என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 188040
நீங்கள் தேடியது "கேடிஎம்"
கே.டி.எம். நிறுவனம் 2017 மற்றும் 2018 டியூக் 390 மோட்டார்சைக்கிள்களை திரும்ப பெறுகிறது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம். #KTM #Duke
கே.டி.எம். நிறுவனத்தின் 2017 மற்றும் 2018 டியூக் மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன. கே.டி.எம். நிறுவனம் தனது டியூக் 390 வாடிக்கையாளர்களிடம் மோட்டார்சைக்கிளை எடுத்து வர கேட்டு கொண்டுள்ளது. திரும்ப பெறப்படும் மோட்டார்சைக்கிள்களில் கே.டி.எம். நிறுவனம் மோட்டார்சைக்கிளின் சில பாகங்களை மாற்றிக் கொடுக்க இருக்கிறது.
மான்சூன் கிட் ஃபிட்மென்ட்-க்காக திரும்ப பெறப்படும் டியூக் 390 மாடலில் புதிய இ.சி.யு. பிராகெட் மற்றும் பில்லியன் சீட் டேம்பிங் பிரஷ்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வழக்கமான ஹெட்லேம்ப் வைப்ரேஷன் பிரச்சனையையும் சரி செய்வதாக தெரிவித்துள்ளது.
இத்துடன் கே.டி.எம். தனது மோட்டார்சைக்கிள்களின் மென்பொருளை தேவைப்பட்டால் ஃபிளாஷ் செய்வதாக தெரிவித்துள்ளது. ஹெட்லேம்ப்கள் அடிக்கடி ஆஃப் ஆவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக மென்பொருள் ஃபிளாஷ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அனைத்து புதிய அப்டேட்களையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிய இ.சி.யு. பிராகெட் ப்ரோடெக்டிவ் கவருடன் வழங்கப்படுகிறது. பின்புற சீட் மற்றும் டெயில் லைட் இடையே இருக்கும் இடைவெளியை அதிகரிக்க கே.டி.எம். டேம்பிங் புஷ்களை மாற்றி வடிவமைக்கிறது. முன்னதாக இருவர் பயணிக்கும் போது டெயில் லைட்கள் கிராக் ஆவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
2017-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட டியூக் 390 வெளியானதில் இருந்து அதிகளவு குற்றச்சாட்டுகளை பெற்று வருகிறது. டி.எஃப்.டி. டிஸ்ப்ளே அடிக்கடி ரீஸ்டார்ட் ஆவது, ஹெட்லைட்கள் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் இருப்பது, எல்இடி லைட்கள் தானாக ஆஃப் ஆவது, ஃபியூயல் லீக்கேஜ் மற்றும் அடிக்கடி பேட்டரி தீர்ந்து போவது போன்ற குற்றச்சாட்டுகளை வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கே.டி.எம். டியூக் 390 மாடலில் 373சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 43.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 37 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. #KTM #Duke
கேடிஎம் நிறுவனத்தின் டியூக் ADV 390 சோதனை செய்யப்படுகிறது. பின்புற இருக்கை கொண்ட புதிய கேடிஎம் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கேடிஎம் டியூக் 390 சார்ந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படுகிறது. ஆஸ்த்ரிய மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை பின்புற இருக்கையுடன் சோதனை செய்து வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற மாடல்களில் இவ்வாறு வழங்கப்படுவதில்லை.
டியூக் 390 சார்ந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளை பஜாஜ் நிறுவனம் தனது சக்கான் தயாரிப்பு ஆலையில் உருவாக்க இருக்கிறது. மேலும் இதே ஆலையில் இந்த மோட்டார்சைக்கிளின் சர்வதேச தயாரிப்பு பணிகளும் நடைபெற இருக்கிறது.
இத்துடன் உலக நாடுகளில் கேடிஎம் அட்வென்ச்சர் 390 மாடல் முதற்கட்டமாக இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டியூக் 390 மாடலின் பாகங்களை பயன்படுத்தும் புதிய அட்வென்ச்சர் மாடலில் முக்கிய அம்சங்கள் மாற்றப்பட்டு, டியூக் 390-ஐ விட வித்தியசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கேடிஎம் டியூக் 390 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 373 சிசி, 4-ஸ்டிரோக் லிக்விட் கூல்டு இன்ஜின் புதிய அட்வென்ச்சர் மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 44 பிஹெச்பி பவர், 37 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. புதிய மாடலின் கியரிங் மாற்றப்படும் என கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக டியூக் 390 ஃபிரேம் புதிய மாடலிலும் சேர்க்கப்பட்டு, ஆஃப்ரோடிங் செய்ய ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலின் பின்புறம் 19 இன்ச் சக்கரம் வழங்கப்படுகிறது. ஸ்போக் கொண்ட சக்கரங்களுடன், டியூப்லெஸ் டையர்களும் வழங்கப்படுகிறது.
இத்துடன் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க்கள், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. ட்வின் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுகிறது. இத்தகைய அம்சங்களுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம்: நன்றி Morebikes.co.uk
கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 200 மோட்டார்சைக்கிள் புதிதாய் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் கருப்பு நிறம் கொண்ட ஆர்சி 200 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
முன்னதாக வெள்ளை நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த சூப்பர்ஸ்போர்ட் ஆர்சி 200 இனி கருப்பு நிறத்திலும் கிடைக்கும். இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிளின் கருப்பு நிறம் போன்றே காட்சியளிக்கிறது.
எனினும் இதன் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற மட்டும் வேறுபடுகிறது. கேடிஎம் ஆர்சி 200 பிளாக் நிற எடிஷனின் டெயில் பகுதியில் வெள்ளை நிற கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. புதிய நிறத்தை தவிர கேடிஎம் ஆர்சி 200 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் கேடிஎம் ஆர்சி 200 வழக்கமான 199.5சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 25 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. செயல்திறன் மிக்க இன்ஜினுடன் பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது.
கேடிஎம் ஆர்சி 200 மாடலின் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் இந்தியா மாடலில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படவில்லை.
இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார், அன்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2017 மாடலில் அகலமான ரியர் வியூ கண்ணாடிகள், மேம்படுத்தப்பட்ட குஷன் இருக்கை கொண்டுள்ளது. கேடிஎம் ஆர்சி 200 கருப்பு நிற எடிஷன் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களில் முன்பதிவு செய்ய முடியும்.
இந்தியாவில் கேடிஎம் ஆர்சி 200 கருப்பு நிற எடிஷன் விலை ரூ.1.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்த்ரியாவை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம்-இன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 390 அட்வென்ச்சர் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் அதிகாகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் கேடிஎம் நிறுவனத்தின் தலைசிறந்த மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்றும் இது டியூக் மற்றும் ஆர்சி மாடல்களுடன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பிஎம்டபுள்யூ G 310 GS மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேடிஎம் பிரான்டு தேர்வு செய்யப்பட்டோருக்கு முக்கியமானதாக இருக்கிறது. 390 அட்வென்ச்சர் மூலம், இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியம் டூயல்-ஸ்போர்ட் பிரிவில் கால்பதிக்க இருக்கிறது. இது இந்திய சாலைகளுக்கு ஏற்ற பிரிவாகும். என பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் அமித் நந்தி தெரிவித்திருந்தார்.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் டியூக் 390 பைக் கொண்டிருக்கும் சில அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடலில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், ரைடு-பை-வையர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 373 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே இன்ஜின் கேடிஎம் 390 டியூக் மற்றும் ஆர்சி 390 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 43 பிஹெச்பி பவர், 37 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பெரிய ஃபியூயல் டேன்க், அகலமான மற்றும் சவுகரியமான சீட்கள் வழங்கப்படலாம்.
கேடிஎம் இந்தோனேஷியா தனது புதிய ஆர்சி 250 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இந்தோனேஷியா:
கேடிஎம் இந்தோனேஷியா தனது புதிய ஆர்சி 250 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தோனேஷியாவில் 2018 ஜகர்டா விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் ஆர்சி 250 எஸ்இ, ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் பெரும்பாலான அம்சங்களில் ஸ்டான்டர்டு மாடலில் இருப்பதை போன்று வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் வழக்கமான மாடலை போன்று இல்லாமல், எக்சாஸ்ட் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய மஃப்ளர் மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. இந்தியாவில் இன்னும் ஆர்சி 250 மோட்டார்சைக்கிள் இதுவரை இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.
கேடிஎம் 250 மாடலில் வழங்கப்பட்ட இன்ஜின் ஆர்சி 250 மாடலிலும் வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் பஜாஜ் கேடிஎம் நிறுவனத்தின் சக்கன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. கேடிஎம் 250 மற்றும் ஆர்சி 250 மாடல்கள் ஜப்பான் நாட்டில் 2015-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
கேடிஎம் ஆர்சி 250 எஸ்இ மாடலின் பக்கவாட்டில் எக்சாஸ்ட் மவுன்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதேபோன்ற அம்சம் 2017-இல் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் ஆர்சி 390 மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது. பக்கவாட்டு எக்சாஸ்ட் மட்டுமின்றி புதிய மாடலின் கிராஃபிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கேடிஎம் ஆர்சி 250 ஸ்பெஷல் எடிஷன் வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் இதன் விலை இந்தோனேஷிய ருப்யாவில் 50.9 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.2.4 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X