search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 185109"

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிசின் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். #RogersCup #Tsitsipas #RafaelNadal
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 - 2 என எளிதில் கைப்பற்றினார்.

    இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

    டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்தவர் சிட்சிபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #RogersCup #Tsitsipas #RafaelNadal #SimonaHalep
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.

    மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார். இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.



    சிட்சிபாசுக்கு நேற்று 20-வது வயது பிறந்தது. இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும், ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார்.

    முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.



    பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் (உக்ரைன்) புரட்டியெடுத்தனர்.

    மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப், ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள். அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ், ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 
    ×