search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அவினாசி :

    அவினாசி அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது42). இவரும் இவரது மகன் தரணி (15) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அவினாசியை அடுத்து அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வழிபறி சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நந்தினி(வயது23). சம்பவதன்று நந்தினி தனது கணவர் பாண்டியனை புதுக்கோட்டை பேரூந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு வீடு நோக்கி தனது இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது செல்லுக்குடி அருகே வந்தபோது பின்னால் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் நந்தினி அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நந்தினிக்கு கை, கால்கள் காயமடைந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ய முயன்ற இருவரை தேடி வருகின்றனர்.

    • பூங்குடி கிராமத்தில் சாலையோரம் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாலூரன்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரி புத்தூர் நோக்கி தனியாருக்கு சொந்தமான லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது வரும் வழியில் பூங்குடி கிராமத்தில் சாலையோரம் உள்ள காளியம்மன் கோயில் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது.

    அப்போது காளியம்மன் கோயில் முன்புறம் போடப்ப ட்டிருந்த கொட்டகை மீதும் லாரி மோதியதில் கொட்டகை கீழே விழுந்தது. இதில் கொட்டகை ஓரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (25) என்பவர் மீதும் கீற்று கொட்டகை விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ராஜேஷை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உரிய நேரத்தில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தினர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் முதியவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்டர் மீடியனில் கார் மோதி சாலையில் நடுவில் கவிழ்ந்தது.

    சேலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவரது மனைவி பரிமளா (65). இவர்களது மருமகன் பாலு (45). இவர் சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு தேவையான கிராணைட் கற்களை கிருஷ்ணகிரியில் வாங்க முடிவு செய்தார்.

    இதையடுத்து இன்று அதிகாலை சொந்த ஊரில் இருந்து ஒரு காரில் 3 பேரும் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் காண்டிராக்டர் தங்கவேல் என்பவரும் காரில் இருந்தார். காரை முருகனின் மருமகன் பாலு ஓட்டினார். இந்த கார் இன்று காலை 7 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த முருகன் காயம் அடைந்து கதறினார். மேலும் காருக்குள் சிக்கிய மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்களை மீட்க முயன்றனர். மேலும் அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதில் முருகன் மட்டும் பலத்த காயமடைந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதையடுத்து சாலையில் கிடந்த காரை அப்புறப்படுத்திய அன்னதானப்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பனியன் தொழிலாளியை அனுப்பி வைத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றில் பல மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது. இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது சாலையோரம் இருந்த பனைமரம் பனியன் தொழிலாளியான ரங்கன் (வயது 45) என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிலிருந்த ரங்கன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    • புகாரின்பேரில் மெலட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • சாலியமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில் நகைகளை பதுக்கி வைத்து விட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இரும்புதலை கிராமத்தில் திருப்பத்தூரை சேர்ந்த சகோதரர்கள் தமிழ்செல்வன், சரவணன், கார்த்திகேயன், ஆகியோர் நடத்தி வந்த நகை அடகு கடையில் கடந்த வெள்ளி–க்கிழமை கடையில் வேலை–பார்த்து வந்த ராஜேந்திரன் (வயது 72) என்பவரை சிலர் தாக்கி நகைகளை கொள்ளை–யடித்து சென்றனர்.

    இது தொடர்பான புகாரின்பேரில் மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாபநாசம் டி.எஸ்.பி. பூரணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து–கிருஷ்ணன், தனிபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதில் அதே அடகு கடையில் பல வருடமாக வேலை பார்த்து வந்தவர்களில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் ராஜேந்திரனே நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்து. சாலியமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில் நகைகளை பதுக்கி வைத்து விட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதை அடுத்து ராஜேந்திரனை கைது செய்த போலீசார் கொள்ளை போன 37½ பவுன் நகைகள், 2 ஆயிரத்து 601 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    குமாரபாளையத்தில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் குப்புலட்சுமி(வயது 54). கூலி தொழிலாளி. இவர் இரவு சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு, காளியம்மன் கோவில் பகுதியில் தனது மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த கார் மோதியதில், குப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமார பாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் ஈரோடு, சென்னிமலை ரோட்டை சேர்ந்த மளிகை கடை தொழில் செய்து வரும் கார்த்திகேயன்(31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் கோபி(29), கட்டிட தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பிரிவு சாலையில் மொபட்டில் சென்றார்.

    அதே வழியில் வந்த வேன், மோதியதில், கோபி பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ், (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாடியில் இருந்து தவறி விழுந்து சமையல் தொழிலாளி காயம் ஏற்பட்டது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சூடன். இவரது மகன் அருண் (வயது 34). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியில் சமையல் செய்வதற்காக வந்திருந்தார். நேற்று இரவு சமையல் வேலையை முடித்த பிறகு அந்த மண்டபத்தின் உள்ள இரண்டாவது மாடியில் தூங்க சென்றார்.

    அப்போது மாடியில் உள்ள கைப்பிடி சுவற்றின் மீது சிறிது நேரம் உட்கார்ந்து இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த சக ஊழியர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே நாய் கடிக்க வந்ததால், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு காலனியை பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர் கீழ்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த நாய் திடீரென வள்ளியை விரட்டி சென்று கடிப்பதுபோல் சென்றது. இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி அங்கிருந்து வேகமாக ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்ற வள்ளி தனது கணவர் ரவியிடம் நடந்ததை கூறினார்.

    பின்னர் ரவி தனது மனைவி வள்ளி மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தட்டிக் கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும், ரவி மற்றும் அவரது மனைவி வள்ளியும் படுகாயம் அடைந்தனர்.

    பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அசோக், குப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அசோக்கை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் ரவி, திவான், ராதா, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் திவானை கைது செய்தனர்.

    இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉஷேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ×