search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஆத்திரமடைந்து பஸ் முன், பின் கண்ணாடிகளை உடைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்லும் அரசு பஸ்சை வைப்பூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

    அப்போது கங்களாஞ்சேரி கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த கங்களாஞ்சேரி புளியந்தோப்பு விஜய் (23) என்பவர் பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று டிரைவர் திருநாவுக்கரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் முற்றி விஜய் ஆத்திரம் அடைந்து செங்கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளை உடைத்தார்.

    கண்ணாடி துகள்கள் பட்டு டிரைவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு திருவாரூர் அரச மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.

    • படுத்து தூங்கிய பயணி மீது பஸ் மோதி காயம் ஏற்பட்டது
    • பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் புலியூர் தென்னத்திரையான் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51). வெளியூர் சென்ற இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் விரைவு பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் நள்ளிரவு படுத்து தூங்கினார்.

    இந்த நிலையில் தென்காசியில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் அரசு விரைவு பேருந்து பஸ் நிலையம் வந்தது. அந்த பஸ்ஸினை தென்காசி புளியங்குடி பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த முகமது மொய்தீன் பிச்சை (41) ஓட்டி வந்தார். பின்னர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் மீண்டும் பஸ்ஸை பின்னோக்கி இயக்கிய போது எதிர்பாராத விதமாக அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜ் மீது மோதியதாக கூறப்பட்டது.

    இதில் அவரது இடது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக திருச்சி தெற்கு போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து அந்த பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்யாணஓடை கிராமத்தில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அக்பர் அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது 46 ).

    இவர் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியில் இருக்கும் தனது சித்தப்பா வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மதுக்கூர் அருகே கல்யாணஓடை கிராமத்தில் மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அக்பர்அலி பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அக்பர்அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அக்பர்அலியின் சகோதரர் ஹமருல் ஜமால் மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் வேனின் டிரைவர் நிறுத்த முயன்றார்.
    • வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது இதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் காயமடைந்தனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோ ணம் காடு வெட்டி விடுதியை சேர்ந்த 13 பேர் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாடகை வேனில் காலை 9 மணி யளவில் திருவோணத்திற்கு புறப்பட்டனர்.

    வேன் திருவோணம் பகுதிய அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

    இதனால் வேனின் டிரைவர் நிறுத்த முயன்றார்.

    ஆனால் வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் காயமடைந்தனர்.

    வேன் கவிழ்ந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து வேனில் இருந்தவர்களை மீட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.

    இதையடுத்து காயமடை ந்த 13 பேரையும் திருவோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பரபரப்பான காலை வேளையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விபத்தில் வாலிபர் பலியானார்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த லட்சுமணன் படுகாயம் அடைந்தார்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 33). இவருக்கு பஞ்சா என்ற மனைவியும், தங்கப்பாண்டி, பாண்டீஸ்வரி என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் முத்தையா பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தனது நண்பர் லட்சுமணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    அவர்கள் சின்ன உடைப்பு பகுதியில் சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த லட்சுமணன் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி கோழிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி இவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.
    • அப்போது அருகில் சென்ற மின் கம்பி அவர் மீது உரசி தூக்கி வீசப்பட்டு கருகினார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி கோழிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 21). இவர் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு பருப்பு மில் தொழிற்சாலை வேலை பார்த்து வருகிறார்.

    சக்தி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார். அப்போது அருகில் சென்ற மின் கம்பி அவர் மீது உரசி தூக்கி வீசப்பட்டு கருகினார்.

    அவரது சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்டு அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஒன்றில் சண்முகசுந்தருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவரது காலில் பிளேட் வைக்கப்பட்டது.
    • விபத்தில் அடிபட்டதில் இருந்து கடந்த சில வாரங்களாக அவருக்கு வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் முனியா ண்டவர் காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தர் (வயது 45 ) ஆட்டோ டிரைவர்.

    இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சண்முகசுந்தருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரது காலில் பிளேட் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் விபத்தில் அடிபட்டதில் இருந்து கடந்த சில வாரங்களாக அவருக்கு வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது.

