என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சலுகை"
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் 9-வது ஆண்டு விழா சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது.
- சியோமி ஸ்மார்ட்போன், கேஜெட்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை துவங்கி 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி வருகிறது. இதை ஒட்டி தனது ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் என ஏராளமான சாதனங்களுக்கு அதிகளவு விலை குறைப்பு, தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதன்படி சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சமாக ரூ. 21 ஆயிரம் வரையிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போதைய சிறப்பு விற்பனையின் கீழ் ரூ. 41 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.
விலை குறைப்பு விவரங்கள்:
சியோமி 12 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 79 ஆயிரத்து 999-இல் இருந்து தற்போது ரூ. 41 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 38 ஆயிரம் குறைவு ஆகும்.
சியோமி 12 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 84 ஆயிரத்து 999-இல் இருந்து தற்போது ரூ. 44 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 40 ஆயிரம் குறைவு ஆகும்.
விலை குறைப்பு மட்டுமின்றி ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் போனஸ்-ஆக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமி 12 ப்ரோ அம்சங்கள்:
- 6.73 3200x1440 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே, 120Hz ரிபெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- 8GB / 12GB LPPDDR5 6400Mbps ரேம்
- 256GB UFS 3.1 1450MBps மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
- 50MP பிரைமரி கேமரா, f/1.9
- 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 50MP ப்ரோடிரெயிட் கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ. வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்.பி. டைப் சி
- 4600mAh பேட்டரி
- 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
- வோடபோன் ஐடியா நிறுவனம் பயனர்களுக்கு அசத்தல் சலுகைகளை மிக குறைந்த விலையில் அறிவித்தது.
- புதிய வோடபோன் ஐடியா சலுகைகள் பயனர்களுக்கு டேட்டா பலன்களை வழங்குகின்றன.
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய சாஷெட்களை அறிவித்து இருக்கிறது. இவை சூப்பர் ஹவர் மற்றும் சூப்பர் டே என்று அழைக்கப்படுகின்றன. இந்த சலுகைகள் பிரீபெயிட் பயனர்கள் தங்களின் தினசரி டேட்டா அளவை கடந்த பிறகும், எவ்வித இடையூறும் இன்றி டேட்டா பயன்படுத்த அனுமதிக்கிறது.
சூப்பர் ஹவர் பேக் விலை ரூ. 24 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பயனர்களுக்கு ஒர மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. சூப்பர் டே சலுகை விலை ரூ. 49 ஆகும். இதில் ஒரு நாள் வேலிடிட்டியில் 6 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
டேட்டா தவிர இரு சலுகைகளிலும், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. சாஷெட் சலுகை என்பதால் இதில், டேட்டா பலன் மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர்கள் அவசர காலத்திற்கு டேட்டா பயன்படுத்த இவைகளை ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இரு சலுகைகளையும் பெறுவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். இந்த சலுகைகளை பயனர்கள் வி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் செயலியில் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும். இரு சலுகைகளும் நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது.
- வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
- இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 839 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 17 விலையில் சோட்டா ஹீரோ பேக் சலுகைகளை அறிவித்த நிலையில், தற்போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் புதிய சலுகை வி செயலியில் இருந்து ரிசார்ஜ் செய்யும் வகையில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் இதனை வலைதளம் மற்றும் இதர செயலிகளில் ரிசார்ஜ் செய்ய முடியாது.
பலன்கள்:
வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் மேலும் சில பலன்களும் வழங்கப்படுகிறது.
அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாத டேட்டாவினை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் பிரீமியம் சந்தா இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2ஜிபி வரையிலான டேட்டா பேக்கப் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த சலுகை வி வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது.
- நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஜூலை மாதம் அறிமுகமாகிறது.
- புதிய நத்திங் போன் 2 முன்பதிவு செய்வோருக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய போன் 2 மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய நத்திங் போன் 2 முன்பதிவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
முன்பதிவு செய்வது எப்படி?
