search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • தட்டு தடுமாறி செல்லும் வாகனங்கள்
    • சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பல்வேறு சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில் நகரின் பிரதான சாலையாக கருதப்படும் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.ஆனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாத அளவிற்கு பல்லாங்குழிகளாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலையில் செல்வோர் அவல நிலையை சொல்லி மாளாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களும் உள்ளது.

    இங்கு பொருட்கள் வாங்குவதற்காக குமரி மாவட டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஏராள மான பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.அவர்களும் இந்த சாலையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.இந்த சாலையின் வழியாகத்தான் அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. டிரைவர்கள் பஸ்களை இயக்க முடியாத நிலையில் இந்த சாலை பல்லாங்குழிகளாக உள்ளது.

    எனவே அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் இந்த சாலையில் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மோசமான சாலையின் காரணமாக தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.மிகப்பெரிய அளவில் விபத்துகள் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகராட்சி அதிகாரிகள் போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. சாலையில் உள்ள பள்ளங்கள் ஒருபுறம் இருக்க சாலை விரிவாக்கத்திற்காக அந்த பகுதியில் உள்ள கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு மின்கம்பங்கள் மாற்றப்பட்டது.

    ஆனால் இன்னும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.எனவே சாலை பராமரிப்பின் போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியையும் சேர்த்து தார்தளம் அமைத்து இருவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்துமே போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் இருவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். எனவே முதல் கட்டமாக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளையும் சேர்த்து தார்சாலை அமைத்து முதல் கட்டமாக இந்த சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது‌.

    மேலும் நாகர்கோவில் வேப்ப மூட்டில் இருந்து டதிபள்ளி செல்லும் சாலை விரிவாக்க பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சுற்றி செல்லும் நிலை உள்ளது.எனவே நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் காலை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலை விரிவாக்க பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    • 2 பெண்கள் திடீர் மரணம் அடைந்தனர்.
    • அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பாரைபட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அல்போன்சா (வயது 42). இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து வந்து இங்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் அல்ேபான்சாவுக்கு உடல்நிலை சரியில்லாததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த அவர் திடீரென இறந்தார். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (38). இவர் குடும்பத்துடன் 2 மாதங்களுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தார். சம்பவத்தன்று முத்துலட்சுமி திடீரென இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்ன திருப்பதி பெருமாள் கோவில் பின்புறம் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
    • கிணற்றில் இன்று காலை 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பெருமாள் கோவில் பின்புறம் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.

    இந்த கிணற்றில் இன்று காலை 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினருடன் இணைந்து அவரை மீட்டனர்.

    கிணற்றில் பிணமாக மிதந்தது சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை மேற்கு தெருவை சேர்ந்த வேலாயுதம் என்பவரது மனைவி சீரங்காயி (80) என்பது தெரிய வந்தது. வேலாயுதம் மத்திய சிறையில் வார்டனாக இருந்த போது 1984-ம் ஆண்டு இறந்து விட்டார். சீரங்காயி தற்போது பேரன் கார்த்திக்கேயனுடன் தங்கியிருந்ததும், பேரனுடன் சண்டை போட்டு விட்டு வெளியில் சுற்றி வந்ததும் காணமல் போனவரை கடந்த 2 நாட்களாக தேடி வந்த நிலையில் தற்போது பிணமாக மிதந்ததும் தெரிய வந்தது.

    இதனால் அவர் தற்கொலை செய்தாரா, அல்லது தவறி விழுந்து இறந்தாரா?  என்பது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிைடையே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா தொற்றுக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் காசநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
    • காச நோய் அறிகுறிகள் இருந்தவர்களும் பரிசோதனைக்கு அச்சப்பட்டு சிகிச்சையை தள்ளிப் போட்டதால் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது

    திருச்சி:

    கொரோனா வைரசின் தாக்கத்தால் திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காசநோய் இறப்பு விகிதம் அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019-ல் 7 சதவீதமாக இருந்த காசநோய் இறப்பு விகிதம் 2021-ல் எட்டாகவும், 2022-ல் 9 ஆகவும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் 2019-ல் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,474 ஆக இருந்தது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் 255 பேர் இறந்தனர். 2020-ல் பாதிப்பு 2,158 ஆக இருந்தது. இதில் 193 இறந்தனர். 2021-ல் 2046 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 224 பேர் மடிந்தனர்.

    இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளில் 8,098 பேர் காசநோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 328 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இறப்பு விகிதம் அதிகரித்ததற்கு கொரோனா வைரஸ் தாக்கமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோவிட் மற்றும் காச நோய் அறிகுறிகள் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும்.

    இதனால் கோவிட் பயத்தினால் காச நோய் அறிகுறிகள் இருந்தவர்களும் பரிசோதனைக்கு அச்சப்பட்டு சிகிச்சையை தள்ளிப் போட்டதால் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட காச நோய் அலுவலர் டாக்டர் எஸ் சாவித்திரி கூறும் போது, காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடனே பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொண்டால் நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

    இறப்பு அதிகரித்ததற்கு கோவில் சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    முதல் இரண்டு காலாண்டுகளில் இந்த ஆண்டு 103 காச நோயாளிகள் மட்டுமே இறந்துள்ளனர். காச நோய்க்கு தேவையான நல்ல மருந்து நம்மிடம் இருக்கிறது. தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தங்கள் கண்டறியும் ஒவ்வொரு காச நோயாளிகள் குறித்தும் உடனடியாக மாவட்ட காசநோய் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு காச நோய் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு முதல் மாதத்தில் ரூ.1000 மும், அடுத்தடுத்த 5 மாதங்களுக்கு ரூ.500-ம் வழங்கி வருகிறது எனக் கூறினார்.

    • தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என மகாசபை நிறுவன தலைவர் வலியுறுத்தினார்.
    • இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    அகில இந்திய அகமுடையார் மகாசபை நிறுவன தலைவர் ரஜினிகாந்த் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் மாணவியின் தாய் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு திட்டமிட்ட படுகொலை என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாணவியின் மரணம் குறித்து நீதி கேட்டு பெற்றோர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தி வந்தும் பள்ளி மாணவி மரண விவகாரத்தில் உளவுத்துறை, காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இதற்கு காரணமானவ ர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
    • இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் சட்டசபை சபாநாயகரும், மூத்த எஸ்ஏடி தலைவருமான நிர்மல் சிங் கஹ்லோன் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

    நிர்மல் சிங்கின் மறைவை உறுதி செய்த அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா தனது டுவிட்டர் பக்கத்தில், " குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் அருகே உள்ள தாதுஜோத் கிராமத்தில் கஹ்லோனின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கஹ்லோன் 1997 முதல் 2002 வரை அகாலி அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கான அமைச்சராக இருந்தார். அவர் 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.

    இந்நிலையில், இவரது மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும் பாதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "மூத்த அகாலி தலைவரும் முன்னாள் பஞ்சாப் விதான் சபா சபாநாயகருமான நிர்மல் சிங் கஹ்லோனின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கஹ்லோன் நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர். அவருடைய புத்திசாலித்தனமான ஆலோசனை எப்போதும் தவறவிடப்படும். இந்த நேரத்தில் கஹ்லோன் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • நகைச்சுவை நடிகர் பென்னி ஹில் உடன் பல்வேறு இரட்டை நடிப்பில் நடித்துள்ளார்.
    • எக்ஸ்பிரஸ்ஸோ போங்கோ, பாடல் புத்தகம் மற்றும் பாப்பி உள்ளிட்ட மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.

    ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு தீம் ட்யூனை தயாரித்த பிரிட்டிஷ் இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார். அவருக்கு வயது 94. இவரது மறைவு குறித்து, நார்மனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மாண்டி நார்மன் 11 ஜூலை 2022 அன்று ஒரு குறுகிய நோய்க்குப் பிறகு இறந்தார் என்ற செய்தியை நாங்கள் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

    1928-ல் லண்டனின் கிழக்கு முனையில் யூதப் பெற்றோருக்கு மாண்டி நார்மன் பிறந்தார். இவர் தனது16 வயதில் முதல் கிட்டார் இசைக் கருவியை பெற்றார்.

    ஆரம்பகாலத்தில் பிரிட்டிஷ் ராக்கர்ஸ் கிளிஃப் ரிச்சர்ட் மற்றும் டாமி ஸ்டீல் ஆகியோருக்கு பாடல்களை எழுதுவதற்கு முன்பு அவர் பெரிய இசைக்குழுக்களுடன் பணியாற்றினார். நகைச்சுவை நடிகர் பென்னி ஹில்லுடன் பல்வேறு இரட்டை நடிப்பில் நடித்துள்ளார்.

