search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்"

    • கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான்வலசு என்ற பகுதியில் கனகராஜ் ( வயது 65) என்பவர் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார்.நேற்று முன்தினம் 5 ந்தேதி இரவு வழக்கம்போல் ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார். மீண்டும் காலையில் சென்று பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்தன. 2 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன, அதன் பின் விசாரித்த போது நாய்கள் வாயில் ரத்த கரையுடன் சுற்றிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய் கடித்துள்ளது. அதேபோல் பக்கத்து தோட்டத்திலும் நாய்கள் ஆடுகளை கடித்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்துபாளையம், கச்சேரி வலசு, சேனாபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாய்கடித்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன, ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.
    • கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார்

    கன்னியாகுமரி :

    திங்கள்நகர் அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (வயது36), கட்டிட தொழி லாளி. இவர் மண்டைக்காடு அருகே காளிவிளையில் வசிக்கும் தங்கையை பார்த்து வர சென்றார். அப்போது கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இருவருக்கு மிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.இதில் கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார் செய்தார். போலீசார் கிறிஸ்டோபர் ஜாண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தான் செல்லமாக வளர்த்த நாய் நாக்கால் நக்கியதின் விளைவாக, நாயின் எச்சில் மூலம் நோய்த்தொற்று உடலில் பரவி கை, கால் உள்ளிட்ட உடல் பகுதிகளை இழந்துள்ளார்.

    செல்லமாக வீட்டில் பிராணிகளை வளர்க்க நினைப்போரின் முதல் தேர்வே நாய் தான். மிகுந்த பராமரிப்புடன் வளர்க்கப்பட்டாலும் பிராணிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த க்ரெக் மண்டவுபெல் என்ற 48 வயது நபர் வளர்த்த நாயே அவருக்கு வினையாகிப்போயுள்ளது.

    தன்னுடைய நாய் நாக்கால் தன்னுடைய உடல் பாகங்களை நக்கும் போது, அதனை கண்டுகொள்ளாமல் இருந்த க்ரெக் கடும் காய்ச்சல், வாந்தி போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ளார். தொடக்கத்தில் சாதரணமாக எடுத்துக்கொண்டதன் விளைவாக உடல் முழுவதும் ஆங்காங்கே புண் ஏற்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற பின்னர்தான், அவரது உடலில் பதோகென் (pathogen) என்ற பாக்டீரியா கலந்துள்ளது தெரியவந்துள்ளது. நாய் அவரை நக்கும் போதோ அல்லது கடிக்கும் போதோ எச்சில் வழியாக இந்த பாக்டீரியா அவரது ரத்தத்தில் கலந்துள்ளது.

    இதன் விளைவாக, அவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை அழுகிய நிலைக்கு செல்லவே உடனே அந்த உறுப்புகள் அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. முகத்தில் இருக்கும் மூக்கும் அழுகிப்போக தற்போது அது நீக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்ட க்ரெக்கை இந்த பாக்டீரியா வேகமாக தாக்கியுள்ளது. பாக்டீரியாவை செயலிழக்க வைக்கும் நோய் தடுப்பு சக்தி அவருக்கு இல்லாமல் போனது முக்கியமான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
    வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் முகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவை என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக நாய் திகழ்கிறது. இது மனிதர்களின் நண்பனாக மாறியுள்ளது. வீட்டில் பாதுகாப்பிற்காகவும், தனிமையை குறைப்பதற்காவும் பலர் நாய்களை வளர்க்கின்றனர். நாய் மிகவும் நன்றியுள்ள மிருகமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் நாய்களுக்கு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஸ்பிரிஞ்சர் என்ற தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. நாய்கள் தங்கள் எஜமான்களின் முகபாவத்திற்கு ஏற்ப தலையை திருப்புகின்றன. கோபம், பயம் மற்றும் சந்தோஷமாக இருக்கும் போது தலையை இடது பக்கமாக திருப்புகின்றன. ஆச்சரியமாக முகத்தை வைத்திருக்க்ம் போது வலது பக்கமாக தலையை திருப்புகின்றன.

    ஒருவேளை அவர்கள் சோகமாக இருந்தால் நாய்களின் இதயத்துடிப்பு மிகவும் அதிகரிக்கிறது. இந்த ஆய்வு மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே உள்ள பாசத்தை எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழ்வதன் மூலம் நாய்கள் புதிய பண்புகளை வளர்த்துக்கொண்டுள்ளன. அவற்றின் மூலம் மனிதர்களுடன் பேசிப்பழகுகின்றன.

    நாய்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவற்றின் மூளை செயல்பாடு குறித்து அறிய முடிந்தது. மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் நாய்களின் மூளை தான் பெரும் பங்கு வகிக்கிறது.

    நான் முக்கியமா? இல்லை நாய்கள் முக்கியமா? என்ற கேள்விக்கு நாய்கள் தான் முக்கியம் என மனைவி பதிலளித்ததால் அதிர்ச்சியில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
    லண்டன்:

    பிரிட்டனின் சப்போல்க் பகுதியில் வசிப்பவர் மைக் ஹாஸ்லாம். 53 வயதான இவரது மனைவி லிஸ் (49) நாய்கள் பிரியர். 1991-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு 21 வயதில் தற்போது மகன் உள்ளார். இந்நிலையில், நாய்களின் காரணமாக மைக் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    லிஸியின் தந்தை விலங்குகளுக்கான உணவு விற்கும் தொழில் செய்து வந்ததன் காரணமாக சிறுவயது முதலே லிஸ் விலங்குகள் பிரியராக இருந்துள்ளார். சமீபத்தில், 30-க்கும் மேற்பட்ட நாய்களை லிஸ் கண்டெடுத்து வளர்த்து வந்துள்ளார். எந்த நேரமும் நாயுடனே அவர் நேரத்தை செலவிட்டுள்ளார்.

    பொறுத்து பொறுத்து பார்த்து ஒருநாள் பொங்கி எழுந்த மைக், “நான் முக்கியமா, இல்லை நாய்கள் முக்கியமா?” என கோபத்துடன் கேட்க, நாய்கள்தான் முக்கியம் என லிஸ் கூலாக பதில் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மைக் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக கூறியுள்ளார்.

    வீட்டை விட்டு வெளியேறினால் தன்னை மனைவி தடுத்துவிடுவார் என நினைத்த மைக்-க்கு அடுத்த அதிர்ச்சியாக, “உங்கள் உடமைகளை பேக் செய்யவா?” என லிஸ் கேட்க புலம்பிய படியே வீட்டை விட்டு அவர் வெளியேறினார். “என்னைப்பற்றி மைக்-க்கு நன்றாக தெரியும். ஆனாலும், அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. விதவையாக வாழ விரும்பவில்லை. அதனால், என்னை எனது நாய்களிடம் நான் ஒப்படைத்துவிட்டேன்” என லிஸ் கூறியுள்ளார்.
    ×