- நத்திங் போன் 2 முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
- விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் செலுத்தி நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- முன்பதிவு செய்தவர்கள், ஜூலை 11-ம் தேதி ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்டை உறுதிப்படுத்தி, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஜூலை 20-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ஸ்மார்ட்போனிற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
- நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தை வாடிக்கையாளர்கள் மனம் மாறினால் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
அறிமுக சலுகை விவரங்கள்:
- நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்வோருக்கு குறிப்பிட்ட வங்கிகள் மூலம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- நத்திங் போன் 2 முன்பதிவு செய்வோர் ரூ. 1,299 மதிப்புள்ள போன் 2 மாடலுக்கான அதிகாரப்பூர்வ பேக் கேஸ்-ஐ வெறும் ரூ. 499-க்கு வாங்கிட முடியும்.
- ரூ. 999 மதிப்புள்ள நத்திங் போன் 2 மாடலுக்கான ஸ்கிரீன் ப்ரோடெக்டரை ரூ. 399 விலையில் வாங்கிட முடியும்.
- ரூ. 8 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் இயர் ஸ்டிக் மாடலை ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் வாங்கிடலாம்.
- ரூ. 2 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் பவர் சாதனத்தை ரூ. 1,499 விலையில் வாங்கிட முடியும்.
வெளியீடு மற்றும் இதர விவரங்கள்:
இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்குவதாக நத்திங் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2 மாடலில் நத்திங் ஒஎஸ் 2.0, 6.7 இன்ச் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- இந்தியாவில் டெக்னோ 20 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு ஜூன் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் தான் டெக்னோ மொபைல் தனது கேமான் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் கேமான் 20, கேமான் 20 ப்ரோ 5ஜி மற்றும் கேமான் 20 பிரீமியர் 5ஜி உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். இவற்றில் கேமான் 20 ப்ரோ 5ஜி, சிறப்பான மொபைல் போட்டோகிராபி வழங்குவதற்கு பெயர் பெற்றுள்ளது.
தற்போதைய குறுகிய கால விலை குறைப்பின் மூலம் டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி முன்பை விட வாங்குவதற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விலை குறைப்பை பயன்படுத்தி தலைசிறந்த கேமரா அனுபவம் வழங்கும் ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும் என்று டெக்னோ மொபைல் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
தள்ளுபடி விவரங்கள்:
ஜூன் 30-ம் தேதி வரை டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களுக்கும் பொருந்தும். விலை குறைப்பின் படி பயனர்கள் டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல்களை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
முன்னதாக டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் வெல்கின் மற்றும் செரினிட்டி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.
டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்
அதிகபட்சம் 16 ஜிபி ரேம்
அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
64MP பிரைமரி கேமரா
32MP செல்ஃபி கேமரா
ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ்
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபிளாஷ் சார்ஜிங்
- ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
- ஆப்பிள் சேல் டேஸ் பெயரில் அமேசான் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் அவ்வப்போது ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போதைய சிறப்பு விற்பனை ஜூன் 11 ஆம் தேதி துவங்கியது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி, வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சலுகை விவரங்கள்:
ஐபோன் 14 (128 ஜிபி) 15 சதவீத தள்ளுபடியின் கீழ் ரூ. 67 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 79 ஆயிரத்து 999 ஆகும். இதன் 256 ஜிபி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. 512 ஜிபி மாடல் விலை 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது 11 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 97 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 76 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 86 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. இந்த வேரியண்டிற்கு 13 சதீவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என பல்வேறு ஐபோன்களை விறப்னை செய்து வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலின் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது.
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 990 என்றும் மாறி இருக்கின்றன.
- ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
- வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.
இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.
இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்
அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.
ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
(இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.
இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- அமேசான் மற்றும் Mi வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று மாறியது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் Mi வலைதளங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 5ஜி மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயித்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது கூடுதலாக கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
அமேசான் மற்றும் Mi வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று மாற்றப்பட்டு உள்ளது. பயனர்கள் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். இதை சேர்க்கும் போது ரெட்மி நோட் 12 5ஜி மாடலின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.
ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, மாத தவணை முறை பரிவர்த்தனைகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி நெட்பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சியோமி மற்றும் ரெட்மி போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.
