search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 185432"

    • நாகர்கோவில், வடசேரி பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.
    • விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், வடசேரி பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிளாட்சன் எர்வர்ட்சாம். இவரது மகன் நிவேத் (வயது 19).

    நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் நிவேத் படித்து வந்தார்.நேற்று இரவு நிவேத் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.வெளியே சென்ற நிவேத் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வடசேரியில் இருந்து பள்ளிவிளை நோக்கி வந்து கொண்டிருந்த போது காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதில் நிலை தடுமாறி நிவேத் ரோட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    சிறிது நேரத்திலேயே நிவேத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பலியான நிவேதின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    நண்பர்கள் தினத்தை ஒட்டி தனது தந்தை வைத்திருந்த ரூ.46 லட்சத்தை எடுத்து பள்ளி நண்பர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மாணவன் அள்ளிக்கொடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் நபரின் மகன் சமீபத்தில் வித்தியாசமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். 

    தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தில் ரூ.46 லட்சம் திருடிய அந்த மாணவன், தனது பள்ளி மற்றும் டியூசன் நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார். தினக்கூலி ஒருவரின் மகனுக்கு ரூ.15 லட்சம், தனது வீட்டுப்பாடத்தை முடிக்க உதவி செய்த நண்பனுக்கு ரூ.3 லட்சம் என வாரி இறைத்துள்ளார்.

    வெறுங்கையோடு அனைவரும் போய் விடக்கூடாது என்பதற்கான வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வாங்கி பரிசளித்துள்ளார். மேலும், டியூசன் நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளி கைசெயின் வாங்கி கொடுத்து தனது அன்பை காட்டியுள்ளார்.

    இவரிடம் பரிசாக பெற்ற தொகையில் ஒரு மாணவன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். பீரோவில் இருந்த பணத்தை காணாததால் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். வெளியில் இருந்து யாரும் திருடிய தடயங்கள் இல்லாததால் போலீசார் வீட்டில் உள்ள நபர்களை சந்தேக வளையத்தில் கொண்டு வந்தனர்.

    அப்போதுதான், வாரி வழங்கிய வள்ளளின் செயல்பாடுகள் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த மாணவனிடம் பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும் பட்டியல் போட்டு அவர்களிடம் இருந்த பரிசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ரூ.15 லட்சம் பரிசாக பெற்ற மாணவன் மட்டும் தற்போது தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிளஸ்-1 மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கீழநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தாள்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவர் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்றான். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுறது.

    இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறி உள்ளாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
    தன்னைப்போல், நரிக்குறவர் குழந்தைகள் படித்து நாகரீகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், குழந்தைகளை படிப்பதற்கு வெளியூர் அழைத்து செல்ல இருந்த மாணவனை மாவட்ட கலெக்டர் பாராட்டி உள்ளார்.
    ஆரணி:

    ஆரணி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் நேற்று கலெக்டர் கந்தசாமி கலந்துக் கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாணவன் நரிக்குறவர்களுடன் உள்ளே நுழைந்தார்.

    மாணவனை பார்த்ததும், கலெக்டர் ‘வாங்க சார்’ என்று அழைத்து உட்கார நாற்காலி போடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாற்காலி கொண்டு வந்ததும் மாணவன் உட்கார்ந்தார். அவரிடம் கலெக்டர் சொல்லுங்க சார்? என்றார்.

    அந்த மாணவன், ஆரணி அடுத்த பையூரில் வசிக்கும் நரிக்குறவ மாணவன் சக்தி (வயது 13) என்று தன்னை அறிமுகப்படுத்தினார். என் தந்தை ரமேஷ், தாய் தமிழரசி. எங்கள் குடும்பம் ஊசி மணி, பாசி மணி, பலூன் விற்கும் வருவாயில் பிழைக்கிறோம் என்று கூறினார்.

