என் மலர்
நீங்கள் தேடியது "அனுமதி"
- தேர்தல் வழக்கு தொடர எதிர்தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
- சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக பிரியதர்சினி அய்யப்பன் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் ேகார்ட்டு, ஐேகார்ட்டு வழங்கிய உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் வழக்கை முடித்து வைத்தது.
இந்தநிலையில் தேவி மாங்குடி பஞ்சாயத்து தலை வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று பிரியதர்சினி அய்யப்பன் தரப்பில் தாக்கல் செய்திருந்த புதிய மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அரவிந்த் குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்களின் வேளாண்மை நோக்கம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்கள் சான்று/மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
- நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் :
அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும். செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி, விரைவாக செயல்படுத்த வேண்டும். மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவுக்கு பின் அவர்களது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் இன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம் நாகர்கோவிலில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி கிராம கோவிலில் பணியாற்றும் பூசாரிகள் ஏராளமானோர் இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த கூடினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கிடையாது எனவும் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனால் பூசாரிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும் மாநகர அமைப்பாளர் சரவணன், மோகன், ஷர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விசுவ இந்து பரிசத் நிர்வாகிகள் மற்றும் கோவில் பூசாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.
கன்னியாகுமரி :
குழித்துறை அருகே நல்லூர் அயனிக்காவிளை பகுதியில் சிலர் அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பாறைகளை உடைத்த கும்பல் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 1351 நீர் நிலைகளில் மண்பாண்டத்திற்காக மண் எடுக்க அனுமதி
- கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1351 கண்மாய் மற்றும் குளங்களில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர் கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம். வண்டல் மண் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (கனிமம் மற்றும் சுரங்கம் பிரிவிற்கு ) அனுப்பி அனுமதி பெற்றுகொள்ளலாம்.நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர் ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் , மண்பாண்டம் செய்ய 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.வண்டல் மண் எடுக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குளத்தின் கரையின் உயரத்தின் இரண்டு மடங்கு தொலைவில் சம்மந்தப்பட்ட பொறியாளர் களால் நிர்ணயி க்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும். ஓரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது. மேலும் குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக்கூடாது. குளத்தின் கரையின் குறுக்கே குறுக்கு பாதைகள் ஏற்படு த்தக்கூடாது. வண்டல் மண்ணை எக்காரணம் கொண்டு சேமித்து வைக்க அனுமதி இல்லை. வண்டல் மண் எடுக்கும் போது கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பா டுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்த க்கூடாது. டிரக்டரில் மட்டுமே வண்டல் மண் எடுத்து செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்து ள்ளார்.
- விவசாயம், மண்பாண்ட தொழில்களுக்கு கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுக்க தகுதி வாய்ந்த கண்மாய்களாக தேர்வு செய்யப்பட்ட விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வெளியீடு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாடு பணிகளுக்கு அரசு அனுமதித்த வண்டல் மண், களிமண்ணை சிறப்பு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக எடுத்துச் செல்ல விவசாய பணி செய்யும் விவசாயிகள் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய வற்றுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்தும், மண்பாண்ட தொழில் செய்பவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினருக்குரிய சான்றிதழை இணைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநரிடம் மனு செய்து தேவையான வண்டல் மண், களிமண்ணை கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 222 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேற்கண்ட பயன்பாட்டிற்காக அளிக்கப்படும் இலவச அனுமதியினை வணிக நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
- மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகி யதில் கர்ப்பமானார். இது பெற்றோருக்கு தெரிய வந்ததால், வாழப்பாடி யிலுள்ள மருத்துவர் செல்வம்பாள் மருத்துவ மனைக்கு வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, மருத்துவர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெய செல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவ லர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், மருத்துவர் செல்வாம்பா ளிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, திருமண மாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
இவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் செல்வாம்பாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட மருத்துவர் செல்வாம்பாள், நேற்றிரவு வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனை யிலேயே மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக இவர் அரசு மருத்துமனையில் அனும திக்கப்பட்டுள்ளதால், போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வாழப்பாடியில் சிறுமி உயிரிழந்த வழக்கு விசாரணை:
மயங்கி விழுந்த பெண் மருத்துவர் மருத்துமனையில் அனுமதி
- நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமல் எடுக்க அனுமதி.
