search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்"

    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி ஜி.அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகரசபை மற்றும் யூனியன் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த நிதி ஆண்டுகளில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 4,800 மாணவர்களுக்கு ரூ.106 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ரூ.120 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் கல்வித்திருவிழா நடத்தி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கவும், கல்விக்கடன் தொடர்பாக மாணவர்களுக்கான விளக்கங்களை வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 46 ஆயிரம் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலி ருந்தே வேலை யின்மையின் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவருகிறது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த அனுராக் தாகூரை பதவியில் இருந்து தூக்கிய சுப்ரீம் கோர்ட், அதற்கென தனி குழுவை நியமித்தது. நீதிபதி லோதா குழு பரிந்துரைத்த நிர்வாகிகளின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

    இந்நிலையில், அடுத்த பிசிசிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைவராக இருப்பவர்களுக்கு என சில தகுதிகளை நீதிபதி லோதா குழு பரிந்துரைத்தது. இந்த தகுதிகள் கங்குலிக்கு இருப்பதால் அவர் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    தற்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் கங்குலி, இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, ஐபிஎல் ஒழுங்கமர்வு குழு உறுப்பினர், கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளார். கங்குலிக்கு மூத்த வீரர்கள் பலரின் ஆதரவும் இருப்பதால் அவர் தலைவராவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இந்த வாரத்தில் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு கடந்த 1-ம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 

    இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல் வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்தது.

    இந்த வாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இந்த தகவலை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
    #CauveryManagementAuthority
    ×