என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சலுகை"
- வி நிறுவனத்தின் புதிய சலுகைகளில் ஒடிடி பலன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
- புதிய வி சலுகைகள் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.
வி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் ஒடிடி சந்தா பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 368 மற்றும் ரூ. 369 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சிறு மாற்றங்கள் தவிர, இரு சலுகைகளிலும் ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன.
அதன்படி இரண்டு சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா, 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. வி ரூ. 368 சலுகையில் 30 நாட்களுக்கான சன் நெக்ஸ்ட் சந்தா, ரூ. 369 சலுகையில் 30 நாட்களுக்கான சோனிலிவ் சந்தா வழங்கப்படுகிறது.
இரு சலுகைகளின் இதர பலன் விவரங்கள்:
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி நேர எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி அன்லிமிடெட் இணைய வசதி.
வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் - திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வி மூவிஸ் மற்றும் டிவி சேவையின் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2 ஜிபி வரை பேக்கப் டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இதனை பெற வி ஆப் அல்லது 121249 என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.
- ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
- ஐகூ பிராண்டின் ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது ஐகூ. 2020 வாக்கில் இந்தியாவில் கால்பதித்த ஐகூ பிராண்டு பல்வேறு ஸ்மமார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
ஐகூ இதுவரை அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயனர் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஐகூ நிறுவனத்தின் சமீபத்திய ஐகூ 11 ஸ்மார்ட்போன் தலைசிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிநவீன ரேம் மற்றும் மெமரி உள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ. 59 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனினும், ஆண்டு விழா சிறப்பு விற்பனையை ஒட்டி ஐகூ 11 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 10 ஆயிரம் வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐகூ 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஐகூ 9 விலை ரூ. 42 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதனை ரூ. 30 ஆயிரத்து 990 விலையிலேயே வாங்கிட முடியும். இது ஐகூ 9 ஸ்மார்ட்போனின் பழைய விலையை விட ரூ. 12 ஆயிரம் வரை குறைவு ஆகும். ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை முன்னதாக ரூ. 64 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஐகூ நியோ 6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐகூ நியோ 6 5ஜி மாடல் விலை தற்போது ரூ. 24 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.
ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஐகூ ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் காலிங் சேவையை வழங்கும் புதிய சலுகையை அறிவித்தது.
- புதிய பிஎஸ்என்எல் சலுகை மொத்தத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகள் வெவ்வேறு பலன்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
இந்த சலுகை பயனர்களுக்கு வாய்ஸ் கால் சேவையை மட்டும் 90 நாட்களுக்கு வழங்குகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகை விலை ரூ. 439 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் மூலம் பயனர்கள் மாதத்திற்கு ரூ. 146 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம். இதன் மூலம் தினமும் ரூ. 4.80 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை நீண்ட கால வேலிடிட்டி வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,999 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. இதில் தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் பலன்கள், 600 ஜிபி அதிவேக டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும்.
- ப்ளிப்கார்ட் தளத்தில் சம்மர் சேவர் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
- சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் புதிதாக சம்மர் சேவர் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது. இன்று (ஏப்ரல் 13) துவங்கிய சிறப்பு விற்பனை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 6a, ஐபோன் 13, நத்திங் போன் 1, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் உள்பட பல்வேறு மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க இருப்போர் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையை பயன்படுத்தி அதிக சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதன்படி ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. பிக்சல் 6a மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 30 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 3 விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் விலை ரூ. 27 ஆயிரத்து 499 என்றும் நத்திங் போன் (1) விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகை மற்றும் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.
- வி நிறுவனம் தனது இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது.
- வி மாற்றியமைத்து இருக்கும் இரு சலுகைகளும் தற்போது அதிக பலன்களை வழங்குகின்றன.
வி நிறுவனம் தனது ரூ. 129 மற்றும் ரூ. 298 விலையில் வழங்கி வரும் இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. டேட்டா மற்றும் காலிங் பலன்களுடன் வி சமீபத்தில் அறிவித்த ரூ. 181 சலுகையை தொடர்ந்து, இரு சலுகை பலன்கள் மாற்றப்பட்டுள்ளது.
ரூ. 129 விலையில் கிடைக்கும் வி சலுகைகள் தற்போது அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகின்றன. மாற்றப்பட்ட பலன்களை பொருத்தவரை ரூ. 129 சலுகை தற்போது அன்லிமிடெட் காலிங், 200 எம்பி டேட்டா உள்ளிட்டவை 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
வி ரூ. 298 சலுகை தற்போது 50 ஜிபி 4ஜி டேட்டா, வி திரைப்படங்கள் மற்றும் டிவி, பிரீமியம் திரைப்படங்கள், ஒரிஜினல்ஸ், செய்திகள் மற்றும் நேரலை டிவி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
சமீபத்தில் வி நிறுவனம் ரூ. 181 பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகை 30 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனினும், இதில் தினமும் 1 ஜிபி டேட்டா அடிப்படையில் வழங்கப்படவில்லை. இவை ஏற்கனவே உள்ள பிரீபெயிட் சலுகையுடன் சேர்த்து பயன்படுத்த முடியும். இது தனி சலுகை என்பதை விட பூஸ்டர் பேக் ஆகும்.
- வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை பயனர்களுக்கு தினசரி டேட்டா பலன்களை வழங்குகிறது.
- 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய வி சலுகை சற்றே குறைந்த விலையில் கிடைக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இடையே வி நிறுவனம் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து கொண்டே வருகிறது.
இதனிடையே போட்டியை எதிர்கொள்ளும் வகையில், வி நிறுவனம் தற்போது புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 181 விலையில் கிடைக்கும் புதிய பிரீபெயிட் சலுகை தினசரி பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகையுடன் கூடுதலாக இதனை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது அதிக டேட்டா பெற முடியும்.
வி நிறுவனத்தின் புதிய ரூ. 181 பிரீபெயிட் சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் மறுநாள் தான் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையில் அன்றாட டேட்டாவை விரைந்து தீர்ப்போருக்காக புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரூ. 181 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முன்னதாக வி நிறுவனம் டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவற்றின் விலை முறையே ரூ. 289 மற்றும் ரூ. 429 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
- பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 197 விலையில் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது.
- புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிகபட்சம் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை தேர்வு செய்ய விரும்புவோருக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பிஎஸ்என்எல் புதிய பிரீபெயிட் சலுகையின் விலை ரூ. 197 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இதில் 18 நாட்களுக்கு இலவச பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது டெலிகாம் துறையில் சலுகை விலை மற்றும் பலன் விவரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகையின் பழைய பலன்கள் மாற்றப்பட்டுவிட்டது.
அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 197 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா (தினமும் 2 ஜிபி), 100 எஸ்எம்எஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பலன்களை பொருத்தவரை இந்த சலுகை தினசரி கட்டணம் ரூ. 2.80 என கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இலவச பலன்களின் வேலிடிட்டி 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதன் பின் இவற்றை பயன்படுத்த கட்டணங்கள் வசூலிக்கப்படும். புதிய பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை பெரும்பாலான டெலிகாம் வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சில வட்டாரங்களில் இது வழங்கப்படாது என்றே தெரிகிறது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- புதிய பேஸ் சலுகைகள் பயனர்களுக்கு ட்ரூ5ஜி டேட்டா மற்றும் இலவசமாக கூடுதல் டேட்டா வழங்குகின்றன.
2023 ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளை பயனர்கள் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக கண்டுகளிக்க முடியும். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ மூன்று பிரீபெயிட் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய ஜியோ பிரீபெயிட் சலுகைகள் அதிகபட்சமாக தினமும் 3 ஜிபி டேட்டா, அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி, கூடுதலாக இலவச டேட்டா வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 999 விலைகளில் மொத்தம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
இவற்றின் வேலிடிட்டி முறையே 14 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகைகளில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகளுடன் கூடுதல் டேட்டா வழங்கும் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 219 சலுகையுடன் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 25 வவுச்சர், ரூ. 399 சலுகையுடன் 6 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கும் ரூ. 61 வவுச்சர், ரூ. 999 சலுகையுடன் 40 ஜிபி வரையிலான டேட்டா வழங்கும் ரூ. 241 வவுச்சர் வழங்கப்படுகிறது.
இந்த டேட்டா போதாது என்பவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளை கிரிக்கெட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. இவற்றை நேரலையில் போட்டிகளை ஸ்டிரீம் செய்ய விரும்பும் பயனர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தலாம். கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 222, ரூ. 444 மற்றும் ரூ. 667 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இதில் ரூ. 222 சலுகையின் வேலிடிட்டி பயனர்கள் பயன்படுத்தும் பேஸ் சலுகை முடியும் வரை வழங்கப்படுகிறது. ரூ. 444 மற்றும் ரூ. 667 விலை சலுகைகள் முறையே 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. டேட்டாவை பொருத்தவரை ரூ. 222 சலுகை 50 ஜிபி, ரூ. 444 மற்றும் ரூ. 667 சலுகைகள் முறையே 100 ஜிபி மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்குகின்றன.
- பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு குறைந்த விலை சலுகையை வழங்கு வருகிறது.
- குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை தினமும் 1 ஜிபி டேட்டா, வாய்ஸ் காலிங் போன்ற பலன்களை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 87 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் பிஎஸ்என்எல் உள்பட அனைத்து நிறுவனங்களும் தங்களின் சலுகை விலையை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் அனைத்து வட்டாரங்களிலும் தனது எண்ட்ரி லெவல் சலுகை விலையை ரூ. 155 ஆக உயர்த்திவிட்டது.