- 2 ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
அரசாணைப்படி மாவட்டத்தில் 260 ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதன்படி தஞ்சை தாலுகாவில் 2 ஏரி, குளங்கள், ஒரத்தநாடு தாலுகாவில் 35, பூதலூரில் 2, பட்டுக்கோட்டையில் 160, பேராவூரணி தாலுகாவில் 61 ஏரி குளங்கள் என மொத்தம் 260 ஏரி, குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்கலாம்.
எனவே தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச்செல்ல கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சம்மந்த ப்பட்ட வட்டாட்சியர்களது பரிந்துரையின்படி கலெக்டரால் (என்னால்) அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலம் வண்டல் மண், களிமண் எடுக்க, விண்ணப்பிக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ள அல்லது
அதனைச் சுற்றியுள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும். விவசாயப் பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமலும் மற்றும் புன்செய் நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
பொதுமக்களின் சொந்த பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் தங்களது சொந்த உபயோகத்திற்கு வண்டல் மண் , களிமண் போன்றவை தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பித்து என்னிடம் அனுமதி பெற்று வண்டல் மண்,களிமண் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒற்றைசாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?என கலெக்டர் விளக்கம் அளித்தார்.
- ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் டி.ஏ.எம்.இ.-டி.என். இணைந்து ஒற்றை சாளர முறையில் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணைய தளம் குறித்தும், வழிமுறைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப் படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை களுக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும் ஒற்றை சாளர முறையின் மூலம் எந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விதமான விபரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி மைய நிர்வாகி சார்லஸ் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழடி அருங்காட்சியகத்தை வார இறுதி நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை முதன்மை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். தற்போது 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் நடைபெறுகிறது.
கீழடி அருங்காட்சியகத்தை தமிழக அரசின் முதன்மை செயலர் (சிறப்பு ெசயலாக்க திட்டம்) உதயசந்திரன் பார்வையிட்டார். இங்கு கூடுதலாக மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் ஆய்வு செய்தார். பின்னர் உதயசந்திரன் கூறியதாவது:-
அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அவற்றை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ18.42கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வசதி களை மேம்படுத்தும் வகையில் அரசின் அறிவுரையின்படி துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்களின் வசதிக்காக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வலைத்தளம் வழியாக பணம் செலுத்தும் முறை, சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்ப தற்கென பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள பொருட்களில் மாதிரி வடிவ பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவுவதற்கும், அருங்காட்சியத்தில் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்தும் வழித்தடங்களை பொதுமக்கள் எளிதில்அ றிந்துகொள்ளும் வகையில் நிறுவுவதற்கும், கூடுதலாக காற்றோட்ட வசதி களை ஏற்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று குறிப்புகளை தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கென துறைசார்ந்து கூடுதலாக வழிகாட்டிகளை நியமிப்பதற்கும், இதற்கென தொல்லியல் துறையில் ஆர்வத்தின் அடிப்படையில் இந்த பகுதிகளை சேர்ந்தவர்களை வழிகாட்டிகளாக நியமனம் செய்து அதற்கென முறையான பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் தற்போதுள்ள நேரத்தை கூடுதலாக ஒரு மணிநேரம் மாலை வேளையில் அதிகரிக்கவும், பொதுமக்களின் வருகையை பொறுத்து குறும்படங்களை தொடர்ந்து திரையிடவும், கூடுதல் கழிவறைகளை ஏற்படுத்தம், அருங்காட்சியகத்தினுள்ள ஒவ்வொரு பிரிவிலும் அவைகள் சார்ந்த புத்தகங்களை நிறுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவி குழுக்களின் சார்பில் இயங்கிவரும் சிற்றுண்டி உணவ கத்தின் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கவும், அதற்கான விலை பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிபடுத்துவது என இதுபோன்று பல்வேறு கூடுதல் வசதிகளை மேம்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அந்த லாரிகளில் அனுமதி சீட்டில் இருந்ததை விட கூடுதலாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
- உரிமையாளர்கள்-டிரைவர்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் போலீஸ் சரகம் சென்னிதோட்டம் பாலம் பகுதியில், சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிய 2 லாரிகள் வந்தன. அந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரிகளில் அனுமதி சீட்டில் இருந்ததை விட கூடுதலாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதுபற்றி லாரி டிரைவர்கள் கீழ் மாங்கோடு சிவபிரசாத், விளவங்கோடு பிரபு ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அதிக லாபத்திற்காக கூடுதல் பாரம் ஏற்றி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளின் உரிமையாளர்கள் சுபா, மனோஜ், டிரைவர்கள் சிவபிரசாத், பிரபு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- மதுைர மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- மண்டலத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மிசா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.