search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    கருணாநிதி உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக டி.வி.யில் செய்தி பார்த்த தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பெண்ணாடம்:

    கருணாநிதி உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக டி.வி.யில் செய்தி பார்த்த தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ரத வீதியை சேரந்தவர் குப்புசாமி(வயது 75). தி.மு.க. பிரமுகர். இவர் தி.மு.க.தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.

    கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை குப்புசாமி வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாக செய்தி வாசிக்கப்பட்டது.

    இதைகேட்டதும் குப்புசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

    இறந்துபோன குப்புசாமிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
    உடலுறவின் போது இஸ்ரேலை சேர்ந்த பெண் மூச்சுத்திணறலால் உயிரிழந்த வழக்கில் காதலன் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மும்பை:

    இஸ்ரேலை சேர்ந்த யாகோப் மற்றும் அவரது பெண் தோழியும் கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்துள்ளார். 

    இதனை விபத்து மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பெண்ணின் பெற்றோர் இஸ்ரேலுக்கு சடலத்தை பெற்று சென்றனர். இந்நிலையில், அந்த பெண்ணின் மரணம் தொடர்பான உடற்கூறாய்வு அறிக்கை மும்பை போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், உடலுறவின் போது கழுத்து பகுதியில் யாகோப் கூடுதல் அழுத்தம் கொடுத்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மும்பை போலீசார், யாகோப் மீது மரணத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    யாகோப் தற்போது இஸ்ரேலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×