இதேபோன்று ரெட்மி நோட் 12 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றை முறையே ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் ரூ. 18 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். ரெட்மி நோட் 12 5ஜி மாடல்: ஃபிராஸ்டெட் கிரீன், மேட் பிளாக் மற்றும் மிஸ்டிக் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
- குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450X பேஸ் வேரியண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துவோரின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடிவு செய்து இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் பிரபலமான டாட் சார்ஜர்களை தனது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கி வருகிறது.
தற்போது ஏத்தர் 450X பேஸ் வேரியண்டை 0 முதல் 100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய 14 முதல் 15 மணி நேரங்கள் வரை ஆகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்ய இது நீண்ட நேரம் ஆகும். தற்போது டாட் சார்ஜரை ரூ. 7 ஆயிரத்து 500 எனும் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்குகிறது. டாட் சார்ஜரை பயனர்கள் வீட்டில் உள்ள சார்ஜிங் மையத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
டாட் சார்ஜர் ஒரே இடத்தில் நிரந்தரமாக இன்ஸ்டால் செய்யப்படும் ஒன்றாகும். டாட் சார்ஜர் கொண்டு ஏத்தர் வாடிக்கையாளர்கள் தங்களின் 450X பேஸ் வேரியண்டை 5 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடயும். குறுகிய காலத்திற்கு டாட் சார்ஜர் வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாட் சார்ஜர் கொண்டு வாடிக்கையாளரின் சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். ஒருவரின் டாட் சார்ஜரை மற்றவர்களால் பயன்படுத்தவே முடியாது.
- வி நிறுவனம் தொடர்ச்சியாக தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
- வி நிறுவனத்தின் 5ஜி சேவை வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி நிறுவனத்தின் 5ஜி வெளியீடு தாமதமாகி வருகிறது.
எனினும், வி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய சலுகைகளை அறிவித்தும், அவ்வப்போது சிறப்பான சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளை பயனர்கள் வி செயலி மூலம் ரிசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் இன்றி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
முன்னதாக இதே போன்ற சலுகையை வி நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கி வந்தது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும்.
- கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 84 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
- ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையில் ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள், தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போன் ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி வெர்ஷன் விலை ரூ. 88 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது இதன் பேஸ் 128 ஜிபி வெர்ஷன் ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை சேர்க்கும் பட்சத்தில் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை ரூ. 42 ஆயிரத்து 649 என்று மாறிவிடும்.
2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 சாம்சங் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஃப்ளிப் போன் ஆகும். பிரீமியம் மடிக்கக்கூடிய சாதனமாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலுக்கு அப்போது வேறு எந்த ஸ்மார்ட்போனும் மாற்றாக விற்பனைக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒப்போ, விவோ போன்ற பிராண்டுகளின் மாடல்கள் போட்டியாக உள்ளன.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் 2X AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், 1.9 இன்ச் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், அட்ரினோ 660 GPU, 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10MP செல்ஃபி கேமரா, 3300 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.
- கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 மற்றும் 7 ப்ரோ மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை இந்த வாரம் துவங்க இருக்கிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இதில் பயனர்கள் வாங்கும் பொருட்களின் மீது அதிக சேமிப்புகளை பெற முடியும். இந்த நிலையில், சிறப்பு விற்பனை துவங்கும் முன்பே பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்று ப்ளிப்கார்ட் தளத்தில் மாறி இருக்கிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போதும், மாத தவணை முறையை பயன்படுத்தும் போது அதிகபட்சம் பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 28 ஆயிரத்து 250 வரையிலான தள்ளுபடி பெற முடியும். மே 4 ஆம் தேதி துவங்கும் சிறப்பு விற்பனையின் போது பிக்சல் 7 ப்ரோ மாடல் ரூ. 65 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதில் எக்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகளும் அடங்கும். பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.
பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 69 ஆயிரத்து 999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருப்பதை அடுத்து பயனர்கள் இதனை ரூ. 44 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இதில் தள்ளுபடி, வங்கி சலுகைகள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகளும் அடங்கும். பிக்சல் 7 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்