search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலக்கியம்"

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் வயோதிகம் காரணமாக காலமானார். #VSNaipaul
    லண்டன்:

    கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபாலின் முழுப்பெயர் சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவார். 

    பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக அந்தாண்டு நோபல் பரிசு நைபாலுக்கு வழங்கப்பட்டது.

    இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்களை பற்றி இந்த புத்தகம் பேசியது. இந்நிலையில், 85 வயதான அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். நைபாலின் மறைவுக்கு சர்வதேச அளவிலான பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
    தர்மபுரி:

    ராமாயண ரகசியம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு தர்மபுரி டி.என்.சி. விஜய் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெ.பி.நாகராஜன், தொழில் அதிபர் டி.என்.சி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சஞ்சீவராயன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இதிகாசங்கள் நமது வாழ்க்கையை செழுமைப்படுத்துகின்றன. இந்திய மண் பெருமைப்படும் வகையில் நமக்கு ராமாயணமும், மகாபாரதமும் கிடைத்து உள்ளன. ராமாயணம் இதயம் போன்றது. மகாபாராதம் மூளையை போன்றது. உலகத்தில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் படித்த பின்னர் கம்பராமாயணத்தை படித்தால் கம்பனின் படைப்பாற்றல் குறித்து தெரியவரும். கம்ப ராமாயணத்தில் திருக்குறள் சார்ந்த 700 கருத்துக்களை காணமுடிகிறது. வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மிகத்தில் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர். 
    தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார். #NobelPrizeforLiterature #LarsHeikensten #NobelPrizepostponed

    ஸ்டாக்ஹோம்:

    உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்தது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இலக்கிய படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர். 



    இந்நிலையில், 2018-ம் ஆண்டு மட்டுமின்றி 2019-ம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன், "தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை", என்று தெரிவித்துள்ளார். #NobelPrizeforLiterature #LarsHeikensten #NobelPrizepostponed
    ×