search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம்"

    • அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.
    • கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பா.ம.க 34ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட ஊராட்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும், கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதுஎன்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப ட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், முன்னாள் மாவட்டசெயலா ளர் ரவிச்சந்திரன்,மாவட்ட தலைவர் திருஞா னம்பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் கோதை கேசவன், மாவட்ட துணை செயலாளர் அரங்க நாகப்பன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் வினோத், உழவர் பேரி யக்கம் மாவட்ட செயலாளர் கருணாகரன் தேவர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணைத் தலைவர் பக்கிரி சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இதுகுறித்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
    • சாலை மறியல் போராட்டத்திற்கு வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களது ஏழ்மை நிலை கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறி வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கும்ப கோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மொட்டை கோபுரம் வாசல் பகுதியில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து பாதிப்பு இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உங்கள் கோரிக்கை குறித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுங்கள் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆனால் இழப்பீடு தொகை குறைவாக வழங்குவதாக கூறி விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இழப்பீடு தொகை குறைவாக வழங்குவதாக கூறி விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

    • உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    சுவாமிமலை:

    இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் உலக மிதிவண்டி தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.

    இந்த பேரணியை அன்பழகன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடக்கி வைத்தார். கும்பகோணம் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தார். விழாவிற்கு வி.ஏ. ரோசரியோ செஞ்சிலுவை சங்க துணை தலைவர் தலைமை தாங்கினார்.

    கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் விஜயபாலன், ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சிவக்குமார், பெஞ்சமின் கலந்து கொண்டனர். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐம் விசாரிக்காது, மற்ற வழக்குகளை விசாரிக்கும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. #IdolTheft #CBI
    சென்னை:

    தமிழக கோவில்களில் காணாமல் போன சிலைகள் தொடர்பான வழக்குகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்க வேல் விசாரித்து வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவரது விசாரணையில் திருப்தி இல்லை என சென்னை ஐகோர்ட்டில் கூறிய தமிழக அரசு அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தது.

    இதற்கான அரசாணையும் இன்று பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்காது என தமிழக அரசு இன்று ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. மற்ற சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து கையில் தங்கி, பின்னர் அது நெஞ்சு பகுதிக்கு நகர்ந்துள்ளதால் கர்ப்பிணி பெண் கடும் அவதியடைந்துள்ளார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து கையில் தங்கி, பின்னர் அது நெஞ்சு பகுதிக்கு நகர்ந்துள்ளதால் கர்ப்பிணி பெண் கடும் அவதியடைந்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி சசிகலா (வயது 23). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சசிகலா சிகிச்சை பெற்றார். அவருக்கு செவிலியர்கள் ஊசி போட்டனர். அப்போது ஊசி உடைந்து சசிகலா கையில் தங்கி விட்டது. இதனை கவனிக்காமல் வீடு சென்ற சசிகலாவுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உடைந்த ஊசி கையில் இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    சசிகலா

    பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது டாக்டர்கள் கையில் இருந்த ஊசியை அகற்றி விட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து வலி குறையாததால் அது ஆபரேசன் செய்ததால் ஏற்பட்ட வலி என்று சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

    தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள சசிகலாவுக்கு நெஞ்சு பகுதியில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் தனது வீட்டுக்கு அருகில் கிளினிக் நடத்தும் ஒரு டாக்டரிடம் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அப்போது முறிந்து போன ஊசி கையில் இருந்து நகர்ந்து நெஞ்சு பகுதிக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் ஊசியை அகற்றவில்லை. கையில் இருந்த ஊசி தற்போது நெஞ்சு பகுதிக்கு வந்துவிட்டது. தஞ்சை மருத்துவமனையில் ஆபரேசன் செய்ததாக கூறி என்னை ஏமாற்றிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    கும்பகோணம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுகருப்பூர் கீழபுதுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் அபிநயா (வயது 16) . இவர் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அரசு பொது தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    கடந்த 23-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இதில் மாணவி அபிநயா 371 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனமுடைந்த அவர் கடந்த 31-ந் தேதி இரவு வீட்டில் இருந்த எலிமருந்தை சாப்பிட்டுள்ளார்.

    மயங்கி விழுந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிநயா நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×