    மேலும் மாணவன் சக்தி கூறுகையில்:- 3 ஆண்டுகளுக்கு முன்பு பலூன் விற்க காஞ்சீபுரத்திற்கு சென்றேன். அங்கு என்னை பார்த்த, ‘தன் கையே தனக்கு உதவி’ தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் மகாலட்சுமி, நீ ஏன் படிக்க கூடாது. நான் உன்னை படிக்க வைக்கிறேன். இனி பலூன் விற்காதே, படித்து நீ பெரிய ஆளாக வருவாய் என்று அழைத்துச் சென்று உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்தார்.

    இதையடுத்து, நானும் மற்ற மாணவர்களை போல் டிப்-டாப்பாக மாறினேன். 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி 7, 8ம் வகுப்பு படித்தேன். இதையடுத்து, ஆற்காடு அடுத்த வேப்பூரில் உள்ள என் உறவினர்களை பார்க்க சென்றேன்.

    என்னை பார்த்த அவர்கள் ஆச்சரியப்பட்டனர். காரணம் நான், குறத்தி மகன் படத்தில் நரிக்குறவராக நடித்திருக்கும் ஜெமினி மகன் போலவே படித்து டிப்-டாப்பாக மாறி இருந்ததால் உறவினர்களுக்கு திகைப்பாக இருந்தது.

    உறவினர்களிடம் நடந்த வி‌ஷயத்தை சொல்லி உங்கள் பசங்களையும் என்னுடன் அனுப்புங்கள். எல்லாரும் படித்து மற்றவர்களை போல் நாகரீகமாக வாழ்வார்கள் என்று கூறினேன்.

    அதன்படி, கடந்த ஆண்டு வேப்பூர் நரிக்குறவர்களின் பிள்ளைகள் 25 பேரை கல்வி கற்க காஞ்சீபுரத்தில் சேர்த்துள்ளேன். இந்தாண்டு மேலும் 15 மாணவர்களை அழைத்துச் செல்ல உள்ளேன் என்று மாணவன் சக்தி கூறினார்.

    இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட கலெக்டர், மாணவன் சக்தியை பாராட்டினார். மேலும், இனிமேல் எல்லாரும் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே படியுங்கள். அதற்கான வசதியை நான் செய்து கொடுக்கிறேன் என்றார்.

    அடுத்த நிமிடம் மாணவன் சக்தி, ‘வேண்டாம் சார்... நாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தால், மறுபடியும் பெற்றோர்கள் ஊசி மணி, பாசி மணி விற்க அழைத்து செல்வார்கள்.

    பசங்களுக்கும் புத்தி மாறிவிடும். எனவே, நாங்கள் காஞ்சீபுரத்திலேயே படிக்கிறோம் என்று கூறினார். அப்போது நரிக்குறவர்கள் எங்களுக்கு வீடு இல்லை. ரேசன் கார்டு இல்லை என்றனர். அதற்கு கலெக்டர் இலவச வீடு கட்டித்தரவும், ரேசன் கார்டு வழங்குவதாக கூறி அனுப்பி வைத்தார்.

    மாணவன் சக்தியை கவுரவிக்க கலெக்டர் நேற்று மாலை பையூரில் உள்ள நரிக்குறவர் பகுதிக்கு நேரில் சென்றார். கலெக்டர் கந்தசாமியை சால்வை அணிவித்து நரிக்குறவர்கள் வரவேற்றனர்.

    எங்களுக்கு வீடு இல்லை. குடிசையில் தான் வசித்து வருகிறோம். தண்ணீர் வசதி இல்லை. மின்சார வசதி, சாலை வசதி இல்லை என்று கூறினர். அந்த பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், நரிக்குறவர்களுக்கு வேறு இடம் தேர்வு செய்து 3 அல்லது 4 மாதங்களில் இலவசமாக வீடு கட்டி தரப்படும். இவ்வளவுக்கும் காரணம் மாணவன் சக்தி தான் என்று கூறினார்.
    ×