search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்"

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது.
    • புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

    திருப்பூர் :

    இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது. தற்போது, தொழில் துறையினர் 84 பேர், உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    அந்தவகையில், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கிளைக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான புதிய தலைவராக பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கீதா; துணை தலைவராக அகில் அப்பேரல் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். புதிய நிர்வாகி களுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

    திருப்பூரில் சி.ஐ.ஐ., கிளை துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக தற்போது, ஒரு பெண் தொழில்முனைவோர், கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்
    • சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    கன்னியாகுமரி:

    தமிழக பா.ஜ.க. தலை வர் அண்ணாமலை வருகிற 12-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இதையொட்டி கன்னி யாகுமரிக்கு வரும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோ சிப்பதற்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.

    கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வ ரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் சுயம்பு லிங்கம், தெற்கு வட்டாரத் தலைவர் சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    கன்னியாகுமரிக்கு வருகிற 12-ந்தேதி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம்.
    • திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன் நியமனம் செய்யப்படுகிறார்.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களை நியமனம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.அதன்படி திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக கிரி சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

     இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவராக, க.கிரீஷ் சரவணன்  நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு பல்லடம், காங்கேயம், தாராபுரம்ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு நமது கட்சியில்பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறுஅந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • காண்டிராக்டர் மீது வழக்கு
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி.

    இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில சாலை பணி களை காப்புக்காடு பகுதி கோணத்து விளையை சேர்ந்த பிரிங்கோ ஸ்டான்லி (வயது 35) என்பவர் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.

    இதில் குறிப்பிட்ட சாலை பணிகளை 2 மாதத்தில் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட சாலை பணிகளை முடிக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

    இதையடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்காதது குறித்து தலைவர் ராஜேஸ்வரி, ஒப்பந்ததாரரிடம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரர் ஸ்டான்லி, நேற்று தலை வரின் அறைக்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் சுனில்குமார், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கன்னியாகுமரியில் நடந்த மாநில மாநாட்டில் முடிவு
    • 141 பேர் கொண்ட மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில தலைவராக சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

    சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. பின்னர் நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் சவுந்தரராஜன் மீண்டும் தலைவராகவும், சுகுமாறன் பொது செயலாளராகவும், மாலதி சிட்டிபாபு பொருளாளராகவும், உதவி பொது செயலாளர்களாக குமார், திருச்செல்வன், கண்ணன், ஆறுமுக நயினார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக சிங்காரவேலு, விஜயன், சந்தரன், கணேசன், உதயகுமார், கருப்பையன், கிருஷ்ணமூர்த்தி, பொன்முடி, தெய்வராஜ், சிங்காரன், ஜானகிராமன், மகாலட்சுமி, மகேந்திரன், டெய்சி, செண்பகம், ரங்கராஜன், ஐடா ஹெலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    மாநில செயலாளர்களாக முத்துகுமார், ரசல், தங்க மோகனன், திருவேட்டை, ஜெயபால், ராஜேந்திரன், கோபிகுமார், ரங்கராஜ், பாலகிருஷ்ணன், நாகராசன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி, குமார், சிவாஜி, ஸ்ரீதர், தேவமணி உட்பட 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

    நிர்வாகிகளை அறிமுகம் செய்து சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.

    • மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வின் பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசை அகற்றிவிட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங்கட்சியை எதிர்த்து பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தவும், பல திட்டங்களை வகுக்கவும் ஒரு வலுவான தலைவராக அவர் திகழ்கிறார். அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

    மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் வழியிலே அவரின் மேலான ஆலோசனையை கேட்டு நாம் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அமோகமாக வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமர செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர் செயலாளர் ராஜா, மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டிபன், சிவாஜி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, சேவியர், ஸ்ரீதர், செல்வ மணி, பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
    • 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளது.

    மங்கலம் :

    அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறாமல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சுவிலை ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த தொழிலுக்கு மின்கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

    விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள ஜவுளித்தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இயங்கிகொண்டு உள்ளது.குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். விசைத்தறி தொழில் கஷ்டங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே தமிழக அரசு விசைத்தறிக்கு தனியாக சாதா விசைத்தறி என டேரிப் பிரித்து மானியமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் விசைத்தறிக்கு சுமார் 30சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு வருடம் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அழிந்து வரும் இத்தொழிலையும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமார் 10 லட்சம் நபர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

    சென்னிமலை:

    செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில்உள்ள கிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் கருமாண்டி செல்லி பாளையம், பெருந்துறை பேரூராட்சி வழியாக கொண்டு வரப்பட்டு சென்னிமலை, ஈங்கூர் ரோ ட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.

    சென்னிமலை பேரூராட்சிக்கு தினமும் 22.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டும். இதில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 22 நாட்கள் ஆகியும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். தண்ணீர் விட்டால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல முடியும் என கூறி அமர்ந்து கொண்டனர்.

    தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் 15 பேரும் மதிய உணவு உண்ணாமல் மிக பிடிவாதமாக போரா ட்டத்தில் இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அமைச்சர் சாமிநாதனின் பரிந்துறையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செ ல்வம், தமிழ்நாடு குடிநீ ர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (பராமரிப்பு பிரிவு) முத்து லிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    அப்போது சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழா ய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீ ர் வி நியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

    பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு பேராட்டம் 6½ மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

    • பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று உறுதி எடுப்போம்.
    • மனிதநேயம் மிக்கவர்களாக உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- 75-வது சுதந்திர தின ஆண்டைக் கொண்டாட தயாராகும் இந்த நேரத்தில் பலர் செய்த தியாகத்தை நாம் நினைவு கூர்ந்து நமக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் சிறப்புகளை நினைவுபடுத்திக்கொண்டு நாம் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு அவசியம் அறிய செய்ய வேண்டும்.

    அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், தீவிரவாதிகளின் அட்டகாசம் இவைகளுக்கு நடுவே நீங்கள் லட்சியவாதிகளாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பல்வேறு தலைவர்களும், முகம் தெரியாத போராளிகளும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று உறுதி எடுப்போம். கொங்கு நாடு மக்கள் சார்பாகவும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர்.
    • பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் 2பேர் போட்டியிட்டனர். பிரேமாபூட்டு சாவி சின்னத்திலும் , பரிமளா ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.

    இதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரேமா 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட பரிமளா 144 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

    • காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் எச்சரிக்கை
    • குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்ற நட்பாசையுடன் பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மக்கள் மத்தியில் மதத்தை வைத்து மறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

    இப்படிப்பட்ட கட்சியால் எப்படி நாட்டில் ஒற்றுமையை கொண்டு வர முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண பலத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அங்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    பாஜகவின் மோசமான ஆட்சியினால் இன்றைக்கு பொருளாதாரம் படுபாதாளத்தில் சென்றுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் பெருகி கொண்டிருக்கிறது.கேஸ் விலை எங்கோ சென்று விட்டது.

    அதை முதலில் குறைத்து பெண்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுங்கள்.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஐ தாண்டி விட்டது அதை சரி செய்யுங்கள்.

    மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியை தேவையில்லாமல் அவதூறாக பேசினால் பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×