    இதனால் மன வேதனை அடைந்த சண்முகசுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகசுந்தர் உடலை மீட்டு பிரதி பரிசோத னைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டாற்று பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பேராவூரணி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி மயிலாடு தெருவை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 60).

    இவர் கட்டுமாவடி மொத்த மீன் விற்பனை மையத்திற்கு தினசரி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து மீன் வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்வது வழக்கம்.

    சம்பவத்தன்று அதிகாலை கட்டுமாவடி சென்று மீன் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது அம்மணிசத்திரம் காட்டாற்றுப் பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் அலாவுதீன் (39).அளித்த புகாரின்பேரில் சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திலேயே மினிவேனை விட்டுவிட்டு தலைமறைவான ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக கண்டியூர் வந்தனர்.
    • அரசு பஸ் எதிர்பாராத விதமாக யூகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே நடுக்காவேரி பாசார் தெருவைச் சேர்ந்த முகேஸ் (32), அவருடைய தம்பி யூகன் (29) ஆகிய இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக கண்டியூர் வந்தனர்.

    பிறகு கண்டியூரிலிருந்து நடுக்காவேரி சென்றனர். நடுக்காவேரி அருகே மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக யூகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

    இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் முகேஸ் (32) கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன்,
    சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் சென்று யூகன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வருகிற 9-ம் தேதி முகேஸ்க்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் யூகன் இறந்ததால் அக்குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணம் சென்ற ஒரு அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.
    • பஸ் டிரைவர் வீரமுரசு என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணம் சென்ற ஒரு அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் ஒரு பஸ் நிலை தடுமாறி திருப்பனந்தாள் ஊருடையப்பர் கோவில் எதிரே உள்ள மனோகரன் என்பவரது வீட்டின் சுவர் மீது மோதியது.

    இதில் பஸ்சும், வீட்டின் சுவரும் சேதமடைந்தன. இதில் பஸ் டிரைவர் வீரமுரசு என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

    காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது.
    • கருமந்துறை தலைக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் முருகன் (வயது 14) நேற்று மதியம் உணவு அருந்தி விட்டு வகுப்பறைக்கு சென்ற போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி யில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    தவறி விழுந்த மாணவர்

    இந்த பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 77 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இதில் 9-ம் வகுப்பு படிக்கும் சேலம் மாவட்டம் கருமந்துறை தலைக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் முருகன் (வயது 14) நேற்று மதியம் உணவு அருந்தி விட்டு வகுப்பறைக்கு சென்ற போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

    தொடர் சிகிச்சை

    இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 3 மீட்டர் சுற்றளவு பருமனான இந்த அரச மரத்தின் கிளைகள் மெயின்ரோடு உள்பட நாலா புறமும் படர்ந்து சாலைப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் குளிர் நிழலும், இனிய காற்றும் வழங்கி பயனளிக்கிறது.
    • இந்த மரத்திலிருந்து சாலை நோக்கி வளர்ந்த 2 பெரிய கிளைகள் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.

    திருவையாறு:

    திருவையாறு -கல்லணை மெயின் ரோடில் கூத்தாடி மதகு எனும் இடத்தில் காவிரி பாசன வாய்க்கால் தலைமதகு உள்ளது. இதனருகில் வடகரையில் அரச மரம் உள்ளது. இந்த மரத்தினருகில் முனியாண்டவர் கோவில் உள்ளது. சுமார் 3 மீட்டர் சுற்றளவு பருமனான இந்த அரச மரத்தின் கிளைகள் மெயின்ரோடு உள்பட நாலா புறமும் படர்ந்து சாலைப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் குளிர் நிழலும், இனிய காற்றும் வழங்கி பயனளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று இந்த மரத்திலிருந்து சாலை நோக்கி வளர்ந்த 2 பெரிய கிளைகள் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது சமயபுரத்திலிருந்து திருவையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்- மனைவி மீது விழுந்ததில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலையோர மின்இணைப்புகளைத் துண்டித்து கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் திருவையாறு-கல்லணை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    ×