    டாமி ஸ்டீல் மற்றும் மேக் மீ அன் ஆஃபர், எக்ஸ்பிரஸ்ஸோ போங்கோ, சாங்புக் மற்றும் பாப்பி உள்ளிட்ட மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.

    1962-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'டாக்டர் நோ' என்கிற முதல் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கான கருப்பொருளை உருவாக்க தயாரிப்பாளர் ஆல்பர்ட் நார்மனை பணியமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடிந்து விழும் நிலையில் உள்ள பிணவறை உள்ளது.
    • விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனையானது தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனை ஆகும். மேலும் சிறந்த மருத்துவமனை என முதல்வரால் பாராட்டப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை மற்றும் பெண்கள் மகப்பேறு அவசர கால சிகிச்சை செய்து வருகின்றனர்.

    தினமும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் சேதம் அடைந்து மோசமான சூழ்நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். மருத்துவர்களே அந்தப் பிணவறைக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

    விரைவில் மாவட்ட நிர்வாகம் முதன்மை வாய்ந்த அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக பிணவறை கட்டிடத்தை ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அகமது மொய்தீன் (45) சமையல்காரர்.
    • எப்படி இறந்தார் என்பது குறித்து பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அகமது மொய்தீன் (45) சமையல்காரர். இவர் நேற்று இரவு 8மணி அளவில் வெளியூர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது திடீரென மொய்தீன் மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மொய்தீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டபோது சோகம்.
    • மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் இறந்துவிட்டார்.

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் யாத்ரீகர் ஆதி கைலாஷ் யாத்திரையின் 11வது குழுவுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் கஞ்சி முகாமிற்கு வந்தபோது பெண்ணிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பித்தோராகர் கண்காணிப்பாளர் லோகேஷ்வர் சிங் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் ரமேஷ் தத்தாத்ரேயா கடம் என்பவரின் மனைவி ஷீத்தல் ரமேஷ் கடம் (57). இவர் நேற்று இரவு தனது கணவருடன் கஞ்சி முகாமுக்குத் திரும்பிய பிறகு படபடப்பாக உணர்ந்துள்ளார். மருத்துவ உதவி அவரை அடையும் முன்பே பெண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

    ஆதி கைலாஷ் யாத்ரீகர்களின் 11-வது குழுவுடனான பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த நாள் ஓம் பர்வத்தை பார்வையிட குழு தயாராக இருந்தது. இந்நிலையில், பெண் யாத்ரீகர் உயிரிழந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிதம்பரம் அருகே தோழிகளுடன் விளையாடி விட்டு வீடு திரும்பிய 8-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிபடைபூதக்கேணி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜலாவுதீன். இவரது மகள் ஜாஹீத் பர்வின் (வயது 13).

    இவள் அங்குள்ள அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலையில் ஜாஹீத் பர்வின் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் கீழ் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    பின்னர் அவள் தனது வீட்டுக்கு சென்றாள். சிறிது நேரத்தில் ஜாஹீத் பர்வின் திடீரென்று மயங்கி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவளை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இது குறித்து கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜாஹீத் பர்வின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #Karunanidhi #DMK #RIPKarunanidhi
    சென்னை:

    தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

    சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது.  இந்நிலையில் 27.07.2018  அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

    இதையடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள் என தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

    இதற்கிடையே, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் தொண்டர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்திக்கும் போது வெளியான புகைப்படங்களும் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

    இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். 

    மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த கவலை அளிக்கும் அறிக்கை வெளியானதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால், அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



    கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர். திமுக நிர்வாகிகளும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஒருவித குழப்பமான சூழல் அங்கு ஏற்பட்டது. 

    இரவு முழுவதும் அவர் உடல்நிலை குறித்து எந்த தகவல்களும் வராததால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். இன்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியானது.

    பிற்பகலில், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதே நேரத்தில், காவேரி மருத்துவமனை வளாகத்தில் மூன்று இணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தடுப்புகள் அமைக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தை காவல் துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனினும், உறுதி குலையாத தொண்டர்கள் எழுந்து வா தலைவா என குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். 

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6.10 மணிக்கு காலமானதாக மருத்துவ அறிக்கை வெளியானது. 

    திமுக தலைவரின் மறைவை ஏற்க முடியாத தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் தவித்து வருகின்றனர். 

    #dmk #karunanidhi #RIPKarunanidhi
    ×