அந்த வகையில் புதிய ரூ. 87 சலுகை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கால வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை வாய்ஸ் கால் மற்றும் டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகை வழங்கப்பட்டு வருவதால், பலரும் இதனை ஏற்கனவே பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் தான்.
பிஎஸ்என்எல் ரூ. 87 பலன்கள்:
பிஎஸ்என்எல் ரூ. 87 சலுகை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஹார்டி மொபைல் கேம்ஸ்-இன் கேமிங் பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் மட்டும் இணைக்கப்படவில்லை. அந்த வகையில், இந்த சலுகை மொத்தத்தில் பயனர்களுக்கு 14 ஜிபி டேட்டா வழங்குகிறது.
தினமும் 1 ஜிபி டேட்டா போதாத என்ற வகையில், பயனர்கள் ரூ. 97 விலை சலுகையை தேர்வு செய்யலாம். இந்த சலுகையிலும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் பலன்கள் வழங்கப்படவில்லை. எனினும், இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இது தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்கள் மொத்தத்தில் 30 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
- ஏர்டெல் நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகை பலன்களை ஏர்டெல் அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.
இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெறுவது எப்படி?
ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.
பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- புதிய ஜியோ போஸ்ட்பெயிட் சலுகைகளை பயனர்கள் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தி பார்க்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை- ஜியோபிளஸ் பெயரில் அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய பலன்களை வழங்குகிறது. இத்துடன் புதிய சேவையில் இணையும் பட்சத்தில் ஒருமாத காலத்திற்கு சலுகைகளை இலவசமாக பயன்படுத்தி பார்க்கலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ், அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டாவை வழங்குகின்றன. இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா வழங்குகின்றன. ஒற்றை கட்டணத்தில் டேட்டா ஷேரிங், பிரமீயம் தரவுகளை வழங்கும் செயலிக்கான சந்தா உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.
ஒருவேளை இந்த பலன்கள் பிடிக்காத பட்சத்தில் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும், போஸ்ட்பெயிட் இணைப்பை துண்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது பயனர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாது என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.
ஜியோபிளஸ் போஸ்ட்பெயிட் சலுகை பலன்கள்:
ரூ. 399 மாத கட்டணத்தில் துவங்குகிறது
கூடுதலாக ரூ. 99 கட்டணத்தில் மூன்று இணைப்புகளை பெறும் வசதி
4 பேர் அடங்கிய குடும்பத்திற்கு மாதம் ரூ. 696 கட்டணம்
ஒரு சிம் இணைப்பிற்கு சராசரியாக மாத கட்டணம் ரூ. 174
டேட்டாவை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி
தினசரி டேட்டா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை
ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டா
நீங்கள் விரும்பும் மொபைல் நம்பர்
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா சந்தா
வெளிநாட்டு பயணங்களின் போது விமானத்தினுள் கனெக்டிவிட்டி
சர்வதேச ரோமிங்கின் போது வைபை காலிங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 1
129 நாடுகளுக்கு ஒரு சர்வதேச ரோமிங் சலுகை
ஜியோஃபைபர் பயனர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், மற்ற நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்கள், ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பாதுகாப்பு முன்பணம் இல்லை.
ஒரே க்ளிக்-இல் கால்-பேக் சேவை
டவுன்டைம் இன்றி ஜியோ நம்பருக்கு மாறும் வசதி
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை எல்லோ நிறத்தில் அறிமுகம் செய்தது.
- புதிய ஐபோன் 14, 14 பிளஸ் மாடல்களின் எல்லோ நிற வேரியண்ட் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14, ஐபோன் 14 எல்லோ நிற வேரியண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய எல்லோ நிற வேரியண்ட் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மிட்நைட், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட், புளூ மற்றும் பர்பில் நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய எல்லோ நிற ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் முன்பதிவு மார்ச் 10 ஆம் தேதி துவங்கிய நிலையில், இதன் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஐபோன் 14 (128 ஜிபி) மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றும் 256 ஜபி ஐபோன் 14 விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 14 (512 ஜிபி) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் 128 ஜிபி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 256 ஜிபி ஐபோன் 14 பிளஸ் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே மாடல்களின் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் முறையே ரூ. 82 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 91 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் இரு மாடல்களின் 512 ஜிபி விலை குறிப்பிடப்படவில்லை. எல்லோ நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கலின் விலை அதன் மற்ற நிற வேரியண்ட்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 57 ஆயிரத்து 800 வரை தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் இரு மாடல்களுக்கும் அதிகபட்சம் 8 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 20 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரல் கிரெடிட் கார்டு மூலம் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்