத்தும் போது வழங்கப்படும் ரூ. 3 ஆயிரம் வங்கி தள்ளுபடியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் விலை கடந்த நவம்பர் மாதம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டது.

    நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என்று மாறி இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 9 குறைக்கப்பட்டு ரூ. 22 ஆயிரத்து 990 என்று மாறியுள்ளது.

     


    இதுதவிர ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்று மாறிவிடும்.

    ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது. 

    • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மாநிலத்துக்கு நியாயம் செய்ய முடியும்.
    • கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா திருப்பதி மாவட்டம், காளஹஸ்தியில் ரோடு ஷோ நடத்தினார்.

    மாநிலம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டனர். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மாநிலத்துக்கு நியாயம் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி அளித்து உள்ளது. கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அரசில் காலியாக உள்ள 2.3 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவோம். கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைநகரை கூட இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு 3 தலை நகரங்களை ஏற்படுத்துவேன் என கனவு கண்டு வாக்குறுதி அளிக்கிறார்.

    இவர்களால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு விரிவான வளர்ச்சியை உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ரியல்மி வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிடலாம்.

    ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வங்கி சலுகைகள் சேர்த்து புதிய நார்சோ ஸ்மார்ட்போனினை ரூ. 3 ஆயிரம் வரை குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    சமீபத்தில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல்கள் முறையே ரூ. 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

     


    தற்போதைய அறிவிப்பின் படி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டை பயனர்கள் ரூ. 17 ஆயிரத்து 999 விலையிலும், டாப் எண்ட் வேரியண்டை ரூ. 18 ஆயிரத்து 999 விலையிலும் வாங்கிட முடியும்.

    அந்த வகையில் இரு மாடல்களுக்கும் முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிட முடியும்.

    • எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.
    • மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடை, பார்கள் உள்ளது.

    கோடை வெயில் தொடங்கியதால் பெரும்பாலான மது பிரியர்கள் பீர் வகைகளை அதிக அளவு வாங்கி அருந்துகின்றனர்.

    பீர்கள் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது. பீர் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில மதுபான கடைகளில் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.

    அதோடு பண்டிகை காலங்களில் அதிக அளவில் பீர் வியாபாரம் ஆகும் என கருதி மதுக்கடை உரிமையாளர்கள் பெட்டி பெட்டியாக பீர் வகைகளை வாங்கி குடோன்களில் சேமித்து வைக்கின்றனர்.

    ஆனால் எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.

    இதனால் காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு மதுபான கடைகள் ரூ.20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றன. ரூ.120 மதிப்பிலான பீர்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    • தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
    • நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுக்கு முன்னதாக, கோரக்பூர் உயிரியல் பூங்காவில் 'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று பூங்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

    ஷாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் பிரானி உத்யானின் இயக்குனர் மனோஜ் குமார் சுக்லா," இந்த சலுகை ஜனவரி 21ம் தேதி அன்று ஒரு நாள் மட்டுமே கிடைக்கும்" என்றார்.

    மிருகக்காட்சிசாலைக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டாலும், மிருகக்காட்சிசாலையின் நுழைவு மண்டபத்தில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய சுக்லா முடிவு செய்துள்ளார்.

    நுழைவு பிளாசாவில் உள்ள நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது.
    • ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    சென்னை:

    டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. ரோட்டோர தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் முறையிலேயே வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்துகிறார்கள். இது எளிமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ஆனால் பல கடைகளில் ஆன்லைனில் செலுத்துவதற்கு பதில் பணமாக செலுத்தினால் வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

    சென்னை பரங்கிமலை மெயின்ரோட்டில் ஒரு பழக்கடையில் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கடைக்காரரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நான் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய செல்கிறேன். அங்கு பணமாகத்தான் கேட்கிறார்கள். ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    அதுமட்டுமல்ல நான் தினமும் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கிறேன். குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது. என்னிடம ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன.

    வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணத்தை அதிகமாக செலுத்துவதால் எனக்கு அதிகப்படியான பரிவர்த்தனைகளுக்கான பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக மாதம் தோறும் வங்கிகள பிடித்தம் செய்கின்றன.

    தேவையில்லாமல் நானும் சிரமப்பட்டு யாரோ ஒருவருக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுப்பதைவிட என்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

    உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் 500 ரூபாய்க்கு பழங்கள் வாங்கிவிட்டு டிஜிட்டலில் பணத்தை செலுத்தினால் முழுத்தொகையும் செலுத்த வேண்டும். அதையே பணமாக தந்தால் ரூ.475 தந்தால்போதும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி என்றார்.

    • டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் அறிவிப்பு.
    • இம்மாத இறுதிவரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. செலவீனங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாலும், பணவீக்கம் காரணமாகவும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ EV மற்றும் டாடா டிகோர் EV மாடல்களுக்கு ரூ. 1.10 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. டிகோர் EV காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் ரூ. 50 ஆயிரமும், கார்ப்பரேட் போனஸ் ஆக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

     


    தற்போது டாடா டிகோர் EV மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்ள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 77 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் கிரீன் போனஸ் தொகையாக ரூ. 55 ஆயிரம் வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் போனஸ் ஆக ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    • பஸ் நிலைய வணிகவளாகம் கடைகள்-குத்தகைதாரர் நலச்சங்கம் கோரிக்கை
    • கோவை மேயர் கல்பனாவுடன் சந்திப்பு

    கோவை,

    கோவை மாநகராட்சி பஸ் நிலைய வணிகவளாக கடைகள், குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவர் ராகவலிங்கம், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஞானபால் செல்வராஜ் ஆகியோர் மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது பல்வேறு சிரமங்களுக்கு இடையே மாநகராட்சிக்கு சொந்த மான வணிகவளாக கடை களின் வாடகை நிலு வைத்தொகையை அபராத வட்டியுடன் செலுத்தி மாநகராட்சி நிபந்தனைகளை ஏற்று அனைத்து வாடகைக்கடைகளையும் பல கஷ்டங்களுக்கு இடையே நிலுவையின்றி செலுத்தி உள்ளோம்.

    கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முதலாம் அலையின்போ தும், 2-வது அலையின்போ தும் கடைகள் அனைத்தும் செயல்படாமல் இருந்த காலத்தில் கடை வாடகை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

    ஆனால் 2 மாதம் மட்டுமே கடை வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 3 மாத கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    ×